திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரத்தில் மலை உச்சியில் இருக்கும் கார்த்திகை தீப தூண் , அது நில அளவை கல் குறிப்பிட்டு வரும் ஒரு தரப்பினர், அது நில அளவை கல் தான் என நிரூபிக்க பல வகையில் முயற்சி செய்து வருவதும், அதற்கு தகுந்த பதிலடி கொடுத்து இது கார்த்திகை தீப தூண் தான் பல ஆதாரங்களை அடுக்கி கொண்டிருக்கிறார்கள் திருப்பரங்குன்றம் மலை குறித்த வரலாற்றை நன்கு அறிந்தவர்கள்
இந்நிலையில் இது நில அளவை கல் இல்லை கார்த்திகை தீப தூண் தான் என்பதற்கு பல ஆதாரங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது, தற்பொழுது வெளியாகி இருக்கும் மலை உச்சியில் இருக்கும் கார்த்திகை தீப தூண் புகைப்படம் பலரிடம் இருக்க வாய்ப்பில்லை, ஆனால் கடந்த ஆண்டு இது தொடர்பான புகைப்படம் வெளியானது.அது தீபத் தூணின் உச்சி பகுதி.

இது குறித்து அவர் கொடுத்த விளக்கத்தில் இது அளவைக் கல் என்று சொல்வோர் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், நாம் அனைவரும் நினைப்பது போல இது ஒற்றைக் கல்லினால் ஆன தூண் இல்லை. INTER LOCK தொழில் நுட்பத்தில் அந்தக் காலத்திலேயே உருவாக்கப் பட்ட தூணாக இருக்கிறது. அதாவது தற்போது உள்ளதீப தூண் சப்பட்டையாக உள்ள காரணத்தினால், மலை உச்சியில் இருக்கும் இந்த தூணில் எப்படி தீபம் ஏற்றுவார்கள் என்று ஏளனம் செய்கிறார்கள்.
ஆனால் இந்த தூணில் உச்சிக்கு மேலே ஒரு கொப்பறையை வைத்து தீபம் ஏற்றப்பட்டிருக்கிறது. அந்தக் கொப்பறையை இந்தப் பகுதியில் இணைக்கும் போது உச்சியில் லாக் ஆகி நிற்கும் வகையிலான அமைப்பு தான் இந்த கல்லின் வடிவம். பிற்காலத்தில் அது அகற்றப் பட்டிருக்க வேண்டும். அதன் எச்சம் தான் தற்போதைய மிச்சத் தூண் என்கிறார்கள் திருப்பரங்குன்றம் மலை குறித்து நன்கு அறிந்தவர்கள்.
நில அளவை கல் என்றால் கோவில் தூண்களில் இருப்பது போன்று சிற்ப வேலைப்பாடுகள் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. சிதிலம் அடைந்த இந்தத் தூணில் சிற்ப வேலைப்பாடுகள் இருப்பது காண முடிகிறது. மேலும் மிக முக்கியமான ஆதாரமாக இது அளவைக் கல் என்போர் முன் வைக்கும் ஆதாரம் என்னவெனில், GTS அளவை குறிப்பேடுகளில் திருப்பரங்குன்றம் மலையை GTS ஸ்டேசன் என்று குறிக்கப் பட்டுள்ளது குறிக்கப் பட்டுள்ளது என குறிப்பிடுகிறார்கள்.
திருப்பரங்குன்றம் மலையும் ஒரு அளவைப் புள்ளியாக இருந்து அளவீடு செய்யப்பட்டிருக்கிறது என்பது உண்மை தான். ஆனால் இந்த கார்த்திகை தீபத் தூண் தான் அந்த அளவைக் கல் என்று சொல்வது அபத்தம். ஏனெனில் GTS அளவைக் கற்கள் அனைத்தும் ஒரே FONT பயன்படுத்தப் பட்டு, அந்த கல் அமைந்துள்ள ரேகை எண்கள் குறிக்கப்பட்டு விபரங்களைத் தாங்கிய கற்களாக உள்ளன.
ஆனால் தீபத் தூண் என்பது தீபத் தூணாக தெரியும் வகையிலேயே அமைக்கப் பட்டுள்ளன. GTS அளவை குறிப்புகளை தவிர இந்த தூண் அளவைக் கல் என்பதை உறுதிப் படுத்த வருவாய்த்துறை ஆவணங்களில் எதுவுமே இல்லை என குறிப்பிடும் திருப்பரங்குன்றம் மலை குறித்து நன்கு அறிந்தவர்கள்.
திருப்பரங்குன்றம் மலையில் தர்ஹா இருப்பதை GTS அளவை ஆவணங்களும் உறுதிப் படுத்துகின்றன. கீழே கோயில் இருப்பதையும் அதே ஆவணம் உறுதிப் படுத்துகிறது. இந்த காத்திகை தீப தூண் தூண் அளவைக் கல் என்றால் இதே தகவல் வருவாய் துறை ஆவணங்களிலும் இருந்திருக்க வேண்டும்,
வருவாய் துறை ஆவணங்களில் இந்த தூண் அளவைக் கல்லாக காட்டப்பட்டு இருந்தால் அரசுக்கு இவ்வளவு சிரமம் தேவையில்லை. இது அளவைக் கல் என்று ஆணித் தரமாக உறுதி செய்து விட்டு போயிருப்பார்கள். ஆனால் இது அளவைக் கல் என்று ஒரு விபரம் இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் ஆவணங்களில் இல்லை என கூறப்படுகிறது.

