திரிஷா அம்மாவுக்கு 70 வயசு… இளமையின் ரகசியம்… இந்த உணவு தான் காரணமாம்…

0
Follow on Google News

முதல்வர் விஜய் முதல் முறையாக தேசியக் கொடியை ஏற்றிய நிகழ்வில், நடிகை திரிஷா தனது அம்மாவுடன் முதல் வரிசையில் அமர்ந்திருந்த காட்சிகள் தற்போது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றன. அதிலும் குறிப்பாக, அந்த நிகழ்வில் திரிஷா அணிந்திருந்த மஞ்சள் நிற பட்டுப்புடவைதான் பலருடைய கவனத்தையும் ஈர்த்திருந்தது.

ரொம்பவும் எளிமையான அதே நேரத்தில் அழகான தோற்றத்தில் திரிஷா அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.ஆனால், திரிஷாவை விட அவருடைய அருகில் அமர்ந்திருந்த அம்மா உமா கிருஷ்ணனை பார்த்துதான் பலரும் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். காரணம்… 70 வயதிலும் உமா கிருஷ்ணன் பார்ப்பதற்கு மிகவும் இளமையாக இருக்கிறார் என்பதுதான்!

சமீபத்தில் உமா கிருஷ்ணனுக்கு 70வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அந்த பிறந்தநாள் புகைப்படங்களையும் திரிஷா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படங்கள் வெளியானபோது, “இவருக்கு 70 வயதா?” என்று ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு மிகவும் இளமையான தோற்றத்தில் இருந்திருக்கிறார் உமா கிருஷ்ணன்.“மகளை விட அம்மாதான் இளமையாக இருக்கிறாரே!” என்று கூட சில ரசிகர்கள் கமெண்ட் செய்திருந்தனர்.

உண்மையில் 70 வயதிலும் இவ்வளவு இளமையாகவும் ஆக்டிவாகவும் இருப்பது எப்படி என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கிறது.அதற்கு முக்கியமான காரணம், உமா கிருஷ்ணன் தன்னுடைய உடல்நலத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வதுதான் என்று கூறப்படுகிறது.தினசரி உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, யோகா என்று தன்னுடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக அவர் ஏற்கனவே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இதனால்தான் 70 வயதிலும் இவ்வளவு இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறார் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அதிலும் ஒரு ரசிகர் போட்ட கமெண்ட் வேற லெவல்!“நாங்கள் பார்க்கும் சில பெண்கள் 20 வயதிலேயே கால் வலிக்குது, கை வலிக்குது என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர் 70 வயதிலும் இவ்வளவு ஆக்டிவாக இருக்கிறாரே!” என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்திருக்கிறார்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் கதாநாயகியாக வெற்றிகரமாக பயணித்து வரும் திரிஷாவுக்கு தற்போது 43 வயது.ஆனால் இன்றைக்கும் இளமை குறையாத தோற்றத்துடன் கதாநாயகியாக தொடர்ந்து நடித்து வருகிறார்.அதனால் திரிஷாவின் அழகுக்கும், இளமையான தோற்றத்துக்கும் அவருடைய அம்மா உமா கிருஷ்ணனின் மரபணுக்களும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்றும் சில ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

அதே நேரத்தில், “நாட்டில் எவ்வளவோ முக்கியமான பிரச்சனைகள் இருக்கிறது… உங்களுக்கு இதெல்லாம் தேவையா பாஸ்?” என்று கேட்கும் அளவுக்கு நெட்டிசன்கள் இந்த விஷயத்தையும் விட்டுவைக்காமல் கலாய்த்து வருகின்றனர்.ஆனால், ஒரு விஷயம் மட்டும் உண்மை…திரிஷாவின் அம்மாவை பார்த்த பலரும், “இவர் திரிஷாவின் அம்மாவா? இல்லை அவருடைய அக்காவா?” என்று கேட்கும் அளவுக்கு ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள்.

குறிப்பாக 70 வயதிலும் உடற்பயிற்சி, யோகா, உணவு கட்டுப்பாடு என்று ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றி வருவது பலருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷனாகவே இருக்கிறது.இதனால்தான் இப்போது திரிஷாவின் அழகை மட்டும் பாராட்டாமல், அவருடைய அம்மா உமா கிருஷ்ணனின் இளமைத் தோற்றத்தையும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

மொத்தத்தில், “திரிஷாவுக்கு அழகு எங்கிருந்து வந்தது என்று இப்போது தெரிகிறதா?” என்ற ரேஞ்சுக்கு, திரிஷாவின் அம்மாவின் புகைப்படங்கள் ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here