அமைச்சரவையில் மாற்றம்… பறிபோகும் முக்கிய அமைச்சர் பதவி… ஜெயலலிதா பாணியில் CM விஜய்…

0
Follow on Google News

ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டத்தில், இரவு தூங்கி காலை எழுந்தாள் அமைச்சர் பதவி இருக்குமா என்கிற அச்சத்துடனே ஒவ்வொரு அதிமுக அமைச்சர்களும் இரவு தூங்க செல்லும் நிலை இருந்தது, அந்த வகையில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அடிக்கடி நடக்கும் அமைச்சரவை மாற்றம், எந்த அமைச்சர் தவறு செய்தாலும் உடனே பாயும் நடவடிக்கை, இதெல்லாம் அப்போது இருந்த அமைச்சர்கள் எங்கே எந்த ஒரு சிக்கலிலும் சிக்கி விட கூடாது என்கிற அச்சத்தில் இருக்க செய்தது.

தற்பொழுது ஜெயலலிதா பாணியில் முதல்வர் விஜய்யின் நடவடிக்கைகளும், தவெக அமைச்சர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது, அந்த வகையில் விரைவில் அமைச்சரவையில் மாற்றம் செய்யவதற்கான ஏற்பாடுகளை முதல்வர் விஜய் செய்து வருவதாகவும், இது தொடர்பாக தான், சமீபத்தில் தமிழக ஆளுநரை சபாநாயகர் மற்றும் அமைச்சர் நிர்மல் குமார் ஆகியோர் சந்தித்தாக கூறப்படுகிறது.

முதல்வராக பொறுப்பேற்ற விஜய், ஒவ்வொரு அமைச்சர்களின் நடவடிக்கைகளை மிக உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ஒவ்வொரு அமைச்சர் குறித்த உளவுத்துறை ரிப்போர்ட் ம் முதல்வர் கவனத்துக்கு தமிழக உளவு துறை மூலம் சென்று கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் ஒரு சில அமைச்சர்கள் பந்தா செய்வதை தாண்டி மக்கள் பணியில் கவனம் செலுத்த வில்லை என்கிற ரிப்போர்ட் சென்று இருக்கிறது

குறிப்பாக தென் மாவட்டத்தில் இருக்கும் அமைச்சர்கள் மத்தியில் யார் பெரிய ஆள் என்கிற பஞ்சாயத்து நடந்து வருவது குறித்தும் முதல்வர் விஜய் கவனத்துக்கு சென்று இருக்கிறது. மேலும் சிறப்பாக செயல்படும் அமைச்சர்கள் பட்டியலில் அறநிலை துறை அமைச்சர் ரமேஷ், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ்,அமைச்சர் ஸ்ரீகாந்த், அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் செயல்பாடுகள் முதல்வர் விஜய்யை மிக பெரிய அளவில் இம்ப்ரெஸ் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினரான அமைச்சர் கில்லி சரத் சமீபத்தில் மிக பெரிய சச்சையில் சிக்கி அது எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தும் நிலைக்கு கொண்டு சென்று விட்டது, இது முதல்வர் விஜய்யை மிக பெரிய அளவில் அப்செட் ஆக்கி விட்டதாக கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு நேரு உள் விளையாட்டு அரங்கில் அமைச்சர் கில்லி சரத் செய்த செயல், வீடியோவாக வைரலானது.

அமைச்சர் கில்லி சரத் போதை பொருள் பயன்படுத்துவதாக எதிர்கட்சிகள் அந்த வீடியோவை வைரலாக்கியது, இதனை தொடர்ந்து குடும்பத்துடன் கில்லி சரத் இந்த சர்ச்சை வீடியோ குறித்து விளக்கம் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார், அவர் விளக்கம் கொடுத்து வீடியோ வெளியிட்ட பின்பு தான் இந்த விவகாரம் மேலும் விமர்சனத்துக்கு உள்ளாகி எதிர்கட்சிகள் போராட்டம் வரை வெடித்தது.

இந்நிலையில் அமைச்சர் கில்லி சரத் யாரை கேட்டு இப்படி ஒரு விளக்கத்தை கொடுத்தார் என்கிற கோபம் முதல்வர் விஜய்க்கு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் உடனே இந்த விவகாரத்தில் அமைச்சர் கில்லி சரத் குற்றமற்றவர் என்று மக்கள் மத்தியில் நிரூபிக்க வேண்டும், இல்லை என்றால் அவருடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கறாராக முதல்வர் விஜய் தெரிவித்து விட்டாராம்.

இந்நிலையில் விரைவில் அமைச்சரவை மாற்றம் அரங்கேற இருப்பதாகவும் ஒரு அமைச்சர்கள் பதவிகள் பறிபோக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து தவெக அமைச்சர்கள் ஒவ்வொருவரும் முதல்வர் விஜய்யின் அதிரடி நடவடிக்கைகளால் பயத்தில் எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்கி விட கூடாது ஏன் மிக கவனமாக இருப்பதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here