கொளத்தூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் விஎஸ் பாபு மரணம் அடைந்த பின்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் கொளத்தூர் சட்டமன்ற தொகுதி முக்கியத்துவம் பெற்று விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் தற்போது காலியாக இருக்கும் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் தவெக தரப்பிலிருந்து விஎஸ் பாபு மகன் சதீஷ்குமாருக்கே அந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுவது உறுதியாக இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் திமுக தரப்பில் மீண்டும் ஸ்டாலின் போட்டியிடுவாரா அல்லது இடைத்தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்குவாரா? அல்லது ஸ்டாலின் போட்டியிடவில்லை என்றால் வேறு யார் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவார்கள்? என்கிற பல கேள்விகள் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

இந்த நிலையில் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் விஎஸ் பாபு மறைந்த பின்பு நடந்த இறுதி ஊர்வலம் மற்றும் கொளத்தூர் தொகுதியில் முதல்வர் விஜயின் நேரடி பார்வையில் நடக்கும் நலத்திட்டங்கள் இவை அனைத்துமே கொளத்தூர் தொகுதியில் தவெகாவின் செல்வாக்கு மேலும் அதிகரித்திருக்கிறது எனவே தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக தமிழகத்தின் முதல்வராக இருந்த மு.க. ஸ்டாலினை விஎஸ் பாபு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தவில்லை சுமார் எட்டாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறார். அந்த வகையில் கடந்த காலங்களில் முன்னாள் சிட்டிங் முதல்வர்கள், சிட்டிங் அமைச்சர்களை ஆயிரம் ஓட்டு, இரண்டாயிரம் ஓட்டு வித்தியாசத்திலே வீழ்த்தியதாக வரலாறு உண்டு. ஆனால் விஎஸ் பாபுவுக்கும் மு.க. ஸ்டாலினுக்கும் நடந்த போட்டியில் விஎஸ் பாபு அதிக வாக்கு வித்தியாசத்தில் மு.க. ஸ்டாலினை வீழ்த்தியிருக்கிறார்.
இப்படி இருக்கும் நிலையில் கொளத்தூர் தொகுதியில் மீண்டும் மு.க. ஸ்டாலின் போட்டியிட்டால் தோல்விக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்றே மு.க. ஸ்டாலின் கவனத்திற்கு ரிப்போர்ட்டாக சென்றிருக்கிறது. அந்த வகையில் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியை தவிர்க்கும் பட்சத்தில் அடுத்து யார் போட்டியிடுவார் என்ற விவாதத்தில் தற்போது முன்னாள் புரசைவாக்கம் திமுக சட்டமன்ற உறுப்பினர் ரங்கநாதனின் பெயர் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆனால் திமுகவின் மாவட்ட செயலாளர் சேகர் பாபு கொளத்தூர் தொகுதியில் மேயர் பிரியாவை போட்டியிட வைப்பதில் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், அதற்காக எப்படியாவது மேயர் பிரியாவுக்கு திமுகவில் கொளத்தூர் தொகுதி சீட்டை வாங்கி பெற்று கொடுத்துவிட வேண்டும் என்று பல வகையில் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த 2026 சட்டசபை தேர்தலின் போதே மேயர் பிரியாவிற்கு சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை பெற்றுத்தர சேகர் பாபு முயற்சித்தார்.
ஆனால் அப்போது அது கைகூடவில்லை. இந்த நிலையில் நடைபெற இருக்கும் கொளத்தூர் இடைத்தேர்தலில் மேயர் பிரியாவுக்கு சீட்டை பெற்றுத் தருவதற்கான தீவிர முயற்சியில் சேகர் பாபு ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் கொளத்தூர் தொகுதியில் முக ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் கூட ஆட்சி மாற்றம் நடைபெற வாய்ப்பில்லை, ஆகையால் போட்டியிட்டு தோல்வியை தழுவினால், அத்துடன் திமுகவின் நிலை மிக பரிதாபத்தில் முடிந்து விடும் ஆகையால், கொளத்தூர் தொகுதியில் முக ஸ்டாலின் மீண்டும் போட்டியிட வாய்ப்பில்லை என்றும், மேயர் ப்ரியாவுக்கே அதிக வாய்ப்புள்ளது என்கிறது அரசியல் வட்டாரங்கள்.
அதே நேரத்தில் கொளத்தூர் தொகுதி தவித்து திருச்சி கிழக்கு தொகுதியில் முக ஸ்டாலின் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருவதாக மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.

