கடும் பீதியில் உதயநிதி … ரத்தீஷ் இருக்கும் இடம் கண்டுபிடிப்பு… ஆனால் விஜய்க்கு இருக்கும் சிக்கல்…

0
Follow on Google News

டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் தப்பி வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நபரான ரத்தீஷ் இருக்கும் இடம், உளவு துறை மூலமாக முதல்வர் விஜய் கவனத்துக்கு சென்று இருக்கிறது, ஆனால் வெளிநாடுகளில் பதுங்கி இருக்கும் ராத்தீசை கைது செய்து தமிழகம் அழைத்து வருவதில் பல சிக்கலை எதிர்கொண்டு இருக்கிறது தவெக அரசு.

அதாவது ரத்தீஷ் கைது செய்யப்பட்டு விசாரணையை மேற்கொண்டால், அந்த விசாரணை மூலம், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மட்டுமில்லை, பல திமுக முன்னாள் அமைச்சர்கள் கைது செய்வதற்கான வாய்ப்பு அதிகம், குறிப்பாக ரத்தீஷ் கைது செய்தால் உதயநிதி கைது என்பது உறுதி என்பதால் தற்பொழுது , ரத்தீஷ் எந்த வகையில் சிக்கி விட கூடாது என்பதில், ரத்தீஷை வெளிநாடுகளில் பாதுகாப்பாக இருப்பதற்கான அணைத்து வேலைகளையும் முதல் குடும்பம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த திமுக ஆட்சியில் கொள்ளை அடிக்கப்பட்ட பெரும்பாலான ஊழல் பணம் ரத்தீஷ் மூலம் துபாயில் தான் முதலீடு செய்யப்பட்டு இருக்கிறது, அந்த வகையில் துபாயில் பல கோடி முதலீடு செய்துள்ள ரத்தீஷை, அந்த நாடு தங்கள் நாட்டின் முதலீட்டராக பார்க்கிறது, மேலும் துபாய் நாட்டின் கோல்டன் விசாவை பெற்று இருக்கும் ரத்தீஷ், துபாயில் தங்குவதற்கு சகல வசதியும் கிடைத்து வருகிறது.

மேலும் துபாயில் கோல்டன் விசா வைத்திருக்கும் ரத்தீஷ் இந்தியாவுக்கு வரவேண்டிய அவசியமே இருக்காது. இருந்தாலும் துபாயில் இருந்து ரத்தீஷ் வெளியேற்றப்படவேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டால் கூட இந்தியா வந்து விட வேண்டாம் என முதல் குடும்பத்திடம் இருந்து ரத்தீஷ் க்கு உத்தரவு பறந்து இருக்கிறதாம், அதாவது தமிழகத்தில் தவெக ஆட்சி இருக்கும் வரை இந்தியா வந்துவிட வேண்டாம்.

நம்ம பாஜக கையில் காலில் விழுந்து அமலாக்க துறையை சரி செய்தாலும் கூட, விஜய்யை சரி செய்ய முடியாது போல, அதனால் ரத்தீஷ் இந்தியா வந்தால், தற்பொழுது இருக்கும் தவெக அரசால் உதயநிதிக்கு தான் சிக்கல், மேலும் பல அரசு உயர் அதிகாரிகள் கடந்த திமுக ஆட்சியில் நடந்த ஊழல் விவகாரங்களை தவெக அரசிடம் போட்டு கொடுத்து விட்டார்கள், தற்பொழுது முதல்வர் விஜய் கையில் மொத்த ஆதாரமும் சிக்கி இருக்கிறது.

ஆகையால் தற்பொழுது விஜய்யின் ஒரே டார்கெட் ரத்தீஷ் தான், ரத்தீஷ் தலைமைறைவாக இருக்கும் வரை தான் முதல் குடும்பத்திற்கு பாதுகாப்பு, இல்லை என்றால் முதல் குடும்பத்தை நோக்கி கைது நடவடிக்கை பாயும் என்பதால், லக்ஸம்பர்க் என்றோரு நாடு இருக்கிறது, அந்த நாட்டில் இந்தியா மதிப்பில் சுமார் 5 கோடி fixed டெபாசிட் செய்தால் 5 வருடத்திற்கு அந்த அந்த நாட்டில் தங்குவதற்கான குடியுரிமையை பெறலாம்.

மேலும் அந்த நாட்டில் இருந்து கொண்டு சுமார் 29 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் மேற்கொள்ளலாம், ஆகையால் தற்பொழுது துபாயில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டால் ரத்தீஷை பாதுகாப்பாக லக்ஸம்பர்க் என்கிற நாட்டிற்கு குடியமர்த்தும் வேலையும் கட்சிதமாக செய்து முடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் தற்பொழுது இந்தியா அராஜகம் ரத்தீஷ்க்கு கொடுக்கப்பட்டுள்ள லுக் அவுட் நோட்டீஸ் என்பது, ரத்தீஷ் விமான மூலம் பயணிக்கு விமான நிலையம் வந்தால், அங்கே குடியுரிமை அதிகாரியால் கைது செய்யப்படலாம், ஆனால் ஒரு நாட்டில் இருந்து வேறு ஒரு நாட்டிற்கு தரை மார்க்கமாக ரத்தீஷ் பயணிக்கவும் வாய்ப்பு அதிகமாக உள்ளதால், தவெக ஆட்சி முடியும் வரை இந்தியா வரமாட்டார் ரத்தீஷ் என்பது மட்டும் உறுதியாகி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here