கே என் நேரு மீது FIR … கைதாகும் ஏ வ வேலு…அம்பலமானது 30% கமிஷன் 600 கோடி ஊழல்…

0
Follow on Google News

சுப்பிரமணியபுரம் சினிமா படத்தில் வரும் ஒரு சீனில் மரண பயத்தை காட்டி விட்டார்கள் பரமா என்பது போன்று, ஒட்டுமொத்த திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு கைது பயத்தை காட்டி இருக்கிறார் முதல்வர் விஜய் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் ஜெயலலிதா பாணியில் ஆட்சிக்கு வந்த அடுத்தடுத்த நாட்களிலேயே அதிரடியாக செக் வைத்து திமுக முன்னாள் அமைச்சர்களின் தூக்கத்தை கலைத்திருக்கிறார் முதல்வர் விஜய்.

கே என் நேரு மீது வழக்கு பதிவு செய்ய அமலாக்கத்துறை அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், கடந்த திமுக ஆட்சியில் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி காலதாமதம் செய்து தப்பித்து வந்தார் கே என் நேரு, ஆனால் கே என் நேரு மீது மூன்று வழக்கு பதிவு செய்ய அமலாக்க துறை கடந்த திமுக ஆட்சி காலத்திலே நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில், தற்பொழுது அவர் மீது ஒரு எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் டாஸ்மாக் ஊழல் தொடர்பாக உதயநிதியின் நெருங்கிய நண்பர் ரத்தீஷ் தலைமறைவாக இருக்கும் நிலையில் அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் உலகில் எந்த விமான நிலையத்திலும் அவர் கைது செய்யப்பட்டு தமிழகம் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளத.

மறுபக்கம் செந்தில் பாலாஜி நிலை மிக பரிதாபமாக இருக்கிறது, தவெக அரசு கொடுத்து வரும் அடுத்தடுத்த நெருக்கடியின் காரணமாக போலீஸ் ஸ்டேஷன் , நீதிமன்றம் என்று அழைந்து கொண்டிருக்கிறார், இதில் செந்தில் பாலாஜி விரைவில் கைது செயப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. அடுத்ததாக ஏவா வேலு தொடர்பான லஞ்ச ஒழிப்பு துறை சோதனைக்கு முன்பாகவே அவருக்கு தகவல் சென்றதை தொடர்ந்து,

கரூரில் அவருக்கு சொந்தமான இடத்தில் இருந்த சில முக்கிய ஆவணங்கள் வேற ஒரு இடத்திற்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகிறது, இருந்தும் ஏ வ வேலுவுக்கு சொந்தமான இடங்களில் நடந்த லஞ்ச ஒழிப்பு துறையின் அதிரடி சோதனையில் அவரும் நெருக்கடியில் தான் இருக்கிறார், இந்த நிலையில் கடந்த திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த ஏவா வேலு துறையில் மட்டும் 30 சதவீத கமிஷன் காண்ட்ராக்டர் இடம் பெற்று இருக்கிறார்.

அதில் இருந்து 600 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக தற்பொழுது ஆட்சியில் இருக்கும் தவெக் அரசு கண்டுபிடித்துள்ளதாகவும், அந்த 600 கோடியில் திமுக முதல் குடும்பத்திற்கும் பங்கு சென்று இருப்பதாக சந்தேகிக்கிறது தவெக அரசு. இப்படி ஒரு நெருக்கடியான சூழலில் திமுக சிக்கி தவிக்க, தங்களை காப்பாற்றிக் கொள்ள தவெக வில் தங்கள் வாரிசுகளை அனுப்பி தஞ்சம் அடைந்து கொண்டிருக்கிறார்கள் திமுகவின் மூத்த தலைவர்கள்.

அந்த வகையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மகன் தவெகாவில் இணைந்தார், இது முழுக்க முழுக்க ஜெகத் ரக்சன் தன்னுடைய சொத்துக்களை பாத்துக்க தான் அவருடைய மகனை தவெகாவுக்கு அனுப்பி வைத்ததாகவும், அவரை தொடர்ந்து ஏவா வேலுவின் மகன் கம்பனும் தவெக பக்கம் சாய்வதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் அவர் தவெக வில் இணைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் தவெக ஆட்சிக்கு வந்து லைட்டா அடிக்க ஆரம்பித்தததற்கே ஒட்டு மொத்த திமுக கூடாரமும் ஆட்டம் கண்டு இருக்கும் நிலையில், இன்னும் இறங்கி அடித்தால் முதல்வர் விஜய் மற்றும் தவெக அமைச்சர்கள் சட்டசபையில் பேசும் போது திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மேசையை தட்டி வரவேற்பு கொடுத்தாலும் கொடுப்பார்கள் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here