தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்த சில நாட்களிலேயே சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியானார், அவரை தொடர்ந்து திமுக எம்எல்ஏ மார்க்கண்டையன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, பல்வேறு போராட்டங்களுக்கு பின்பு ஜாமீன் வெளியானார், இதனை தொடர்ந்து உச்ச கட்டமாக,
திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் கைது செய்யப்பட்டு தஞ்சை வரை விசாரணை அழைத்துச் செல்லப்பட்டு, ஒரு நாள் முழுவதும் அலைக்கழிக்கப்பட்டார், இது ஒட்டுமொத்த திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், திமுக முன்னாள் அமைச்சர்களுக்கும் கடும் பீதியை கிளப்பி இருக்கிறது. அந்த வகையில் உணர்ச்சிவசப்பட்டு முதல் குடும்பத்தை குளிர்விப்பதற்காக ஏதாவது பேசினோம் என்றால், நாமும் கைது செய்யப்படுவோம் என்கின்ற அச்சத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர்களும் உள்ளனர்.

மேலும் சட்டசபையில் தவெகாவை நோக்கி ஏதாவது கிறுக்கு பிடி கேள்வி கேட்டால் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் நமக்கு ஆப்பு வைத்து விடுவார்கள் என்கின்ற அச்சமும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பயம் இருக்கு, காரணம் தவெக ஆட்சிக்கு வந்த பின்பு ஏவ வேலு, செந்தில் பாலாஜி உட்பட்ட திமுகவினரை சேர்ந்த பலருக்கு சொந்தமான இடங்களில் நடந்த அதிரடி லஞ்ச ஒழிப்பு சோதனை,
ஒட்டுமொத்த திமுக கூடாரட்டத்தையும் ஆட்டம் காண வைத்திருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்து வரும் சட்டசபை கூட்டத்தொடரில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் பலரும் தவெக அமைச்சர்களுக்கு தாஜா செய்யும் வேலைகளை மிக கச்சிதமாக செய்ததை பார்க்க முடிந்தது, கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மரியா வில்சன் குறித்து கேள்விகளை எழுப்புவதற்கு முன்பு,
எங்க தொகுதி மாப்பிள்ளை என்றுதான் ஆரம்பித்தார், அதேபோன்று கள்ளக்குறிச்சி சட்டமன்ற திமுக உறுப்பினர் வசந்த் கார்த்திகேயன் எனக்கு கடந்த தேர்தலில் சீட்டு வாங்கி கொடுத்தது ஆதவ் அர்ஜுனா தான் என்று தாஜா பண்ண தொடங்கினார். அதாவது 2021 திமுகவுக்காக ஆதவா அர்ஜுனா பெண் நிறுவனத்தில் வேலை செய்த போது, எனக்கு அவர்தான் சீட்டு வாங்கி கொடுத்தார் என தாஜா செய்தார்.
மேலும் இதன் பின்னணியில் தொடர்ந்து தவெக வை கடுமையாக எதிர்க்கும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் குறிவைத்து கைது செய்யப்படுவதும், மேலும் கடந்த திமுக ஆட்சியில் பார்ட்டி பண்ட ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு சென்றிருக்கிறது என்பதை முதல்வர் விஜய்யிடம் ஒப்படைத்து விட்டோம் என்று, இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பே நிதி அமைச்சர் மரியா வில்சன் பேட்டி ஒன்றில் தெரிவித்தது ஒட்டுமொத்த திமுகவையும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களை நமக்கு எதுக்கு வம்பு என்று அமைதி ஆக்க வைக்கிறது.
இந்நிலையில் போகிற போக்க பார்த்தால் அதிமுகவில் இருந்து ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்துவிட்டு தவெக வில் இணைந்து வருவது போன்று, திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக வில் இணைந்தாலும் ஆச்சரியம் இல்லை என்கிறது அரசியல் வட்டாரங்கள்.
அந்த வகையில் நடைபெற்று கொண்டிருக்கும் பட்ஜெட் தொடர்பான சட்டசபை கூட்ட தொடருக்கு முன்பு சட்டசபையில் திமுகவினர் தவெக வை திக்குமுக்காடி வைத்து விடுவார்கள் என திமுக ஆதரவாளர்கள் எதிர்ப்பது கொண்டிருந்த நிலையில், உள்ளே சட்டசபையில் தவெக அமைச்சர்களுக்கு புகழாரம் சுட்டி தாஜா செய்து கொண்டிருப்பது திமுக ஆதரவாளர்கள் மத்தியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

