தமிழக முதல்வர் விஜய் மற்றும் பிரதமர் மோடி இருவருக்கும் இடையில் திமுகவுக்கு எதிராக எடுக்கும் ஊழல் நடவடிக்கைள் ஒரு இணக்கமான நட்பை உருவாக்கி இருக்கிறது என்கிறது டெல்லி வட்டாரங்கள், முதல்வர் விஜய் ஆட்சி அமைத்ததும் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசிய போது, திமுகவுக்கு எதிரான ஊழல் வழக்கு தொடர்பான நடவடிக்கைகளில் எனது அரசாங்கம் சமரசம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கும், அதற்கு உங்கள் முழு ஒத்துழைப்பு வேண்டும் என விஜய் தெரிவித்து இருக்கிறார்.
அதற்கு பதில் பேசிய பிரதமர் மோடி, நிச்சயமாக உங்களுக்கு துணை நிற்போம் என உறுதியளித்து இருக்கிறார், இதன் பின்பே திமுகவுக்கு எதிரான வேட்டையை தொடங்கி இருக்கிறார் முதல்வர் விஜய், முதல்வராக பொறுப்பேற்ற உடனே முக ஸ்டாலினை நேரில் சந்தித்து விஜய் வாழ்த்து பெற்றதும், ஆக தம்பி இறங்கி வருகிறார், நம் மீது இருக்கும் ஊழல் புகார்களை கண்டுக்க மாட்டார் என கனவு கண்ட திமுக முதல் குடும்பத்துக்கு இடியை இறக்கும் வகையில் அடுத்தடுத்து அமைத்தது முதல்வர் விஜய்யின் நடவடிக்கை.

இந்நிலையில் முதல்வர் விஜயின் டார்கெட் வால் இல்லை தலை தான் என்கிறது விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்கள், அதாவது திமுகவில் ஊழல்களுக்கு ஏஜெண்டாக எடுபுடி வேலை செய்தவர்கள் குறி இல்லை, திமுகவின் முதல் குடும்பம், மற்றும் ஊழல் முதலைகளான முன்னாள் திமுக அமைச்சர்கள் தான் விஜய்யின் டார்கெட் என்கிறார்கள் விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்கள்.
அதனால் தான் அன்பில் மகேஷ் சிறையில் உள்ளார், அடுத்து கே என் நேருவை கைது செய்ய ஆயத்தமாகி வருகிறது தவெக அரசு, இதனை தொடர்ந்து வரும் பொங்கல் பண்டிகைக்குள் உதயநிதி ஸ்டாலினை கைது செய்வதற்கான வேலைகளை தீவிர படுத்தி இருக்கிறார் முதல்வர் விஜய். கடந்த திமுக ஆட்சியில் நடந்த மெகா ஊழல்களில் முதன்மையான ஊழல் டாஸ்மாக் ஊழல், அந்த ஊழலில் மூளையாக செயல்பட்டு ரத்தீஷ் தலைமறைவாகி வெளிநாடுகளில் உள்ளார்.
ரத்தீஷை கைது செய்து விசாரணை நடத்தினால், அவர் கொடுக்கும் வாக்குமூலம் உதயநிதி ஸ்டாலினை எளிதாக கைது செய்து விடலாம் என்பது தான் முதல்வர் விஜய் திட்டம், அந்த வகையில் துபாயில் தலைமறைவாக இருக்கும் ரத்தீஷ் எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கபட்டு இருக்கிறது. மேலும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்க கூடிய சிபிஐ துணை உடன் துபாயில் தலைமறைவாக இருக்கும் ரத்தீஷை கைது செய்ய இன்டெர் போல் போலீசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் விரைவில் ரத்தீஷ் கைது செய்யப்பட்டு தமிழக போலீசாரிடம் ஒப்படைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், தமிழக போலீசார் ரத்திஸிடம் நடந்தப்படும் விசாரணைக்கு பின்பு உதயநிதிக்கு சம்மன் அனுப்படலாம், அல்லது அதற்கு முன்பு உதயநிதி சொந்தமான இடங்களில் அதிரடி சோதனையை மத்திய குற்றவியல் போலீசார், அல்லது லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்தி, சோதனை முடிவின் போதே உதயநிதியை கைது செய்ய கூட வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு எடுத்து வரும் இந்த நடவடிக்கைக்கு பிரதமர் மோடி தரப்பில் இருந்து முழு ஆதரவு கொடுக்கப்பட்டு வரும் நிலையில், திமுக தரப்பில் உதயநிதியை காப்பாற்ற மத்திய பாஜக அரசின் உதவியை நாடி வருகிறது திமுக. இது குறித்து டெல்லி வட்டாரங்களில் விசாரித்ததில், தமிழக முதல்வர் விஜய் மற்றும் பிரதமர் மோடி இருவரும், மங்காத்தா படத்தில் அர்ஜுன் – அஜித் போன்று,
திமுகவுக்கு எதிராக மங்காத்தா விளையாட்டு விளையாடி வருகிறார்கள், டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பொங்கலுக்கு கைது செய்வதற்கான முதல்வர் விஜய்யின் முயற்சிக்கு எந்த வகையில் பிரதமர் மோடி தடையாக இருக்க மாட்டார், உதவியாக தான் இருப்பார் என்கிறது டெல்லி வட்டாரங்கள்.

