பாசத்துல மதுரைகாரங்களை அடிச்சுக்க முடியாது… கண்கலங்கிய தாய்மார்கள்… பதிலுக்கு விஜய் செய்த செயல்..

0
Follow on Google News

தாய் மாமன் பாசத்துல மதுரைக்காரனுகள அடிச்சுக்க ஆளே இல்லை என்பது போன்று, சீர் கொண்டு வரும் தாய்மாமனுக்கு வரவேற்பு கொடுப்பதிலும் மதுரைக்காரனுகள அடிச்சுக்க ஆளே இல்லை, அது போன்று தான் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை தொடங்கி வைக்க மதுரை வந்த முதல்வர் விஜய்க்கு மதுரைகாரங்க கொடுத்த பாசத்துடனான வரவேற்பு, அடடே இதை பார்க்க இரண்டு கண் போதாது என்று தான் சொல்ல வேண்டும்,

ஒரு முதல்வர் என்கிற எண்னம் சிறிதளவும் கூட பொருட்படுத்தாமல், மதுரை மக்கள் கட்டி பிடிக்க ஓடி வந்தால் அவர்களை பாசத்துடன் அரவணைத்த முதல்வர் விஜய்யின் அந்த அரவணைப்பு, கை கொடுக்க வந்தாலே தட்டிவிட்டு அரசியல் வாதிகளுக்கு படமாக அமைத்துள்ளது, அதுமட்டுமில்லாமல், பேருந்தில் பயணம் செய்த தமிழகத்தின் மூத்த அரசியல் வாதி ஒருவரிடம் செல்பி எடுக்க முயன்ற நபரை கன்னத்தில் அடித்த அந்த அரசியல்வாதி எங்கே.

மதுரை மக்கள் செல்பி எடுக்க ஆர்வமாக இருப்பதை பார்த்து, அவர்கள் கைபேசியை வாங்கி, முதல்வர் விஜய்யே செல்பி எடுத்து மக்களோடு மக்களாக மகிழ்ந்த காட்சி எங்கே என்று சொல்லும் வகையில் இவர் தான் மக்களின் முதல்வர், மக்களோடு மக்களாக இருக்கும் முதல்வர் என விஜய்யின் மதுரை வருகையின் போது அவரின் செயல்பாடுகளால் விஜய்யை கொண்டாடி வருகிறார்கள் மதுரை மக்கள்.

பொதுவாகவே மதுரை மக்களுக்கு அண்ணன் – தங்கை, அக்கா தம்பி பாசத்தை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வாக தான் தாய் மாமன் சீர் இருக்கும், அப்படி அண்ணன் ஒரு பக்கம் தாய் மாமன் சீர் கொண்டு வந்து சபையை நிரப்பும் வகையில் பட்டையை கிளம்பினாலும் கூட, தங்கை அண்ணனை அனந்த கண்ணீருடன் வரவேற்கும் அந்த காட்சிகள் சொல்லும், அண்ணன் – தங்கையின் பாசம் என்ன என்பதை,

அதுபோல முதல்வர் விஜய் தொடங்கி வைத்த தாய்மாமன் தங்க மோதிர திட்ட தொடக்க விழாவில், குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்த போது, அந்த தாய்மாமன் சீரை பெற்று கொண்ட குழந்தையின் தாய்மார்கள், சொந்த அண்ணன் கொன்டு வந்த தாய் மாமன் சீர் போன்று ஏற்று கொண்டு, அனந்த கண்ணீரில் விஜய்யை கட்டி பிடித்து அன்பை பரிமாறிக்கொண்ட நிகழ்வு பார்ப்பதற்கே எமோஷனலாக இருந்தது.

குறிப்பாக மதுரையில் நடந்த தாய்மாமன் தங்க மோதிர திட்டம் என்பது, ஒரு அரசாங்கம் இந்த நிகழ்வை நடந்துகிறது, அதை தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார் என்பது போன்று இல்லாமல், ஒரு கட்சியில் தலைவர் இந்த நிகழ்வை தொடங்கி வைக்கிறார் என்பது போன்றும் இல்லாமல், சகோதரிகளுக்கு குழந்தை பிறந்து இருக்கிறது, அண்ணனாக விஜய் , ஒரு தாய் மாமனாக தங்கையின் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் போடும் விதமாக இந்த தாய் மாமன் தங்க மோதிர திட்டத்தை தொடங்கி வைத்து இருக்கிறார் என்கிறார்கள் மதுரை மக்கள்.

மேலும் ஒரே வியக்கும் வகையில் தாய்மாமன் சீர் கொண்டு வந்தால், வீட்டின் வெளியே வந்த அதை பார்த்து வியந்து பார்ப்பார்கள் ஊர் மக்கள், அது போன்று தான் மதுரை விமான நிலையம் முதல், மதுரை அரசு மருத்துவமனை வரை விஜய்யின் வருகையை மதுரை மக்கள் பார்த்தது மகிழ்வது போன்று ஒரு பக்கம் அமைத்தாலும் கூட, மதுரையில் விஜய் கொண்டு வந்த இந்த தாய் மாமன் சீர், மற்றும் ஒரு சித்திரை திருவிழாவாக அமைந்தது.

தேர்தல் முடிந்து முதல் முறையாக மதுரை வந்த முதல்வர் விஜய்க்கு மதுரை மக்கள் கொடுத்து வரவேற்பு, இதுவே தேர்தலுக்கு முன்பு விஜய் மதுரை வந்து இருந்தால், மதுரையில் உள்ள 10 தொகுதிகளில் 8 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக மதுரையில் 10க்கு 10 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here