40 வருடங்களுக்கு பிறகு நடந்த அதிசயம்… அதுவும் எம் ஜி ஆர்க்கு பிறகு… மதுரையில் விஜய்க்கு நடந்த நிகழ்வு…

0
Follow on Google News

மதுரை அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வாய்த்த முதல்வர் விஜய், எங்கிருந்து மதுரை காந்தி மியூசியம் என்றார், மதுரை அரசு மருத்துவமனையில் இருந்தது காந்தி மியூசியம் வரை மக்கள் அலைகடல் என திரண்டு உற்சாக வரவேற்பை முதல்வர் விஜய்க்கு கொடுத்தனர், சுமார் 10.25 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை நேரில் சென்று திறந்து வைத்த முதலமைச்சர் விஜய்,

அங்கு அமைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், காந்தி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க பொருட்களை முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார். தொடர்ந்து, காந்தியின் வாழ்க்கை மற்றும் அவருடைய கொள்கைகளை எடுத்துரைக்கும் ஆவணப்படத்தையும் திரையில் கண்டு ரசித்தார்.

மேலும், அருங்காட்சியகத்தின் பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்ட முதலமைச்சர் விஜய், காந்தியின் வாழ்க்கை வரலாறு மற்றும் சுதந்திரப் போராட்டத்தில் அவருடைய பங்களிப்பு குறித்து அங்கு இடம்பெற்றிருந்த தகவல்களையும் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து காந்தி மியூசியதில் இருந்து வெளியே வந்த முதல்வர் விஜய்யை காண அலைகடல் என திரண்டு இருந்து மதுரை மக்களை பார்த்து உற்சாகமாக கை அசைத்தார் விஜய்.

முதல்வர் விஜய்யின் மதுரை வருகை, இத என்ன சித்திரை திருவிழாவா என்று சொல்லும் அளவுக்கு மதுரையில் ஆற்றில் அழகர் இறங்குவதை பார்க்க மக்கள் கூடும் கூட்டம் போல , முதல்வர் விஜயை பார்க்க மக்கள் அலைகடல் வெள்ளமென திரண்டு நிற்க்க, அந்த மக்கள் வெள்ளத்தில் முதல்வர் விஜய் மிதந்து சென்ற காட்சி, சுமார் 40 வருடங்களுக்கு முன்பு எப்படி எம் ஜி ஆர் க்கு மதுரையில் மக்கள் கூட்டம் கூடியதோ,

அதே போன்று தற்பொழுது முதல்வர் விஜய்க்கு மக்கள் கூட்டம் கூடி இருக்கிறது, அந்த வகையில் சுமார் 40 வருடங்களுக்கு பிறகு மதுரையில் ஒரு அரசியல் தலைவருக்கு, ஒரு முதல்வருக்கு இவ்வளவு பெரிய மக்கள் கூட்டம் கூடி இருக்கிறது என்றால், அது முதல்வர் விஜய்க்கு தான் என்பதை வரலாறு பதிவு செய்து இருக்கிறது, அதுவும் மதுரை காரங்க பாசக்கரங்க என்பதை நிரூபிக்கும் வகையில் முதல்வர் விஜய்க்கு மதுரை மக்கள் கொடுத்த உற்சாக வரவேற்பு வெளிப்படுத்தியது.

எதிர்க்கட்சிகள் எத்தனை விமர்சனங்களை முதல்வர் விஜய் மீது அள்ளி எரிந்தாலும் கூட, மக்கள் மத்தியில் இன்னும் விஜய் கான செல்வாக்கு குறையவில்லை என்று சொல்வதை விடம் மேலும் விஜய்க்கான செல்வாக்கு அதிகரித்து இருக்கிறது என்பதை உணர்த்தி இருக்கிறது முதல்வர் விஜய்க்கு மதுரை மக்கள் கொடுத்த உற்சாக வரவேற்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here