அரசு பணம் வேண்டாம் … சொந்த பணத்தை கொடுத்த விஜய்… இந்தியாவே திரும்பி பார்க்கும் தமிழக முதல்வர்…

0
Follow on Google News

இதுவரை தமிழகத்தில், ஏன் இந்தியாவிலே இப்படி ஒரு முதல்வர் இல்லை என்று சொல்லும் அளவுக்கு தமிழக முதல்வர் விஜய்யின் செயல்பாடுகள் அமைத்துள்ளது, குறிப்பாக இந்தியாவில் உள்ள மற்ற மாநில முதல்வர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழும் தமிழக முதல்வர் விஜயின் செயல்பாடு, இந்தியாவில் உள்ள மற்ற முதல்வர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது, மேலும் இவருக்கு பணத்தின் மீது ஆசையே இல்லையா என்று ஆச்சரியப்பட வைத்து இருக்கிறது.

முதல்வர் விஜய், அரசியலில் என்ட்ரி கொடுத்த போதே, நான் பணம் சம்பாரிக்க அரசியலுக்கு சம்பாரிக்க வரவில்லை, சினிமாவில் கேரியரில் உச்சத்தை விட்டுட்டு அரசியலுக்கு வந்திருக்கிறேன் என பேசிய போது, ஒரு படத்துக்கு 200 கோடி 300 கோடி சம்பளம் வாங்கும் விஜய் அதையே வேண்டாம் என்று விட்டுட்டு வருகிறார் என்றால், நிச்சயம் இவர் மக்களுக்கு நல்லது செய்ய தான் வருகிறார் என்று விஜய் அரசியல் வருகையை ஆதரித்தார்கள்.

ஆனால் சிலரோ, எல்லாம் ஆட்சியை பிடிக்கும் முன் இப்படி தான் பேசுவார்கள், பின்பு ஆட்சிக்கு வந்த பின்பு, வழக்கம் போல் கொள்ளை அடிக்க ஆரம்பித்து விடுவார்கள், அதில் விஜய் ஒன்றும் விதிவிலக்கு அல்ல என கருத்துக்களை தெரிவித்தவர்கள், மற்ற அரசியல்வாதி போல் இந்த விஜய் இல்லை என மக்கள் பணத்தை, அரசு பணத்தை ஒரு ரூபாய் கூட தொடமாட்டேன் என்று சொன்னது போன்று செய்து கொண்டு இருக்கிறார் முதல்வர் விஜய்.

இதில் மக்கள் பணத்தை தொடவில்லை என்றாலும், கூட தனக்கு கிடைத்த அரசாங்க சலுகையை கூட வேண்டாம், என் சொந்த பணத்தை கொடுக்கிறேன் என முதல்வர் விஜய் செய்தது தான் ஹை லைட். முதல்வராக விஜய் பதவி ஏற்ற பின்பு, அவருடைய பயண செலவு எல்லாமே அரசு பணத்தில் செலவு செய்யலாம் என்பது விதி, அந்த வகையில் விஜய் வெளிநாடு செல்வதாக இருந்தாலும், அல்லது உள்நாட்டில் வேறு மாநிலத்திற்கு செல்வதாக இருந்தாலும்,

விமானத்தில் பயணிக்கும் முதல்வர் விஜயின் செலவை அரசே ஏற்று கொள்ளும், அந்த வகையில் முதல்வராக விஜய் பதவி ஏற்ற பின்பு, இரண்டு முறை டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார், அப்போது தனியாக சாட்டட் பிளைட்டில் சென்றார் முதல்வர் விஜய், அவருடைய பாதுகாப்பு காரணமாக சாட்டட் பிளைட்டில் பயணித்தார் விஜய், இந்நிலையில் பலரும் விஜய் டெல்லிக்கு சாட்டட் பிளைட்டில் சென்றதால் அதிக செலவு ஆகுமே என்றால் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் முதல்வர் விஜய் டெல்லி சென்ற போது அவர் பயணித்த சாட்டட் விமானத்திற்கான கட்டணத்தை அரசு பணத்தில் இருந்தே கொடுக்கலாம் என விதிமுறை இருந்தாலும் கூட, விஜய் பயணித்து சாட்டட் விமானத்தின் கட்டணத்தை அவரே கொடுத்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது, அந்த வகையில் தான் சினிமாவில் சம்பாரித்த பணம் தன் கைவசம் அதிகமாக இருக்கிறது, அதுவே எனக்கு போதும்,

மேலும் அந்த பணத்தின் மூலமாக எனக்கு வருமானமும் வருகிறது, இந்த பணத்தையெல்லாம் வைத்து என்ன செய்யப்போகிறேன், என்கிற பறந்த மனப்பான்மையுடன், தான் பயணித்த சாட்டட் விமானத்தின் கட்டணத்தை அரசு பணம் வேண்டாம் என்னுடைய பணத்தை கொடுக்கிறேன் என தமிழக முதல்வர் விஜய் கொடுத்து இருப்பது இது என்னப்பா சம்பாரிக்க தெரியாத ஆளா இருக்காரே என அரசியலை வியாபாரமாக பார்க்கும் அரசியல்வாதிகள் நினைத்து கொண்டாலும்,

மக்கள் மத்தியில் முதல்வர் விஜயின் இந்த செயல்பாட்டுக்கு அவருடைய செல்வாக்கு மேலும் அதிகரித்து இருக்கிறது. அந்த வகையில் இதே போன்று இதற்கு முன்பு தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் நடந்து கொண்டிருந்தால், தமிழகத்தின் கடன் சுமை ஆதரிகரித்து இருக்காது என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள், அந்த வகையில் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக திகழ்கிறார் முதல்வர் விஜய்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here