ராகுல் காந்தியை புறக்கணித்த விஜய்… மோடியுடன் ஒரே மேடையில் விஜய்… காங்கிரஸ் கட்சிக்கு கல்தா…

0
Follow on Google News

கடந்த செப்டெம்பர் 30ம் தேதி டெல்லியில் இந்தி கூட்டணி சார்பில் SIR க்கு எதிராக நடத்தப்பட்டு ஆலோசனை கூட்டத்தில், காங்கிரஸ், விசிக, மதிமுக,உட்பட இந்தியா முழுவதும் உள்ள 19 கட்சிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் தவெக பங்கேற்க்கவில்லை, இந்த கூட்டத்தில் தவெக தலைவராக முதல்வர் விஜய் பங்கேற்க்க வில்லை என்றாலும் பரவாயில்லை, தவெக சார்பில் ஏதாவது ஒரு அமைச்சரையாவது அனுப்பி இருக்கலாம் ஆனால் அனுப்ப வில்லை.

ஆனால் தவெக இந்த கூட்டத்தில் பங்கேற்றால் காங்கிரஸ் கட்சியை முன்னிறுத்தி தவெக அதன் பின்னால் இருப்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டு விடும், அந்த வகையில் மத்தியில் ஆளும் பாஜகவை எதிர்க்க வேண்டும் என்றால் நாங்கள் தனியாகவே எதிர்த்து கொள்கிறோம், யாரும் எங்கள் மீது சவாரி செய்து, எங்கள் உழைப்பில் சுகம் காண வேண்டாம் என்பதில் தவெக மிக தெளிவாக இருப்பதால் தான், காங்கிரஸ் ஏற்பாடு செய்த SIR க்கு எதிரான கூட்டத்தில் பங்கேற்க்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும் தற்பொழுது தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் இடைதேர்தல் பிரச்சாரத்தின் போது கூட விஜய் உடன் ஒரே மேடையில் பங்கேற்க்க கூட்டணி கட்சி தலைவர்கள் விருப்பம் தெரிவித்து இருந்து இருக்கிறார்கள், ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பே கொடுக்காமல், கடந்த 2026 சட்டசபை பொது தேர்தலில் எப்படி பிரச்சாரம் நடந்ததோ அதே போன்று பிரச்சாரத்தை முதல்வர் விஜய் கடைபிடித்து வருகிறார்.

மேலும் நடைபெற்று கொண்டிருக்கும் இடைதேர்தலில் தவெக வெற்றி பெற்ற பின்பு கூட்டணி கட்சிகளின் துணை உடன் தான் தவெக வெற்றி பெற்றது என்கிற ஒரு இமேஜ் வந்து விட கூடாது என்பதில் மிக கவனமாகவே தவெக தலைமை காய்களை நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் 2029 நாடாளுமன்ற தேர்தலை கணக்கில் வைத்து தான் தவெக கட்சியின் காங்கிரஸ் வலையில் சிக்காமல் அரசியல் காய்களை நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வரும் அக்டோபர் 10 ம் தேதி மாணவர்களின் குரல் என்கிற பெயரில் மாணவர்களை சந்திக்கும் நிகழ்வுக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி, தமிழக வரும் ராகுல் காந்தி உடன் தமிழக முதல்வர் விஜய் சந்திக்க காங்கிரஸ் தரப்பில் நேரம் கேட்டும், இன்னும் நேரம் ஒதுக்க படவில்லை என்றும், மேலும் ராகுல் காந்தி தமிழகம் வரும் நிகழ்வில் முதல்வர் விஜய் ராகுல் காந்தியை சந்தித்தால் அது தமிழகம் முழுவதும் முக்கிய செய்தியாக இடம் பெரும்,

அதே நேரத்தில் விஜய் – ராகுல் காந்தி சந்திப்பு நடைபெறவில்லை என்றால், ராகுல் காந்தி தமிழகத்திற்கு வந்து சென்ற விஷயமே தமிழகத்தில் பல பகுதிகளுக்கு செல்லாது, அதனால் எதற்கு காங்கிரஸ் கட்சியை கண்டும் காணாமல் கடந்து செல்வோம் என்கிற முடிவை தவெக தலைமை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சென்னையில் மெட்ரோ திட்டத்தை தொடங்க அக்டோபர் 11 தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி உடன் ஒரே மேடையில் பங்கேற்கிறார் முதல்வர் விஜய், இது அரசு நிகழ்வு என்பதால் பிரதமர் பங்கேற்கும் நிகழ்வில் முதல்வர் பங்கேற்கிறார், அந்த வகையில் ராகுல் காந்திக்கு கல்தா கொடுத்துவிட்டு பிரதமர் உடன் ஒரே மேடையில் முதல்வர் விஜய் பங்கேற்கும் நிகழ்வு தான் அடுத்து தமிழகத்தில் ஹாட் நியூஸ்.

மேலும் திமுக மீது சவாரி செய்தது போன்று தவெக மீது சவாரி செய்து வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் எம்பிகளை பெற்று விடலாம் என பகல் கனவு கண்டு வந்த காங்கிரஸ் கட்சிக்கு, முதல்வர் விஜய் மற்றும் தவெக நடவடிக்கைகள் ஒவ்வொன்றும், இடியை இறக்குவது போன்று அமைந்து வருகிறது, குறிப்பாக எங்களுக்கு ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்தீர்கள், அதற்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தாச்சு, இனி உங்களுக்கு வேறு என்ன வேண்டும் என்பது போன்று தான் காங்கிரஸ் கட்சியை தவெக டீல் செய்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.