நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது தொடர்ந்து திமுகவில் உட்கட்சியை மறு சீரமைப்பு செய்ததற்கான முயற்சியில் திமுக தலைமை இறங்கி இருக்கிறது. இது தொடர்பாக சமீபத்தில் மு க ஸ்டாலின் தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றிருக்கிறது. இந்த கூட்டத்தில் திமுகவின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள்.
இதில் திமுகவின் பொது செயலாளர் துரைமுருகன், டி ஆர் பாலு, கே என் நேரு, ஆ ராஜா, கனிமொழி மற்றும் மு க ஸ்டாலினின் மருமகன் சபரீசன் உட்பட பலரும் கலந்து கொண்டு வீழ்ந்து கிடக்கும் திமுகவை எப்படி தூக்கி நிறுத்துவது என்பது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு இருக்கிறார்கள், அப்போது இந்த கூட்டத்தில் தற்பொழுது தவெக அரசிற்கு கடும் சவாலாக நாம் விளங்க வேண்டும் என்றால்,

அவர்கள் பானியிலே நாம் செல்ல வேண்டும், அந்த வகையில் கட்சியில் இருக்கும் மூத்த தலைவர்களுக்கு சற்று ஓய்வு கொடுத்து, இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற பேச்சு அங்கே விவாத பொருளாக நடைபெற்று இருக்கிறது, அந்த வகையில் தமிழக முழுவதும் இரண்டு சட்டமன்றத்திற்கு ஒரு மாவட்ட செயலாளர் என மொத்தம் 117 மாவட்ட செயலாளர் அவர்களை நியமனம் செய்வது தொடர்பான ஆலோசனையும் நடந்திருக்கிறது.
இதற்கு பெரிதாக உயர்மட்ட குழுவில் எந்த ஒரு எதிர்ப்பும் இல்லை என்று கூறப்படுகிறது, ஆனால் மாவட்ட செயலாளராக 70 வயதை கடந்தவர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று உயர்மட்ட குழுவில் பேசப்பட்ட போது, அப்படி என்றால் மாவட்ட செயலாளராக தற்பொழுது வரை இருக்கும் 70 வயதை கடந்த மூத்த தலைவர்வர்களுக்கு மாநில அளவில் தலைமை பொறுப்பு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்திருக்கிறது.
அதே போன்று தொடர்ந்து மூன்று முறை ஒரே பதவியில் இருப்பவர்கள் அந்த பதவியில் இருந்து மாற்றம் செய்ய வேண்டும் என்றும் அதற்கு அடுத்ததாக ஒன்றிய மற்றும் பேரூர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் 60 வயது மேற்பட்டவர்களை மாற்ற வேண்டும் என்றும் அந்த உயர்மட்ட குழுவில் பேசி முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது,
இந்த நிலையில் விரைவில் திமுக அமைப்பு தேர்தலை நடத்தி அங்கே புது முகங்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் குறிப்பாக இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் பல மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்ற பேச்சு விவாதமாக மாறி இருக்கிறது. அதே நேரத்தில் தற்போது இளைஞர் அணி தலைவராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு செயல் தலைவராக பதவி வழங்க வேண்டும் என்றும்,
உதயநிதி ஸ்டாலினை முன்னிலப்படுத்தி இனி விஜய்க்கு எதிராக அரசியல் செய்ய வேண்டும் என்ற முடிவு செய்த போது, இதற்கு கனிமொழி தரப்பில் ஆட்சேபனும் எழுந்ததாக கூறப்படுகிறது, இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் விவகாரத்தில் கனிமொழியை ஆப் செய்வதற்காக கனிமொழிக்கும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் முக்கிய பொறுப்பு மாற்றி கொடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் செயல் தலைவராக வருவதற்கு கனிமொழி தரப்பில் கடும் எதிர்ப்பு இருக்கும் நிலையில் தனக்கு பொதுச்செயலாளர் அல்லது பொருளாளர் பதவி கிடைத்தால் மட்டுமே உதயநிதி ஸ்டாலினை செயல் தலைவராக ஏற்றுக் கொள்ள முடியும் என்று கனிமொழி தன்னுடைய நிலைப்பாட்டை கூட்டம் முடிந்த பின்பு திமுக தலைவரின் கவனத்திற்கு தன்னுடைய தரப்பு மூலம் கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.அதே நேரத்தில் உயர்மட்ட குழுவில் எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட மாஜி திமுக அமைச்சர்கள் போர் கொடியை தூக்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது

