முதல்வர் விஜய்யின் மதுரை பயணம், இதுவரை எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் கிடைக்காத ஒரு வரவேற்பு மக்கள் மத்தியில் இருந்தாலும் கூட, தவெக தரப்பில் செய்த ஒவ்வொரு விஷயமும் மதுரை மக்கள் மத்தியில் தவெகவுக்கு நன்மதிப்பை பெற்று தந்து இருக்கிறது, குறிப்பாக முதல்வர் விஜய் மதுரை விமான நிலையத்தில் இருந்து மதுரை அரசு மருத்துவமனை வரை செல்லும் வழியில், அதாவது மதுரை விமான நிலையம் வரை மதுரை விரகனுர் வரை சுமார் 10 கிலோமீட்டர் வரை அமைச்சர் CTR நிர்மல் குமார் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் திருப்பரங்குன்றம் தொகுதி,
குறிப்பாக இதற்கு முன்பு திமுக தரப்பில் இருந்து முக ஸ்டாலின், உதயநிதி, அதிமுக தரப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமி யார் மதுரை வந்தாலும் கூட மதுரை விமான நிலையம் முதல் விரகனுர் வரை இருக்கும் ரிங் ரோடு மட்டுமில்லாமல் நகர் பகுதிகளில் கூட கட்சி கோடி , வரவேற்பு பதாகை என பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும், ஆனால் முதல்வர் விஜய்யின் மதுரை பயணத்தில் விஜய் பயணம் மேற்கொண்ட நகர் பகுதிகளில் மட்டுமில்லை,

அமைச்சர் CTR நிர்மல் குமார் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட மதுரை விமான நிலையம் முதல் விரகனுர் வரை இருக்கும் ரிங் ரோட்டில் கூட, வழிநெடுக எந்த ஒரு வரவேற்பு பிளக்ஸ் இல்லை, கட்சி கொடி கம்பம் இல்லை, இது முழுக்க முழுக்க மக்கள் நலம் சார்ந்து தவெக தரப்பில் இருந்து எடுக்கப்பட்ட முடிவு என்கிறது மதுரை தவெக தரப்பு,
மேலும் முதல்வர் விஜய் வருவதற்கு முதல் நாள் சில தவெக நிர்வாகிகள் மதுரை ரிங் ரோட்டில் முதல்வரை வரவேற்கும் விதமாக வைக்கப்பட்ட பிளக்ஸ் குறித்த தகவல் காவல்துறை மூலமாக அமைச்சர் நிர்மல் குமார் கவனத்துக்கு செல்ல, உடனே எந்த ஒரு பிளேஸ்ம் , கொடியும் முதல்வர் விஜய் வரும் வழியில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருக்க கூடாது என , சம்பந்தப்பட்ட கட்சி நிர்வாகிகளை உடனே ரிங் ரோட்டில் இருந்த பிளக்ஸ்ஸை அகற்ற சொல்லி இருக்கிறார் முதல்வர் விஜய்.
அந்த வகையில் முதல்வர் விஜய்யின் இம்முறை மதுரை பயணத்தின் மூலம் , மற்ற அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஒரு பாடத்தை புகட்டி வைத்து விட்டு போயிருக்கிறார், ஒரு அரசியல் கட்சி தலைவராக , முதல்வராக வரும்போது, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிளக்ஸ் , கொடியை வழியெங்கும் நட வேண்டாம் என்பதை உணர்த்தி இருக்கிறார் முதல்வர் விஜய்.
மேலும் மதுரை மக்களும் இந்த நடைமுறையை மிக பெரிய அளவில் பாராட்டி வருகிறார்கள், அது மட்டுமில்லாமல், முதல்வர் விஜய்யின் மதுரை பயணத்தை மதுரையில் எப்படி என்ட்ரி கொடுத்து எக்ஸிட் ஆக வேண்டும் என்பதை மதுரையின் பொறுப்பு அமைச்சராக மிக நேர்த்தியாக திட்டமிட்டு, மக்கள் எந்த ஒரு சிரமம் இன்றி வலியெங்கம் முதல்வர் விஜய்யை பார்க்கும் வகையில் , சின்ன அசம்பாவிதம் கூட நடைபெறாமல் சிறப்பாக செய்து இருக்கிறார் CTR நிர்மல் குமார்.
அந்த வகையில் மக்கள் பாராட்டும் வகையில் இந்த பயணத்தை முன்னின்று சிறப்பாக செய்த அமைச்சார் CTR நிர்மல் குமாரை, மதுரையில் இருந்து திரும்பும் போது, நேரடியாகவே முதல்வர் விஜய் பாராட்டி இருக்கிறார், அதுமட்டுமில்லாமல் விஜய் மதுரை வருகையை பயன்படுத்தி, எதாவது ஒரு விஷயம் சிக்காத , அதை வைத்து அரசியல் செய்ய வாய்ப்பு கிடைக்குமா.? என காத்திருந்த எதிர்க்கட்சிகளுக்கு,
அதற்கான வாய்ப்பை கொடுக்காமல் மிக கவனமாகவே இந்த நிகழ்வை நடத்தி இருக்கிறார் அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், எப்படியோ இந்த கட் அவுட் கலாச்சாரம் ஒழிந்தால் மகிழ்ச்சி என்கிறார்கள் இந்த நிகழ்வை பார்த்த மதுரை மக்கள்.

