தவெக உடன் ஏ வ வேலு தொடர்பு… கடுப்பான உதயநிதி… உச்சகட்ட பரபரப்பில் அறிவாலயம்…

0
Follow on Google News

நடந்து முடிந்த சட்டசபை கூட்ட தொடரில் , தவெக மற்றும் திமுகவுக்கு இடையிலான கடும் வாக்குவாதம் ஏற்படும் என்று பலரும் எதிர்ப்பது கொண்டிருக்க, தவெக அமைச்சர்கள் மற்றும் தவெக சட்டமன்ற உறுப்பினர்களின் சர்ச்சை பேச்சுகளுக்கு முட்டு கொடுக்கும் வகையிலும், அடுத்து அவர்களை எதிர்த்து திமுக தரப்பில் இருந்து யாரும் கேள்வியே கேட்காதபடி முன்னாள் திமுக அமைச்சர் ஏ வ வேலு நடந்து கொண்ட சம்பவம் திமுக முதல் குடும்பத்திற்கு ஏ வ வேலு மீது சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தவெக ஆட்சிக்கு வந்த பின்பு முன்னாள் அமைச்சர் ஏ வ வேலுவுக்கு சொந்தமான இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனையை மேற்கொண்டது, ஏ வ வேலு கைது செய்யப்படுவார் என பரபரப்பு நீடித்து வந்த நிலையில் தீடிரென சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஏ வ வேலு, இதன் பின்பு ஏ வ வேலுவுக்கு ஜாமீன் கிடைத்த பின்பே தமிழகம் வந்தார்.

இந்நிலையில் தமிழகம் வந்த ஏ வ வேலு தவெகவுக்கு எதிராக சற்று அடக்கி வசித்து கொண்டிருக்கிறார் இது ஏற்கனவே திமுக தலைமைக்கு சந்தேகம் ஏற்படுத்தியது , இதனை தொடர்ந்து தாற்பொழுது நடந்த சட்டசபை கூட்ட தொடரில் ஏ வ வேலுவின் நடவடிக்கை திமுக தலைமைக்கு ஏற்கனவே இருந்த சந்தேகம் தற்பொழுது உறுதி படுத்தும் வகையில் அமைந்துள்ளது, அந்த அளவுக்கு பல இடங்களில் தவெக அமைச்சர்கள் பேசிய சர்ச்சை பேச்சுக்களில் இருந்து காப்பாற்றி இருக்கிறார் ஏ வ வேலு.

நிதி அமைச்சர் மரியா வில்சன் குறித்த தமிழ் குறித்த சச்சைக்கு, நான் யாருக்காவும் என்னை மாற்றி கொள்ள மாட்டேன், நான் இப்படி தான் பேசுவேன் , எங்களுக்கு ஒரு மொழியை Christianity கற்று கொடுத்திருக்கிறது. அன்பு மொழி, அமைதி மொழி, இரக்கத்தின் மொழி. எவ்வளவு தான் தமிழ் படித்திருந்தாலும், பாதி பேருக்கு இது தெரியாது. என மரியா வில்சன் பேசிய பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்பி இருக்க வேண்டும்.

குறிப்பாக எவ்வளவு தான் தமிழ் படித்திருந்தாலும், பாதி பேருக்கு இது தெரியாது என்கிற பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சட்டசபையை முடக்கும் அளவுக்கு ஒரு ரணகளம் பண்ணிருக்க வேண்டும் என்பதே அந்த சட்டசபை நேரலையை பார்த்து ஒவ்வொரு திமுகவினரின் எதிர்பார்ப்பும் கூட, ஆனால் நிதி அமைச்சர் மாரியா வில்சன் பேசிய பேச்சுக்கு, நிதி அமைச்சர் மரியா வில்சனை எனக்கு நன்கு தெரியும்,

ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு உரை நடை இருக்கும் என மரியா வில்சனுக்கு முட்டு கொடுக்கும் வகையில் நடந்து கொண்டு அந்த விவகாரத்தை ஆப் செய்தார் ஏ வ வேலு, மேலும் அமைச்சர் ஆதவா அர்ஜுனா 900 ஆயிரம் கோடி குறித்து பேச , அதற்கு உங்க மாமனாரை கேளுங்க என உதயநிதி பதில் கொடுக்க, அடுத்து ஆதவா அர்ஜுனா உங்க அப்பாவை கேளுங்க என கேள்வி எழுப்ப, இதற்கு திமுக தரப்பில் இருந்து அடுத்த பதிலடி கொடுக்கும் முன் ,

உடனே ஏ வ வேலு எழுந்து மற்றொரு விவகாரத்தை பேசி அந்த விஷயத்தை மழுங்கடித்தார், அதன் பின் சில நிமிடம் கழித்து கே என் நேரு எழுந்து, அப்பாவை காணோம் என்கிற சர்ச்சைக்குரிய பேச்சுக்களை அவை குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தினார், அடுத்து திமுக தரப்பில் ஓபிஎஸ் எழுந்து திமுகவுக்கு மட்டும் நிதி கொடுக்க வில்லை அணைத்து கட்சிகளுக்கும் அந்த குறிப்பிட்ட நிறுவனம் நிதி கொடுத்து இருக்கு என பதில் கொடுத்தார்.

அந்த வகையில் முன்னாள் திமுக அமைச்சர் ஏ வ வேலுவின் சட்டமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் தவெக அரசுக்கு சாதகமாவே அமைத்துள்ளது என கடுப்பாகி உள்ள திமுக முதல் குடும்ப உறுப்பினர்கள் இது குறித்து மற்ற மூத்த தலைவர்களிடம் என்னாச்சு ஏ வ வேலுவுக்கு என விசாரித்து வருகிறதாம் திமுக முதல் குடும்பத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here