விசிகவை கழட்டி விடும் முதல்வர் விஜய்… வன்னியரசு OUT … சௌம்யா அன்புமணி IN ..

0
Follow on Google News

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகம், அதில் சென்னையில் உள்ள 38 தொகுதிகளில் 34 தொகுதிகளில் வெற்றி பெற்றது, மீதம் உள்ள 4 தொகுதிகளில் 2 அதிமுக , 2 திமுக வெற்றி பெற்றது, அதிலும் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற 2 சட்டமன்ற உறுப்பினர்களும் தவெக பக்கம் உள்ளனர், அந்த வகையில் சென்னையை பொறுத்தவரை தவெக கோட்டையாக உள்ளது.

அதே போன்று கோவை, மதுரை போன்ற இடங்களிலும் தமிழக வெற்றி கழகம் மிக பெரிய வெற்றி பெற்றது, ஆனால் டெல்டா மற்றும் வடமாவட்டங்களில் தமிழக வெற்றி கழகத்தின் வெற்றி எட்டா கனியாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின் முடிவுகள் வெளிப்படுத்தியது. இந்நிலையில் அதிமுகவின் கைவசம் இருக்கும் 30க்கு மேட்பட்ட சட்டசபை உறுப்பினர்களின் வெற்றிக்கும் முக்கிய காரணம் பாமக உடன் கூட்டணி அமைத்தது தான்.

அந்த வகையில் திண்டிவனம், விழுப்புரம், சேலம் , கள்ளக்குறிச்சி , தருமபுரி போன்ற வடமாவட்டங்களில் அதிமுக வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது பாமக தான், இதற்கு முக்கிய காரணம் பாமகவுக்கு வன்னியர் சமூகத்தின் வாக்குகள் இன்றும் கைவசம் உள்ளது, அந்த வகையில் பாமக இடம் பெரும் கூட்டணி தான் வன்னியர் சமூகத்தின் வாக்குங்களை அறுவடை செய்யமுடியும் என்பது 2026 சட்டசபை தேர்தல் முடிவுகள் தெளிவு படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் விசிகாவுக்கு என்று வாக்கு வங்கி இல்லை என்பது நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் தெளிவு படுத்தி விட்டது, விசிக கைவசம் இருந்த ஒரு குறிப்பிட்ட சமூக வாக்குகள் தமிழக வெற்றி கழகம் கைவசம் வந்துவிட்டது என்பதை சென்னையில் உள்ள 38 தொகுதியில் 34 தொகுதியில் வெற்றி பெற்றதன் மூலம் உணர்த்தி இருக்கிறது தவெக.

மேலும் விசிகவினரின் செய்லபாடுகள் ஆளும் தவெக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அமைந்து வருவதையும், குறிப்பாக சமீபத்தில் தஞ்சாவூரில் விசிகவினர் நடத்திய சாலை மறியல் போன்ற ஆர்ப்பாட்டம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைந்து இருந்தது, இதனால் ஆளும் தவெக அரசுக்கு தான் பொதுமக்கள் மத்தியில் அவ பெயரை ஏற்படுத்தி கொடுத்தது.

அந்த வகையில் பாமக தவெக அரசுக்கு ஆதரவு கொடுத்தால் அமைச்சரையில் இடம் கொடுக்க தயாராக இருக்கிறது தவெக அதற்கான தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது தவெக ,ஆனால் விசிக இருக்கும் கூட்டணியில் பாமக இடம் பெற விருப்பம் இல்லை என்பதை தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து விசிகாவை கழட்டிவிட்டு விட்டு பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கு தவெக தயாராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் வெளிப்பாடு தான், சுதந்திர தின விழாவில் காங்​கிரஸ் மூத்த தலை​வ​ரும், முன்​னாள் எம்​.பி.​யு​மான எம்​.கிருஷ்ண​சாமிக்கு ரூ.10 லட்​சம் விருது தொகை, சான்​றிதழுடன் தகை​சால் தமி​ழர் விருது வழங்​கப்​பட்​டு இருக்கிறது, அதாவது காங்கிரஸ் மூத்த தலைவர் எம் கிருஷ்ணசாமி வேறு யாரும் இல்லை, அவர் சௌம்யா அன்புமணியின் தந்தை, அன்புமணி ராமதாஸின் மாமனாரும் ஆவர்.

அந்த வகையில் அன்புமணி ராமதாஸ் மற்றும் சௌமியா அன்புமணி ஆகியோரை மகிழ்ச்சி படுத்தி தங்கள் பக்கம் இழுக்க தான் எம் கிருஷ்ணசாமிக்கு விருது வழங்கி கெரவப்படுத்தி இருக்கிறது தவெக அரசு, அதே நேரத்தில் விடுதலை சிறுத்தை கட்சியை கூட்டணியில் கழட்டி விட்டாலும் கூட விசிக எம் எல் ஏக்கள் சிலர் தவெகவில் ஐக்கியமானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here