அமித்ஷா கொடுத்த அஃபார் … அண்ணாமலை எடுத்த முடிவு… பாஜகன் தேசிய பொதுச் செயலாளர் பொறுப்பு…

0
Follow on Google News

தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவராக இருந்த அண்ணாமலை, பாஜகவில் இருந்து விலகி தனியாக வி த லீடர் என்கிற அமைப்பை தொடங்கி, மக்கள் பணிகளை செய்து வருகிறார், குறிப்பிட்ட அளவில் தன்னுடைய புதிய அமைப்பில் உறுப்பினர்கள் இணைந்த உடன் புதியதாக கட்சியை அறிவிப்பது , மற்றும் கொடி, கொள்கை என அண்ணாமலை அறிவிப்பார் என்றும் அது வரை தொடர்ந்து வி த லீடர் அமைப்பின் மூலம் மக்கள் பணிகளை செய்வார் என தகவல் வெளியானது.

இந்நிலையில் பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகிய பின்பு அவ்வ போது அரசியல் கருத்துக்களை தெரிவிக்கும் அண்ணாமலை, தொடர்ந்து முழு வீச்சில் அரசியல் குறித்து பேசுவதை தவிர்த்து வந்தார், இதற்கு தற்பொழுது ஆட்சிக்கு வந்திருக்கும் த வெ க அரசுக்கு ஒரு வருடமாவது டைம் கொடுப்போம் என ஏற்கனவே அண்ணாமலை தெரிவித்து இருந்தார் இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் நடந்த வி தா லீடர் நிகழ்வில் பேசிய அண்ணாமலை மிக தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரு நிகழ்வை குறிப்பிட்டு பேசி இருந்தார்.

அதாவது அண்ணாமலை பாஜகவில் இருந்து விளக்குவதற்கு முன்பு, மத்திய உள்துறை அமைச்சர் அமிதாஷாவை சந்தித்து தன்னுடைய விலகல் குறித்து விளக்கம் அளிக்க டெல்லி சென்று இருந்தார், அப்போது அமித்சா மற்றும் அண்ணாமலை இடையில் நடந்து உரையாடல் குறித்து அண்ணாமலை மேடையில் போட்டுடைத்துள்ளார், அதில் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலக வேண்டாம் என்றும்,

டெல்லியில் முக்கிய பொறுப்புகளை கொடுக்கிறோம், நீங்கள் டெல்லியில் இருந்து அரசியல் செய்யுங்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமிட்ஷா தெரிவித்ததாகவும் , அதற்கு அண்ணாமலை எனக்கு வேண்டாம் நான் தமிழ்நாட்டிலே இருந்து கொள்கிறேன் என தெரிவித்து, உங்கள் வழியை நீங்கள் பாருங்க , எங்கள் வழியை நாங்கள் பார்க்கிறோம் என்று அண்ணாமலை டெல்லியில் கொடுக்க இருந்த பொறுப்பை வேண்டாம் என மறுத்துவிட்டதாக தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் டெல்லியில் அண்ணாமலை என்ன பொறுப்பு கொடுப்பதாக இருந்தார் என்கிற தகவல் டெல்லி வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ளது, அதில் அண்ணாமலைக்கு தேசிய அளவில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பொறுப்பை வழங்க டெல்லி பாஜக தலைமை தயாராக இருந்து இருக்கிறது, தேசிய பொதுச் செயலாளர் மற்றும் தென் மாநில பொறுப்பாளராக கூடுதல் பொறுப்பும் வழங்க தயாராகவே டெல்லி பாஜக தலைமை இருந்திருக்கிறது.

ஆனால் தனக்கு இந்தியா முழுவதும் சுற்றி அரசியல் செய்ய விருப்பம் இல்லை, தமிழகத்தில் மட்டுமே அரசியல் செய்ய விருப்பம் என தன்னுடைய நிலைப்பாட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விடம் தெரிவித்த அண்ணாமலை, தான் ஏற்கனவே நிதானமாக யோசித்து தமிழக அரசியலில் தன்னுடைய எதிர்கால திட்டம் குறித்து தயார் செய்துவிட்டேன், அதை என்னால் பாஜகவில் இருந்து சுதந்திரமாக செயல்பட முடியாது,

ஆகையால் என்னை என் வழிக்கு விட்டுவிடுங்க என டெல்லியில் ஓப்பனாகவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவித்து இருக்கிறார் அண்ணாமலை, இதன் பின்பு அமித்ஷாவும் அண்ணாமலையை இதற்கு மேல் கன்வின்ஸ் செய்ய முடியாது என்கிற முடிவுக்கு வந்தவர், அவர் வழியிலே அவர் செல்லட்டும் என்கிற முடிவுக்கு அமித்ஷா வந்து விட்டாராம்.

இந்நிலையில் தற்போதைக்கு எந்த ஒரு தேர்தலும் தற்பொழுது இல்லாத காரணத்தில், அரசியல் கட்சியை மெதுவாக தொடங்குவோம், அது வரை வி த லீடர் அமைப்பின் மூலம் மக்கள் பணியை தொடர்ந்து செய்வோம் என்கிற முடிவில் தீர்க்கமாக இருக்கும் அண்ணாமலை நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு புதிய அரசியல் கட்சியை தொடங்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here