நடைபெற்று கொண்டிருக்கும் தாராபுரம், மதுராந்தகம் சட்டசபை இடைதேர்தல் முடிந்ததும் தவெக அமைச்சரவையில் அதிரடி மாற்றம் நடைபெற இருக்கிறது. குறிப்பாக பல சர்ச்சை அமைச்சர்கள் பதவி பறிக்கப்பட்டு, மேலும் புதியதாக அமைச்சரவையில் சிலருக்கு முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மத்தியில் மிக பெரிய பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.
முதல்வர் விஜய் கைவசம் தற்பொழுது 10க்கு மேற்பட்ட துறை உள்ளது, இதில் உள்துறை மற்றும் காவல்துறை, அடுத்ததாக இந்திய ஆட்சிப் பணி (IAS), இந்திய காவல் பணி (IPS), இந்திய வனப் பணி (IFS) ஆகிய உட்பட சில துறைகள் முதல்வர் கைவசமே இருக்கும் என்றும், இதில் முதல்வர் கைவசம் இருக்கும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உட்பட சில துறைகள் அமைச்சர்களுக்கு பகிர்ந்து கொடுக்கவும், மேலும் புதியதாக அமைச்சரவையில் இடம் பெரும் நபர்களுக்கு கொடுக்கவும் முதல்வர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில் பள்ளி கல்வி துறை அமைச்சராக இருக்கும் ராஜ்மோகன் கைவசம் இருக்கும் துறையை வேறு ஒருவருக்கு கொடுத்துவிட்டு , முதல்வர் கைவசம் இருக்கும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையை ராஜ்மோகனுக்கு கொடுக்க முதல்வர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் புதியதாக அமைச்சரவையில் இடம் பெற கூடியவர்கள், முதல்வர் விஜய் உடன் மக்கள் மன்றம் தொடங்கி காலத்தில் இருந்து வந்தவர்களுக்கே வாய்ப்பு என உறுதியாக இருக்கிறாராம் முதல்வர் விஜய்.
இந்நிலையில் சென்னையில் இருக்கும் ஒரு அமைச்சர் சர்ச்சையில் சிக்கிய விவகாரம் எதிர்கட்சிகள் போராட்டம் வரை எடுத்து சென்றது, அப்போதே அந்த அமைச்சர் பதவியை பார்த்தால் திமுக மிரட்டலுக்கு அடிபணித்தது போன்றாகிவிடும் என்பதால் மௌனம் காத்த முதல்வர் விஜய் அடுத்து அமைச்சரவை மாற்றத்தில் அவருடைய பதவியை பறிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
அதே போன்று ஒரு பெண் அமைச்சர் பதவியும் பறி போக வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகி உள்ளது, ஆக மொத்தம் 3 அமைச்சர்கள் பதவியை பறிக்க முடிவு செய்துள்ள விஜய், மதுரையை சேர்ந்த ஒருவருக்கு புதிய அமைச்சரவையில் இடம் கொடுக்க முடிவு செய்துள்ளாராம் முதல்வர் விஜய், மக்கள் மன்றம் தொடங்குவதற்கு முன்பு , விஜய் ரசிகர் மன்றம் இருந்த காலத்தில் இருந்து தடம் மாறாமல் பயணிக்கு அந்த மதுரையை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க முடிவு செய்துள்ளார் முதல்வர் விஜய் என தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் ஒரு சில அமைச்சர்கள் பதவி பறிபோகும் என வெளியான தகவலை தொடர்ந்து , தங்கள் அமைச்சர் பதவியை தக்க வைத்து கொள்ள , யாரை பிடித்தால் சரியாகும் என சில அமைச்சர்கள் ஓடி கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், மறுப்பக்கம், புதியதாக அமைச்சரவையில் இடம் பெற கூடியவர்களை உள்ளே விட கூடாது என ஒரு தரப்பும் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இருந்தும், முதல்வர் விஜய் எடுக்கும் முடிவே இறுதியானதாக இருக்கும் என்றும், அந்த வகையில், புதியதாக ஆட்சி அமைந்த போது அமைச்சரவையில் புதியதாக வாய்ப்பு கொடுத்து பார்ப்போம் என்பது போன்று இனி இல்லாமல், உளவு துறைமூலம் தகவலை சேகரித்து தற்பொழுது அமைய இருக்கும் புதிய அமைச்சரவையை முதல்வர் தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் பல வருடங்களாக ரசிகர் மன்றம் காலம் தொட்டு தன்னுடன் பயணிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோரை ஓரம் கட்டும் விதமாக மாற்று கட்சியில் இருந்து வந்தவர்கள் ஆதிக்கம் செலுத்துவதை முதல்வர் விஜய் விரும்பவில்லை என்றும், ஆகையால் நடைபெற்று கொண்டிருக்கும் இடைதேர்தலுக்கு பின்பு பல அதிரடி மாற்றங்கள் தவெக வில் நடக்கும் என்கிறது கோட்டை வட்டாரங்கள்.

