தவெக ஆட்சிக்கு வந்த பின்பு குண்டார் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சவுக்கு சங்கர் விடுதலை செய்யப்பட்ட பின்பு, அதுவரை அதிமுகவையும், எடப்பாடி பழனிசாமியையும் புகழ் பாடி வந்த சவுக்கு, வெளியே வந்த பின்பு எடப்பாடியை கடுமையாக விமர்சனம் செய்து, முதல்வர் விஜய் மற்றும் தவெக அரசை புகழ் பாடி, விஜய்யின் நெருக்கிய வட்டத்தில் உள்ளே நுழைய , யாரை பிடித்தால் முதல்வரின் நெருங்கிய வட்டத்தில் எப்படி ஜான் ஆரோக்கிய சாமி, ஜெகதீஸ் பழனிச்சாமி போன்று இருக்கலாம், என முயற்சி செய்து இருக்கிறார் சவுக்கு சங்கர்.
ஆனால் தவெக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு விஜய்யை எந்த அளவுக்கு வரம்பு மீறி சவுக்கு சங்கர் விமர்சனம் செய்தார், விஜய்க்கு எதிராக எந்த மாதிரி நேரடிவ் செட் செய்தார் என்பதெல்லாம் விஜய்க்கு நன்கு தெரியும், மேலும் தன்னுடைய கஷ்ட காலத்தில் தன்னுடன் இருந்தவர்களை அருகில் வைத்து கொள்ள விரும்பிய விஜய், வெற்றி பெற்றது ஒட்டி கொள்ளலாம் என கூஜா தூக்கி வந்த சவுக்கு சங்கரை அருகில் கூட விஜய் விடவில்லை என கூறப்படுகிறது.

மேலும் இதற்கு முன்பு சவுக்கு சங்கர் எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் விசுவாசமாக இல்லை, அப்படி இருக்கையில் சவுக்கு சங்கருக்கான தவெக கதவு மூடப்பட்டே இருந்தது, இதனை தொடர்ந்து முதலவரின் நெருங்கிய வட்டாரத்தில் நுளைய முயன்ற சவுக்கு சங்கர் முயற்சி தோல்வியை தழுவியதை தொடர்ந்து, சரி தவெக அரசையும், முதல்வர் விஜய்யையும் புகழ்ந்து பேசுகிறார், மாதம் மதம் ஸ்வீட் பாக்ஸ் கொடுக்க என முதல்வர் விஜய்யின் நெருக்கமான வட்டாரத்தை அணுகி இருக்கிறார் சவுக்கு சங்கர்.
அதற்கு ரெட் சிக்கனலே சவுக்கு சங்கருக்கு கிடைத்து இருக்கிறது. இதனை தொடர்ந்து வழக்கம் போல் தனக்கு காரியம் ஆகவில்லை என்றால் அவர்களை மிரட்டும் பணியில் அவர்களுக்கு எதிராக விமர்சனம் செய்ய தொடங்கும் சவுக்கு சங்கர், அதே பணியை முதல்வர் விஜய்க்கு எதிராக , விஜயின் லண்டன் முதலீடு மற்ற சட்டசபை கூட்ட தொடர் போன்றவற்றை விமர்சனம் செய்ய தொடங்கினார்.
ஆனால் மக்கள் மத்தியில் சவுக்கு சங்கருக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பவும் ரூட்டை மாற்றி கொண்டு, விஜயை புகழந்து , விஜய்யை சுற்றி இருக்க கூடியவர்களுக்கு எதிராக பேசி வருகிறார், அப்படித்தான் தற்பொழுது விஜய்யின் ஆலோசகராக, குறிப்பாக விஜய்யின் அரசியல் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஜான் ஆரோக்கிய சாமிக்கு எதிராக பேசி வருகிறார் சவுக்கு சங்கர்.
அதாவது ஜான் ஆரோக்கிய சாமிக்கு எதிராக தொடர்ந்து பேசி வருவதன் மூலம், ஜான் ஆரோக்கிய சாமி இறங்கி வருவார், அதன் மூலம் முதல்வரை வைத்து நாம் நினைத்த காரியத்தை சாதித்து கொள்ளலாம் என சவுக்கு சங்கர் போடும் திட்டம் ஜான் ஆரோக்கிய சாமியிடம் எடுபடவில்லை, மேலும் முதல்வர் விஜய்க்கும் ஜான் ஆரோக்கிய சாமி யார் என்பதும் தெரியும் சவுக்கு சங்கர் யார் என்பதும் தெரியும்.
அப்படி இருக்கையில் இதற்கு முன்பு ஆண்ட கட்சிகளுக்கு எதிராக சவுக்கு சங்கர் விமர்சனம் செய்தால், என்னடா நாய் குரைத்து கொண்டே இருக்கிறது, நாலு எலும்பு துண்டை தூக்கி போடுங்க நாய் குறைப்பதை நிப்பாட்டும் என்பது போன்று அங்கிருந்து எலும்பு துன்டு பறந்து வந்ததும் குறைப்பதை நிப்படுவது போன்ற பார்முலா தவெக விடமும், ஜான் ஆரோக்கிய சாமியிடமும் எடுபடவில்லை.
அந்த வகையில் இதற்கு பல கட்சிகளிடம் தன்னுடைய சேட்டைகளை காண்பித்து வந்த சவுக்கு சங்கருக்கு, தவெக தரப்பில் இருந்து என்ன குட்டி கரணம் போட்டாலும் உன் வேலை எங்ககிட்ட நடக்காது, என சவுக்கு சங்கர் தவெக அமைச்சர்களுக்கு எதிராகவும், ஜான் ஆரோக்கிய சாமிக்கு எதிராகவுக்கு பேசி வருவதை ஒரு பொருட்டாகவே யாரும் கருதவில்லை என்பது மேலும் சவுக்கு சங்கரை வெறி பிடித்த நாய் போன்று மாற்றி, இன்னும் ஆக்ரோசமாக தவெகவின் முக்கிய புள்ளிகளுக்கு எதிராக பேச வைத்துள்ளது என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

