சினிமா ரசிகர்கள் மத்தியில் தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு தகவல், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்துதான். குறிப்பாக, இவர்களது திருமணம் எப்போது நடைபெறுகிறது? எங்கு நடைபெறுகிறது? என்ற தகவல்கள் தற்போது திரைத்துறை வட்டாரங்களில் பரவி வருவது, சமூக வலைதளங்களிலும் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியிருக்கிறது.
சன் நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளருமான காவ்யா மாறனுக்கும், இந்திய அளவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத்துக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக, இந்த ஆண்டின் இறுதியில் இவர்களது திருமணம் நடைபெற இருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் சமீப நாட்களில் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.

மேலும், நவம்பர் 10ஆம் தேதி இவர்களது திருமணம் நடைபெறலாம் என்றும் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. முதலில் இவர்களது திருமணம் சீஷெல்ஸ் தீவுகளில் நடைபெறலாம் என்று தகவல்கள் பேசப்பட்ட நிலையில், தற்போது அந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், கிரீஸ் நாட்டில் பிரம்மாண்டமான Destination Wedding நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கிரீஸ் என்றாலே அழகான கடற்கரை, பிரம்மாண்டமான இயற்கை காட்சிகள் என திருமண நிகழ்வுகளுக்கு மிகவும் பிரபலமான இடம். அந்த வகையில், அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணமும் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.
ஆனால், இந்த திருமணம் பெரிய அளவில் பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் கலந்து கொள்ளும் நிகழ்வாக இருக்காது என்றும், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் தனிப்பட்ட திருமண நிகழ்வாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருமணத்திற்குப் பிறகு இருவரும் சில வெளிநாடுகளுக்குச் சென்று நேரத்தை செலவிட திட்டமிட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
இந்த நிலையில், திருமணம் குறித்த தகவல்கள் பரவி வரும் சூழலில், கைவசம் இருக்கும் முக்கியமான திரைப்படங்களின் பணிகளை திருமணத்திற்கு முன்பாகவே கணிசமாக முடிக்க அனிருத் திட்டமிட்டு வருவதாகவும் திரைத்துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அதேபோல், சன் குழுமம் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மூலமாக ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான முகமாக இருக்கும் காவ்யா மாறன் தொடர்பான இந்த திருமண தகவல் வெளியானதும், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு எதிர்வினைகள் வெளியாகி வருகின்றன.
ஆனால் அனிருத் மற்றும் காவ்யா மாறன் இருவரின் திருமணம் குறித்த இந்த தகவலுக்கு இதுவரை அனிருத் தரப்பிலிருந்தோ அல்லது காவ்யா மாறன் குடும்பத்தினர் தரப்பிலிருந்தோ எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதனால், நவம்பர் 10ஆம் தேதி திருமணம், கிரீஸில் Destination Wedding உள்ளிட்ட தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் அனைத்தும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களாகவே இருக்கின்றன.இரு தரப்பிலிருந்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை, இதை உறுதி செய்யப்பட்ட செய்தியாக எடுத்துக்கொள்ள முடியாது.M

