கொளத்தூர் தமிழக வெற்றி கழக சட்டமன்ற உறுப்பினர் வி எஸ் பாபு மறைந்ததை தொடர்ந்து , சட்டசபையில் தவெக வுக்கு இருந்த சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 109ல் இருந்து 108 ஆக குறைந்து இருக்கிறது, இதனை தொடர்ந்து தமிழகத்தில் காலியாக இருக்கும் சட்டமன்ற தொகுதி 6 ஆக உயர்ந்து இருக்கிறது. குறிப்பாக மறைந்த வி எஸ் பாபு மீது முதல்வர் விஜய்க்கு தனியாக ஒரு மரியாதை இருந்து இருக்கிறது.
இதற்கு முக்கிய காரணம் , வி எஸ் பாபுவின் அரசியல் அனுபவம் மட்டுமின்றி, கடந்த 2026 சட்டசபை தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் யாரை போட்டியிட செய்யலாம் என தவெக தலைமை ஆலோசித்து கொண்டிருக்கையில், மறைந்த வி எஸ் பாபு நேரடியாக முதல்வர் விஜய்யை சந்தித்து, தலைவரே , நான் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறேன், எனக்கு வாய்ப்பு கொடுங்க என கேட்டவர்,

மேலும் தலைவரே , கொளத்தூர் தொகுதியில் முக ஸ்டாலினை வீழ்த்துகிறோம், எனக்கு தெரியும் எப்படி வீழ்த்த வேண்டும் என , தைரியமாக என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு சீட் கொடுங்க என வி எஸ் பாபு , அப்போது விஜய்யிடம் சீட் கேட்க, உடனே கொளத்தூர் தொகுதியில் வி எஸ் பாபுவை டிக் செய்து இருக்கிறார் முதல்வர் விஜய், அதே போன்று விஜய்க்கு கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றி இருக்கிறார் வி எஸ் பாபு.
அதாவது முக ஸ்டாலினை வீழ்த்தி காண்பிக்கிறேன் என வி எஸ் பாபு சொன்னதை செய்து காட்டி இருக்கிறார், இதன் பின்பு தான் முதல்வர் விஜய்க்கு வி எஸ் பாபு மீது தனி மரியாதை கூடியிருக்கிறது, மேலும் சென்னை அரசியலில் வி எஸ் பாபுவிடம் ஆலோசனை கேட்டு செயல்படுங்கள் என , அங்கிருக்கும் மூத்த கட்சி நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களிடம் முதல்வர் விஜய் தெறித்து இருக்கிறார் .
மேலும் வி எஸ் பாபு தவெக ஆட்சி அமைந்ததும் அமைச்சரவையில் இடம் பெறுவார் என எதிர்ப்பார்க்க பட்ட நிலையில், முக ஸ்டாலின் சொந்த தொகுதியிலே தோல்வி அடைந்து விரக்தியில் இருக்கிறார், அவரை வீழ்த்திய உங்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தால், மேலும் அவருக்கு சோகத்தை கொடுக்கும் என்பதால், அடுத்த அமைச்சரவையில் உங்களுக்கு இடம் இருக்கு கொஞ்சம் நாள் வெயிட் பண்ணுக என முதல்வர் விஜய் வி எஸ் பாபுவிடம் தெறிவித்து இருக்கிறார்.
இந்நிலையில் தற்பொழுது கொளத்தூர் தொகுதியில் நடக்க இருக்கும் இடைதேர்தலில் தவெக சார்பில் யார் போட்டியிடுவார் என்கிற பரபரப்புக்கு மத்தியில், வி எஸ் பாபு குடும்பத்தினர் ஒருவருக்கே வாய்ப்பு கொடுக்க வேண்டும் , அது தான் நாம் வி எஸ் பாபு குடும்பத்திற்கு செய்யும் நன்றி கடன் என்பதில் முதல்வர் விஜய் உறுதியாக இருப்பதால் வி எஸ் பாபு மகன் வி எஸ் ப சதீஸ் குமார் தவெக சார்பில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது,
இந்நிலையில் வி எஸ் பாபு மரணம் தொடர்பாக தவெக சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், 7 நாள் துக்கம் முடிந்த பின்பு கொளத்தூர் சட்டமன்ற இடைதேர்தல் குறித்து முடிவு செய்யலாம் என்றும், குறிப்பாக 7 நாட்கள் தூக்கம் முடிந்த பின்பு, கொளத்தூர் தொகுதியில் வி எஸ் பாபு புகைப்படம் திறப்பு நிகழ்வை தவெக சார்பில் நடந்து இருப்பதாகவும்.
இந்நிகழ்வில் முதல்வர் விஜய் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது, இதனை தொடர்ந்து வி எஸ் பாபு மகன் சதீஸ் குமாரை முன்னிறுத்தி அடுத்து கொளத்தூர் தொகுதி இடைதேர்தலுக்கான தேர்தல் பணியை தவெக தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், வி எஸ் பாபு மகன் கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற செய்வது தான் நாம் வி எஸ் பாபுவுக்கு செய்யும் மரியாதை என முதல்வர் விஜய் நெருக்கமான வட்டாரங்களில் பேசி இருக்கிறாராம்.

