தவெக ஆட்சியை கலைக்க சதி… ஸ்டாலின் போட்ட திட்டம்… தவிடுபொடியாக்கிய விஜய்…

0
Follow on Google News

தவெக ஆட்சியை கலைக்க திமுக போட்ட திட்டத்தை தவிடுபொடியாக்கி இருக்கிறார் விஜய். இதன் மூலம் சுமார் 70 வருட பாரம்பரிய கட்சி, நாங்கள் அரசியலில் அதி புத்தி சாலி, எப்படி விஜய் ஆட்சியை கலைக்கிறோம் என கூச்சலிட்டு கொண்டிருந்த திமுகவினருக்கு, நீங்கள் படித்த ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா என்கிற சினிமாவில் வரும் பஞ்ச் வசனம் போன்று செயல் முறையில் காட்டி இருக்கிறார் முதல்வர் விஜய்.

கடந்த மே மாதம் முதல்வராக பதவி ஏற்ற விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு எதிராக நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்து ஆட்சியை களைத்து விட வேண்டும் என கடந்த 6 மாதங்களாக மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது திமுக தரப்பு, அதில் அவர்கள் போட்ட திட்டம், முதலில் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் குறைந்தது 20 நபர்களை விலை கொடுத்து வாங்கி விட வேண்டும்.

நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது, விஜய் ஆட்சிக்கு எதிராக அவர்களை வாக்களிக்க வைத்து இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும், அடுத்து தவெக அரசுக்கு ஆதரவு அளித்து வரும் கூட்டணி கட்சிகளை வாபஸ் வாங்க வைப்பது, மூன்றாவது இதற்கு தமக்கு துணையாக இருக்க மத்திய பாஜக அரசின் உதவியை நாடுவது, அவர்களுக்கு பதிலுக்கு, நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் தொகுதி மறுசீரமைப்பு மஸோதாவுக்கு ஆதரவாக இருப்போம் என உறுதி அளிப்பது.

இப்படி 3 திட்டத்துடன் தவெக அரசை கவிழ்க்க திமுக வியூகம் அமைத்து வேலை செய்ததில், ஒரு தவெக சட்டமன்ற உறுப்பினர்களை கூட திமுகவால் விலைக்கு வாங்க முடியவில்லை, மேலும் திமுக எம் எல் ஏ க்களிடம் பேரம் பேசினாலே, அவர்கள் புகார் கொடுத்து , அது திமுகவுக்கு மேலும் சிக்கலை கொடுத்து விடுகிறது, அந்த வகையில் முதல் திட்டமான தவெக எம் எல் ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சி கைவிடப்பட்டது.

அடுத்து கூட்டணி கட்சிகளை தவெக அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் வாங்க செய்வது என்கிற திமுகவின் திட்டம் ஓரளவு கைகொடுத்து வந்தது, குறிப்பாக இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தவெக அரசுக்கு எதிராக போராட்டம் ஆர்ப்பாட்டம் என்கிற ரேஞ்சுக்கு சென்று விட்டார்கள், அந்த வகையில் கம்யூனிட்ஸ் கட்சிகள், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் தவெக அரசுக்கு எதிராக தான் வாக்களிப்பார்கள் என்று கூறப்பட்டது.

ஆனால் சமீபத்தில் டெல்லி சென்ற முதல்வர் விஜய் உடன் அமைச்சர் ஆதவா அர்ஜுனா ஆகியோர் உடன் சென்று இருந்தார், இதற்கு இடையில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய அளவில் இருக்கும் தலைவர்களை சந்தித்து பேசி இருக்கிறார் அமைச்சர் ஆதவா அர்ஜுனா, அப்போது, திமுக – பாஜக கள்ள கூட்டணி குறித்து பேசப்பட்டு இருக்கிறது, அந்த வகையில் நாங்கள் எப்போது பாஜகவுக்கு எதிராக இருப்போம் என ஆதவா அர்ஜுனா கம்யூனிஸ்ட் தலைவரிடம் உறுதி அளித்து இருக்கிறார்.

இப்படியான சூழலில் தேசிய அளவில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், தமிழகத்தில் ஆளும் தவெக அரசுக்கும் தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என உறுதி அளித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது, இந்நிலையில் தற்பொழுது தவெக அரசை கவிழ்க்க திமுக போட்ட அத்துணை திட்டமும் முதல்வர் விஜய்யால் தவிடு பொடியாக்க பட்டிருக்கிறது.

இப்படியான சூழலில், மத்திய பாஜக துணையுடன் ஆளும் தவெக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் முடிவுக்கு வந்திருக்கும் திமுக தரப்பு, இந்த தவெக அரசு நீடிக்கவே கூடாது , அதற்காக எந்த எல்லைக்கு செல்ல தற்பொழுது திமுக தயாராக இருப்பதாகவும், ஏன் தவெக ஆட்சியை கவிழ்த்தால், வரும் 2029 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைக்க கூட தயார் என்கிற நிலைக்கு திமுக வந்தாலும் ஆச்சரியப்பட இல்லை என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here