தாராபுரம் தேர்தல் நிலவரம்… 15 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி… இதோ சர்வே ரிப்போர்ட்…

0
Follow on Google News

அதிமுகவின் கோட்டை தாராபுரம் தொகுதி என்கிற பிம்பமே போலியானது, காரணம் தாராபுரம் தொகுதியை பொறுத்தவரை, திமுக – அதிமுக என மாற்றி மாற்றி வெற்றி பெற்று வந்துள்ளது, கடைசியாக நடந்த 2016, 2021 , 2026 சட்டசபை தேர்தலில் 2016ல் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது, அடுத்து 2021ல் திமுக, 2026ல் அதிமுக என வெற்றி பெற்றது, இதில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் கடும் போட்டிகளுக்கு இடையில் வெறும் 1200 வாக்குகள் வித்தியாசத்தில் தான் திமுக வெற்றி பெற்றது.

அடுத்து கடைசியாக நடந்த 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சத்யபாமாக சுமார் 81 ஆயிரம் வாக்குகள், திமுக சுமார் 64 ஆயிரம் வாக்குகள், தவெக அசுமார் 46 ஆயிரம் வாக்குகள் பெற்று இருந்தது, இதில் அதிமுக வேட்பாளர் சத்யபாமா சுமார் 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார், ஆனால் அடுத்து சில நாட்களில் தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார் சத்யபாமா.

குறிப்பாக கடந்த திமுக ஆட்சியில் அதிமுக இந்த தொகுதியில் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம், திமுக மீது இருந்த அதிருப்தி ஒரு காரணம், மேலும் விஜய் புதியதாக கட்சி தொடங்கி இருக்கிறார் அவர் எங்கே ஆட்சி அமைக்க போகிறார், அவருக்கு வாக்களித்து வாக்குகளை வீணடிக்க வேண்டாம், திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் அதிமுகவுக்கு வாக்களித்தால் தான் சரியாக இருக்கும் என்கிற மனநிலையில் தாராபுரம் மக்கள் அதிமுகவுக்கு வாக்களித்தனர்.

இந்நிலையில் தேர்தல் முடிவுக்கு பின்பு ஆட்சி அமைக்க திமுக உடன் கூட்டணி வைக்க எடப்பாடி பழனிசாமி முயன்றார், அதனால் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக வில் இணைந்தேன் என சத்யபாமா பேசி இருப்பது, தாராபுரம் தொகுதியில் உள்ள திமுக எதிர்ப்பாளர்கள் வாக்குகள் இனி அதிமுகவுக்கு செல்லாது, தவெக வுக்கு தான் என்பது உறுதியாகி உள்ளது.

மேலும் கடந்த முறை எடப்பாடி பழனிசாமி முதல்வராக வருவார் என்கிற நம்பிக்கையில் அதிமுகவுக்கு வாக்களித்த மக்கள், ஆட்சியில் இருக்கும் தவெகவுக்கே வாக்களிக்கும் மனநிலையில் உள்ளனர், மேலும் நடைபெற்று கொண்டிருக்கும் இடைதேர்தலில் அதிமுக – திமுகவை ஒரே நேர்கோட்டில் வைத்து பார்க்கும் தாராபுரம் தொகுதி மக்கள் திமுகவுக்கு மாற்று தவெக தான், இந்த ஆட்டத்தில் இனி அதிமுகவுக்கு இடமில்லை என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.

அதனால் கடந்த முறை அதிமுகவுக்கு விழுந்த வாக்குகளில் சுமார் 30 சதவிகித வாக்குகள் இம்முறை தவெக வேட்பாளர் சத்யபாமாவுக்கு விழும், மேலும் ஏற்கனவே தவெக இந்த தொகுதியில் சுமார் 40 ஆயிரம் வாக்குகளை பெற்று இருந்தது, சமீபத்தில் முதல்வர் விஜய்யின் தாராபுரம் பிரச்சாரத்திற்கு பின்பு இன்னும் தவெகவின் செல்வாக்கு அங்கே அதிகரித்து இருப்பதை பார்க்க முடிகிறது.

மொத்தத்தில் தாராபுரம் இடைதேர்தலில், தவெக 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளது, அதே நேரத்தில் அதிமுகவில் தேர்தல் வேலை மிக மந்தமாக இருப்பதால், மூன்றாவது இடத்திற்கு அதிமுக இந்த தேர்தலில் தள்ளப்பட்டு, இரண்டாம் இடம் பிடிக்க திமுகவுக்கே அதிக வாய்ப்புள்ளது, தற்பொழுது இரண்டாம் இடத்தை தக்க வைத்து தாங்கள் பிரதான எதிர்கட்சி என்கிற இடத்தை தக்க வைக்க போராடி வருகிறது திமுக

அந்த வகையில் தாராபுரம் தொகுதியில் இடைதேர்தல் முடிவுகள் மூலம், கொங்கு மண்டலத்தில் அதிமுகவை அப்புறப்படுத்தும் ஒரு தேர்தல் முடிவாக அமையும், அதே நேரத்தில் தவெகவை அடுத்த 5 வருடத்திற்கு அசைக்க முடியாது என்று சொல்ல கூடிய வகையில் தவெக பெரும் வாக்குகள் இருக்கும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here