திமுக தலைமை மீது கடும் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்னன் , தற்பொழுது திமுகவில் இருந்து விலகி மாற்று திசைக்கு செல்ல இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் ஒட்டு மொத்த திமுக தலைமையையும் ஆட்டம் காண வைத்து இருக்கிறது, குறிப்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் செய்த சமாதான முயற்சியும் தோல்வியை தழுவி இருக்கிறது.
ஏழு முறை திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு ஒரு முறை கூட தோல்வியை தழுவாமல், வெற்றியை மட்டுமே ருசித்து சுமார் 26 வருடங்களாக, அதாவது சுமார் கால் நூற்றான்டுகளாக திருச்செந்தூர் தொகுதியின் முடி சூடா மன்னனனாக இருந்து வருகிறார் அனிதா ராதாகிருஷ்னன், அதிமுக இருந்த போதும், திமுகவில் இருந்த போதும், அதிமுக – திமுக இரண்டு கட்சிகளும் தோல்வியை பெற்று ஆட்சியை பிடிக்க முடியவில்லை என்றாலும் கூட திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்னன் வெற்றி பெற்று விடுவார்.

அந்த அளவுக்கு திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு என தனி செல்வாக்கு உண்டு. 2001 மற்றும் 2006 ஆகிய தேர்தலில் அதிமுகவின் திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த அனிதா ராதாகிருஷ்னன், 2009ம் ஆண்டு அப்போதைய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவால் கட்சியில் நீக்க படுகிறார், இதனை தொடர்ந்து தன்னுடைய எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தார்.
அடுத்து நடந்த இடைத்தேர்தல் தொடங்கி தொடர்ந்து திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் வாய்ப்பு கொடுக்கப்பட்டு வெற்றி பெற்று வந்த திமுக மாவட்ட செயலாளரான அனிதா ராதாகிருஷ்னுக்கு சமீப காலமாக திமுகவில் முக்கியதுவம் கிடைக்கவில்லை என்கிற அதிருப்தி இருந்து வருகிறது. குறிப்பாக கனிமொழி எம்பி தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்பு, மொத்த தூத்துக்குடி திமுக அரசியலையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டார்.
இதில் முன்னாள் திமுக அமைச்சர் கீதா ஜீவன் உடன் இணைந்து அனிதா ராதாகிருஷணனை தூத்துக்குடி திமுகவில் இருந்து ஓரம் காட்டுகிறார் கனிமொழி என கூறப்படுகிறது, இந்நிலையில் தற்பொழுது தவெக தரப்பில் இருந்து அனிதா ராதா கிருஷ்ணனுக்கு அழைப்பு வந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து திமுக தலைமைக்கு கடும் நெருக்கடி கொடுக்க தொடங்கி இருக்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்.
தனக்கு மாநில அளவில் முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும், இல்லை என்றால் சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும் என திமுக தலைமைக்கு தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவித்து இருக்கிறாராம் அனிதா ராதாகிருஷ்ணன், ஆனால் அனிதா ராதாகிருஷ்ணன் மாநில அளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டால், தூத்துக்குடி மாவட்டத்தில் தனக்காக முக்கியத்துவம் குறைந்து விடும் என கனிமொழி தடையாக இருக்கிறாராம்.
இதற்கு இடையில் திமுக தலைமை அனிதா ராதாகிருஷணனை சமரசம் செய்ய முயன்றும் , அந்த முயற்சி தோல்வியை தழுவி இருக்கிறது, இந்நிலையில் முன்னாள் திமுக அமைச்சர் கே என் நேரு திருமண நிகழ்வில் கூட கலந்து கொள்ளாமல் தவிர்த்து வரும் அனிதா ராதா கிருஷ்னன் விரைவில் சில முக்கிய முடிவுகளை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் அனிதா ராதாகிருஷ்னன் தவெக வில் இணைய இருக்கிறார் என்கிற தகவல் ஒரு பக்கம் வெளியாகி கொண்டிருக்க மறுப்பக்கம், தீவிர அரசியலில் இருந்து அவரை அவர் குடும்பத்தினர் விலகி ஓய்வு எடுக்க வலியுறுத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது, இருந்தும் தவெக தரப்பில் தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

