எந்த ஒரு பக்கமும் நிலையாக இல்லாமல், மரத்துக்கு மரம் தாவும் குரங்கு போல, தமிழகத்தில் சவுக்கு சங்கர் ஆதரித்து பேசாத அரசியல் கட்சியும் இல்லை, எதிர்த்து பேசாத கட்சியும் இல்லை, அதே போன்று இவர் ஆதரித்து பேசாத தலைவரும் இல்லை, எதிர்த்து பேசாத தலைவரும் இல்லை, அந்த வகையில் சவுக்கு சங்கரை எதிர்ப்பவர்கள் பலரும் இவரை வாய் வியாபாரி என்கிற அடைமொழியில் அழைப்பதை பார்க்க முடியும்,
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2021 சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்கு முக ஸ்டாலின் போன்ற ஒரு தலைவர் இந்த உலகத்திலே இல்லை என்பது போன்று முட்டு கொடுத்தவர் தான் இந்த சவுக்கு சங்கர், 2021ல் திமுக ஆட்சிக்கு வந்த பின்பும் கூட, ஆஹா திமுக அமைச்சரவையே அருமையாக இருக்கிறதே, அட அடடா முதல்வர் முக ஸ்டாலின் மக்கள் திட்டத்தை பாருங்க, இதுக்கு தான் முக ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்று நான் சொன்னேன் என்கிற ரேஞ்சுக்கு திமுகவை புகழ் பாடிய சவுக்கு சங்கர்,

அடுத்த சில மாதங்களில் என்ன மாற்றமோ , என்ன மாயமோ தெரியவில்லை, திமுகவை விமர்சனம் செய்ய தொடங்கியவர்,இடை இடையே, சீமானை புகழ் பாடினார், பாஜகவை கூட புகழ் பாடினார், அடுத்து 2024 நாடளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை 30 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெற வைப்பேன் என களம் இறங்கினார் சவுக்கு சங்கர், ஆனால் ஒரு தொகுதி கூட வெற்றி பெறவில்லை என்றாலும் பரவாயில்லை, பல இடங்களில் அதிமுக டெபாசிட் இழந்தது.
அப்பவாது எடப்பாடி சுதாரித்து கொண்டிருக்க வேண்டாமா, அடுத்து 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் என தொடர்ந்து எடப்பாடி ஒரு இரும்பு மனிதர், அவரை போன்ற ஒரு ஆளுமை இருக்கிறார்கள், என ஒரு பக்கம் புகழ் பாடிய சவுக்கு சங்கர் மறுப்பக்கம் தவெக மற்றும் திமுகவை மிக கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்,
ஆனால் 2026 சட்டசபை தேர்தலில் இருந்த எதிர்கட்சி அந்தஸ்தையும் இழந்தது அதிமுக, தற்பொழுது தமிழ்கத்தில் எங்கே அதிமுக என்கிற நிலையை உருவாக்கியதில் எடப்பாடி பழனிசாமிக்கு எப்படி முக்கிய பங்கு உண்டோ, அதே அளவுக்கு பங்கு சவுக்கு சங்கருக்கும் உண்டு என்று தான் சொல்ல வேண்டும், இதனை தொடர்ந்து நடந்து முடித்த சட்டசபை தேர்தலுக்கு பின்பு, எடப்பாடி பழனிசாமியே விமர்சனம் செய்தார் சவுக்கு,
இதனை தொடர்ந்து தவெக ஆட்சி அமைந்ததும் தவெக அரசையும், முதல்வர் விஜய்யையும் சவுக்கு சங்கர் புகழ் பாடி, திமுகவுக்கு எதிராக பேச, தவெக ஆதரவாளர்கள் ,மற்றும் தவெக தொண்டர்கள் சவுக்கு சங்கரை தூக்கி கொண்டாட தொடங்கினார்கள், ஆனால் பலரும் சவுக்கு சங்கர் சுயரூபம் தெரியாமல் இவர்கள் கொண்டாடி வருகிறார்கள் என எச்சரித்தது போன்று தற்பொழுது சவுக்கு சங்கரின் சுயரூபம் மெல்ல மெல்ல வெளியே வந்து கொண்டிருக்கிறது.
சமீபத்தில் தவெக அரசையும் , முதல்வர் விஜயை விமர்சனம் தொடங்கிய சவுக்கு சங்கருக்கு எதிராக தவெக virtual warriors தரப்பில் இருந்து மிக கடுமையான எதிர்ப்பு கிளம்பு உடனே தன்னுடைய ரூட்டை மாற்றினார் சவுக்கு சங்கர், தவெக அமைச்சர்களை ஒவ்வொருவராக குறிவைத்து விமர்சனம் செய்து, TVK virtual warriors யை ஏமாற்றுவதற்காக அபப்டியே லைட்டா திமுகவை வழிக்காமல் அடிப்பது என்கிற தோரணையில் பேசி வருகிறார் சவுக்கு சங்கர்.
அந்த வகையில் சவுக்கு சங்கரின் எதிர்கால திட்டம் திமுகவை ஆதரிப்பதாக தான் இருக்கும் என்றும், அதற்கு முன்பு தவெக வை டேமேஜ் செய்யும் வேலையை தான் தற்பொழுது செய்ய தொடங்கி இருக்கிறார் என்பது அவரின் நடவடிக்கை மூலம் வெளிப்படுகிறது, ஆகையால் சவுக்கு சங்கரை இனியும் ஆதரித்து தவெக virtual warriors ஏமாற வேண்டாம் என பலரும் எச்சரித்து வருவதை பார்க்க முடிகிறது.

