பெண்கள் குறித்து தொடர்ந்து அவதூறு பரப்புவதை வாடிக்கையாக வைத்திருக்கும் சவுக்கு சங்கர், கடந்த 10 வருடங்களுக்கு முன்பு செய்தி வாசிப்பாளர் மஹாலக்ஷ்மி குறித்து அவதூறாக சவுக்கு இணையதளத்தில் சவுக்கு சங்கர் பதிவிட்டதால், பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில் சவுக்கு சங்கருக்கு 3 வருடம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வெளியானது, இதனை தொடந்து இந்த தீர்ப்பை தொடர்ந்து சவுக்கு சங்கர் மேல் முறையீடு செய்தாலும் கூட மேல் முறையீடு தீர்ப்பும் சவுக்கு சங்கருக்கு எதிராக தான் அமையும் என்கிறார்கள் மூத்த வழக்கறிஞர்கள்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தீர்ப்பு வருவதற்கு முன்பே , தனக்கு எதிராக தான் தீர்ப்பு வரும் என்பதால் , முன்கூட்டியே சவுக்கு சங்கர் முதல்வர் விஜய்யின் உதவியை நாட முயற்சித்து இருக்கிறார், முதல்வர் விஜய்யின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கிய சாமி மூலம் முதல்வர் விஜய்யின் உதவியை பெற முயற்சித்து இருக்கிறார் சவுக்கு சங்கர்.

ஆனால் சவுக்கு சங்கர் மீது, கடந்து திமுக ஆட்சியில் , ஆளும் திமுக அரசை எதிர்த்து விமர்சனம் செய்ததால் வழக்கு பதிவு செய்திருந்தால், முதல்வரின் கவனத்துக்கு எடுத்து செல்லலாம், ஆனால் செய்தி வாசிப்பாளர் மகாலக்ஷ்மி குறித்து அவதூறாக பதிவு செய்து அதன் மூலம் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது, மேலும் பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசி அதன் மூலம் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.
இப்படி பெண்கள் குறித்த வழக்கு சவுக்கு சங்கர் மீது உள்ளது , இதை எப்படி முதல்வர் கவனத்துக்கு எடுத்து சென்று உதவி செய்ய முடியும், நிச்சயமாக இதற்கெல்லாம் முதல்வர் விஜய் ஆதரவு தெரிவிக்க மாட்டார், பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம் தான் முதல்வர் நிற்பார், ஆகையால் இந்த விஷயம் குறித்து பேச வேண்டாம் , நீதிமன்றத்தில் பார்த்து கொள்ளட்டும் என ஜான் ஆரோக்கிய சாமி தரப்பு சவுக்கு சங்கருக்கு பதில் கொடுத்து இருக்கிறது.
இதனை தொடர்ந்து சவுக்கு சங்கர் , தவெக அமைச்சர் ஒருவர் மூலம் முதல்வரின் உதவியை நாட முயற்சித்து இருக்கிறார், ஆனால் அங்கேயும் சவுக்கு சங்கருக்கு சரியான பதில் இல்லை, இதனை தொடர்ந்து தனக்கு யாரெல்லாம் பெண்கள் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் உதவி செய்ய முன் வரவில்லையோ, அவர்களுக்கு எதிராக பேச தொடங்கினார் சவுக்கு சங்கர், ஆனால் தவெக தரப்பில் இருக்கும் யாரும் சவுக்கு சங்கரை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.
இதனை தொடர்ந்து பெண் செய்தி வாசிப்பாளர் குறித்து சவுக்கு சங்கர் அவதூறு பரப்பியது தொடர்பான வழக்கில் சவுக்கு சங்கருக்கு 3 வருடம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கி இருக்கிறது, அடுத்து பெண் போலீசார் குறித்து சவுக்கு சங்கர் அவதூறு பரப்பிய வழக்கு நிலுவையில் உள்ளது, நீதிபதிகள் குறித்து சவுக்கு சங்கர் அவதூறாக பேசி இருக்கிறார், இப்படி பல புகார்கள் சவுக்கு சங்கர் மீது நிலுவையில் இருக்கும் நிலையில்,
அடுத்தடுத்து சவுக்கு சங்கர் மீது உள்ள வழக்கின் தீர்ப்பு ஒவ்வொன்றாக வெளியானால், வாழ்நாள் முழுவதும் சவுக்கு சங்கர் சிறையிலே காலத்தை கடத்த வேண்டிய சூழல் உருவாகும் என்கிற அச்சத்தில், கடைசி ஒரு முறையாக மீண்டும் முதல்வர் விஜய் நெருங்கிய வட்டாரத்தில் இருக்கும் ஒருவர் மூலம் சவுக்கு சங்கர் தொடர்பு கொண்டு முதல்வர் விஜய் உதவியை நாடி இருக்கிறார்.
இது முதல்வர் கவனத்துக்கு சென்றதும், இதெல்லாம் ஒரு விஷயம் என்று என் கவனத்துக்கு கொண்டு வாறீங்க, பெண்கள் குறித்து அவதூறாக பேசி இருக்கும் யாராக இருந்தாலும் அதற்கான தண்டனையே பெற்றே ஆக வேண்டும் சட்டம் அதன் கடமை செய்யட்டும், என சவுக்கு விவகாரத்தை முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்றவரை விரட்டி அடிக்காத குறையாக முதல்வர் செம்ம டோஸ் விட்டிருக்கிறார் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.




