அமைச்சர் CTR யை மிரட்டி பார்த்த சவுக்கு… யாரை மிரட்டி பார்க்கிற… சவுக்கு குறித்து விஜய்க்கு போன உளவு துறை ரிப்போர்ட்…

0
Follow on Google News

தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைந்த பின்பு, சவுக்கு சங்கரால் அதிகம் புகழப்பட்ட அமைச்சர்களில் CTR நிர்மல் குமாரும் ஒருவரும், ஆனால் தற்பொழுது தொடர்ந்து அமைச்சர் CTR நிர்மல் குமாருக்கு எதிராக மிக கடுமையான விமர்சனம் செய்து வருகிறார் சவுக்கு சங்கர், இந்நிலையில் சவுக்கு சங்கர் மற்றும் அமைச்சர் CTR நிர்மல் குமார் இடையில் நடந்தது என்ன, சவுக்கு சங்கர் ஏன் CTR நிர்மல் குமார்க்கு எதிராக பேசி வருகிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

தவெக ஆட்சி அமைந்ததும், தவெக அரசை புகழ்ந்து பேசியும், குறிப்பாக சட்டத்துறை அமைச்சர் CTR நிர்மல் குறித்து புகழ் பேசி எப்படியும் காக்கா பிடித்து கடந்த காலங்களில் தன் மீது உள்ள வழக்குகளில் இருந்து தப்பித்து விடலாம் என பல்வேறு குட்டி கரணம் போட்டு வந்துள்ளார் சவுக்கு சங்கர், இதில் சவுக்கு சங்கருக்கு மிக பெரிய நெருக்கடியான வழக்குகளில் இரண்டு முக்கிய வழக்குகள் உள்ளது.

அதில் ஒன்று தமிழக பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கு, மற்றொன்று பெண் செய்தி வாசிப்பாளர் மஹாலக்ஷ்மி குறித்து அவதூறாக பதிவு செய்து, அந்த பதிவை நீக்க பணம் கேட்டு மிரட்டிய வழக்கு, இவை இரண்டுமே பெண்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு என்பதால் சவுக்கு சங்கரை ஆதரிப்பவர்களுக்கும் அவப்பெயரை தான் பெற்று கொடுக்கும்.

இந்நிலையில் தொடர்ந்து அமைச்சர் CTR நிர்மல் குமார்க்கு ஆதரவாக பேசி வந்த சவுக்கு சங்கர் , தன் மீது நிலுவையில் உள்ள வழக்குகளில் இருந்து நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என உதவி கேட்டு இருக்கிறார், ஆனால் அதற்கு அமைச்சர் CTR செவி சாய்க்கவில்லை, ஒரு கட்டத்தில் அமைச்சர் CTR நிர்மல் குமாரை எப்படி என் வழிக்கு கொண்டு வருகிறேன் என்று தொடர்ந்து அமைச்சர் CTR யை விமர்சனம் செய்ய தொடங்கினார் சவுக்கு சங்கர்.

ஒரு கட்டத்துக்கு மேல் தவெக அமைச்சர்களிலே CTR நிர்மலல்குமாரை குறிவைத்து விமர்சனம் என்று சொல்வதை விட, தன் மீது உள்ள வழக்கில் இருந்து விடுபட உதவி செய்யமாட்டேன் என்கிறார் CTR என்கிற சவுக்கு சங்கருக்கு இருந்த வன்மத்தை கொட்டுகிறார் என்று சொல்லும் அளவுக்கு மிக கடுமையாக விமர்சனம் செய்த சவுக்கை துளியளவும் கண்டு கொள்ளவில்லை அமைச்சர் CTR நிர்மல் குமார்.

இதனை தொடர்ந்து குறிப்பாக ஒரு அமைச்சர் அல்லது சட்டமன்ற உறுப்பினர் குறித்து ஒரு செய்தி முதல்வர் விஜய் கவனத்துக்கு செல்கிறது என்றால், உளவுத்துறை மூலம் அந்த செய்தியின் உண்மை தன்மையை ஆராய்ந்து வருவதை தொடர்ச்சியாக முதல்வர் விஜய் செய்து வருவதாக கூறப்படுகிறது. அதே போன்று உளவு துறை மூலம் சவுக்கு சங்கர் குறித்த தகவலும் முதல்வர் விஜய் கவனத்துக்கு சென்று இருக்கிறது.

தன்னுடைய தேவையை பூர்த்தி செய்ய தவெக அமைச்சர்கள் அணுகுகிறார் சவுக்கு சங்கர், சம்பந்தப்பட்ட அமைச்சர் அதை பூர்த்தி செய்யவில்லை என்றால் உடனே அவர்களை மிரட்டும் வகையில் அவர்களுக்கு எதிராக பேசி அவர்களை டேமேஜ் செய்ய தொடங்குகிறார் சவுக்கு சங்கர், தற்பொழுது அமைச்சர் CTR நிர்மல் குமார் விவகாரத்திலும் இதை தான் செய்கிறார் சவுக்கு சங்கர் என்கிற உளவு துறை ரிப்போர்ட் முதல்வர் விஜய் கவனத்துக்கு சென்று இருக்கிறது.

இதனை தொடர்ந்து முதல்வர் தரப்பில் அணைத்து அமைச்சர்களுக்கு ஒரு தகவல் சென்று இருக்கிறது, பதிக்கையாளர் என்கிற போர்வையில் உங்களை மிரட்டி அடிபணிய வைக்க யார் நினைத்தாலும் செவி சாய்க்க வேண்டாம், எதுவாக இருந்தாலும் தீர விசாரித்து தான் எதையும் முடிவு செய்வேன், அதனால் தைரியமாக, துணிந்து உங்கள் வேலையை செய்யுங்கள் என்கிற தகவல் அனைத்து அமைச்சர்களுக்கு முதல்வர் தரப்பில் இருந்து சென்றதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here