த்ரிஷாவின் லண்டன் சொத்து… அடேங்கப்பா இத்தனை கோடியா.? த்ரிஷாவின் மொத்த சொத்து மதிப்பு தெரியுமா..

0
Follow on Google News

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து, சுமார் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் நடிகை த்ரிஷா. கதாநாயகியாக அறிமுகமான காலம் முதல் இன்று வரை தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் த்ரிஷா, தற்போது தென்னிந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகிகளில் ஒருவராக இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டு பாகங்கள் மற்றும் விஜய்யுடன் இணைந்து நடித்த ‘லியோ’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு த்ரிஷாவின் மார்க்கெட் மேலும் உயர்ந்ததாக திரைத்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.இதற்கு முன்பு ஒரு படத்திற்கு சுமார் 5 முதல் 10 கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்று வந்த த்ரிஷா, தற்போது 10 முதல் 12 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.

திரைப்படங்கள் மட்டுமின்றி, முன்னணி நிறுவனங்களின் விளம்பரப் படங்களிலும் த்ரிஷா தொடர்ந்து நடித்து வருகிறார். நகைக்கடைகள், ஆடை நிறுவனங்கள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் பல்வேறு லைஃப்ஸ்டைல் பிராண்டுகளின் விளம்பர தூதராகவும் அவர் இருந்து வருகிறார்.விளம்பரங்கள் மூலமாக மட்டும் ஆண்டுக்கு சுமார் 9 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைப்பதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படி திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்கள் மூலம் தொடர்ந்து வருமானம் ஈட்டி வரும் த்ரிஷாவின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு தற்போது சுமார் 85 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சொத்துகளைப் பொறுத்தவரை, சென்னையின் பட்டினப்பாக்கம் பகுதியில் த்ரிஷாவுக்கு சொந்தமான ஆடம்பர குடியிருப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் சந்தை மதிப்பு சுமார் 10 கோடி ரூபாய் என மதிப்பிடப்படுகிறது.

மேலும், தெலுங்கு திரைப்படங்களில் நடிக்கும் போது தங்குவதற்காக ஹைதராபாத்திலும் த்ரிஷாவுக்கு சொந்தமாக ஒரு சொகுசு வீடு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வீட்டின் மதிப்பு சுமார் 6 முதல் 6.5 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், லண்டனிலும் த்ரிஷாவுக்கு ஒரு குடியிருப்பு சொத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருபது ஆண்டுகளுக்கும் மேலான சினிமா பயணம், தொடர்ந்து கிடைத்து வரும் பட வாய்ப்புகள், உயர்ந்து வரும் சம்பளம், விளம்பர வருமானம் மற்றும் முதலீடுகள் என த்ரிஷாவின் திரைப்பயணத்துடன் அவரது சொத்து மதிப்பும் தொடர்ந்து உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் இன்னும் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் த்ரிஷாவின் சினிமா பயணத்துடன், அவரது சொத்து மற்றும் சம்பளம் தொடர்பான தகவல்களும் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன.

பல கோடிக்கு அதிபரான திரிஷா 43 வயதை கடந்தும், இன்னும் முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார், இவர் முரட்டு சிங்கிளாக இருந்து வருவதாலே இன்னும் இவருக்கென ரசிகர்கள் பட்டாளம் வெறி தானமாக இருந்து வருகிறது, மேலும் நயன்தாரா போன்று நடிகைகள் வயதானாலும், முகத்தில் டொக்கு விழுந்தது போன்று காட்சியளிக்கிறார்கள், ஆனால் திரிஷா இன்னும் 20 வயது இளமை தோற்றத்துடன் இருந்து வருகிறார்.

சினிமாவில் மிக பெரிய அரசியல் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகை திரிஷா அரசியலுக்கு வர வேண்டும் என்பது தான் அவருடைய ரசிகர்களின் எதிர்பார்ப்பும் கூட, அந்த வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அரசியலுக்கு வருவாரா திரிஷா என்பது மிக பெரிய விவாத பொருளாக மாறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here