தவெக ஆட்சிக்கு வந்த உடனே முக்கிய திமுக மாஜி அமைச்சர்களை குறி வைத்தார் முதல்வர் விஜய், அதாவது கடந்த அதிமுக – திமுக ஆட்சி காலத்தில் மாற்றி மாற்றி ஊழல் செய்தாலும், இரண்டு திராவிட கட்சிகளுக்குள் இருந்த திரைமறைவு தொடர்பின் காரணமாக, அதிமுக ஆட்சியில் திமுக மாஜி அமைச்சர்கள் மீது நடவடிக்கை இல்லை, திமுக ஆட்சியில் அதிமுக மாஜி அமைச்சர்கள் மீது நடவடிக்கை இல்லை என்பது போன்று இல்லாமல், தவறு செய்த எந்த திமுக முன்னாள் அமைச்சரும் தப்பிக்க கூடாது என்பதில் சமரசமே இல்லாமல் உறுதியாக இருந்து வருகிறார் முதல்வர் விஜய்.
அந்த வகையில் முதலில் முதல்வர் விஜய் கைக்கு சென்ற திமுக மாஜி அமைச்சர்களின் பட்டியலில், செந்தில் பாலாஜி, ஏ வ வேலு, சேகர் பாபு, அனிதா ராதாகிருஷ்னண், கே என் நேரு போன்ற முன்னாள் திமுக அமைச்சர்கள் முதல்வர் விஜய் கைவசம் இருக்கும் பட்டியலில் முன்னணியில் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் விஜய் கரூர் பிரச்சாரத்தில் நடந்த சம்பவத்திற்கு பதிலடியாக செந்திபாலாஜி ஊழல் அனைத்தும் தவெக அரசு தோண்டி எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில் சமீபத்தில் ஏ வே வேலுவுக்கு சொந்தமான இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனையை மேற்கொண்டது, இது தொடர்பாக FIR பதிவு செய்யப்பட்டுள்ளதால், விரைவில் அமலாக்கத்துறை ஏ வ வேலுவை குறிவைத்து களம் இறங்கும் என்றும், இனி ஏ வ வேலு அவருடைய அரசியலில் கவனம் செலுத்துவதை விட, இந்த வழக்குகளில் இருந்து எப்படி தப்பிப்பது என்பதிலே அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கும்.
அந்த வகையில், இனி ஏ வ வேலு இனி அரசியலில் தீவிரமாக செயல்படாமல் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை நடத்திய சோதனையில் முடங்கவே அதிக வாய்ப்புள்ளது. இந்நிலையில் ஏ வ வேலுவுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துரையின் அதிரடி சோதனையை தொடர்ந்து முன்னாள் திமுக அமைச்சர் சேகர்பாபுவை குறிவைத்து தமிழக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்த ஆயத்தமாக இருந்திருக்கிறது.
குறிப்பிட்ட ஒரு தேதியை குறித்து, அந்த தேதியில் முன்னாள் திமுக அமைச்சர் சேகர் பாபுவுக்கு சொந்தமான இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை நடந்த இருந்த சோதனை குறித்த தகவல் எப்படியோ சேகர் பாபு கவனத்துக்கு சென்று இருக்கிறது. உடனே முக்கிய ஆவணங்களை வேறு ஒரு இடத்திற்கு அவசர அவசரமாக சேகர் பாபு மாற்றி விட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் விவகாரம் முதல்வர் விஜய் கவனத்துக்கு சென்று இருக்கிறது.
லஞ்ச ஒழிப்பு துறை சோதனை மேற்கொள்ள வந்தால், தன்னுடைய தொலைபேசியை கைப்பற்றி சோதனை செய்ய கூடும் என, தொலைபேசியில் இருந்த முக்கிய ஆதாரங்களை நீக்கி விட்டார் சேகர் பாபு என்கிற தகவலும் முதல்வர் அலுவலகம் மூலமாக முதல்வர் விஜய்க்கு கவனத்துக்கு சென்று இருக்கிறது. உடனே யார் சேகர் பாபுவுக்கு லஞ்ச ஒழிப்பு துறை சோதனை மேற்கொள்ள இருக்கும் தகவலை கொடுத்தது என விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கிறாராம் முதல்வர் விஜய்.
மேலும் தமிழா லஞ்ச ஒழிப்பு துறை சோதனை மேற்கொண்டால், முக்கிய ஆவணங்கள் கைப்பற்ற பட்டது என்று செய்திகள் வர வேண்டும், வெறும் கையோடு சோதனையை முடித்துவிட்டு திரும்பினார்கள் என்றால், திமுக மாஜி அமைச்சர் சேகர் பாபு புனிதராக காட்டி கொள்வார், தவெக அரசின் பழிவாங்கல் முயற்சி தோல்வி என்று திமுக தரப்பு பிரச்சாரத்தை முன்னெடுக்கும் என குறிப்பிட்ட தேதியில் சேகர்பாபுவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்ய இருந்தது கைவிடப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் தற்காலிகமாக தான் சேகர் பாபுவுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற இருந்த சோதனை நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது என்றும், அடுத்து தகவல் கசியாமல் முக்கிய பைல் கள் மாற்றப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு இடங்கள் கண்டறியப்பட்டு எந்த நேரத்தில் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தலாம் என்கிற பரபபரப்பு நீடித்து வருகிறது குறிப்பிடதக்கது.

