நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்பு தமிழக அரசியல் களம் தலைகீழாக மாறி இருக்கிறது. கடந்த 50 வருடங்களுக்கு மேலாக அதிமுக – திமுக என இருந்த தமிழக தேர்தல் களம், தற்பொழுது தவெக மற்றும் யார் என்கிற நிலை உருவாகி இருக்கிறது. இதில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின்பு அதிமுக இருந்த இடம் தெரியாமல் கரைந்து கொண்டிருக்கிறது, சீமானுக்கான வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளது.
திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை தக்க வைத்து இருக்கிறது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு அதிமுக சல்லி சல்லியாக உடைத்து தற்பொழுது அதிமுக அவ்வளவு தான் என்று சொல்லும் நிலைக்கு தள்ளப்பட காரணமாக இருந்தது தவெக தான் என்கிற கோபம் எடப்பாடி பழனிசாமிக்கு உண்டு. குறிப்பாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களிடம் நடத்திய தவெக நடத்திய குதிரை பேரம் தான் அதிமுக சல்லி சல்லியாக உடைய காரணம் என குமுறுகிறது அதிமுக தரப்பு.

அந்த வகையில் தவெக வை வீழ்த்த திமுக உடன் கூட கைகோர்க்க தயாராகி விட்டது அதிமுக என்கிற தகவல் வெளியாகி உள்ளது. அதே போன்று ஏற்கனவே முதல்வர் விஜய் மீது சீமானுக்கு இருந்து விமர்சனம் தற்பொழுது இன்னும் அதிகரித்துள்ளது. குறிப்பாக விஜய்யை முதல்வர் நாற்காலிலயில் இருந்து அகற்ற திமுக உடனே கை கோர்க்க தயாராகிவிட்டார் சீமான் என தகவல் வெளியாகி உள்ளது.
இதில் சமீப காலமாக திமுகவை விமர்சனம் செய்வதை தவித்து வரும் தமிழக பாஜக, முழு நேரமும் தவெக வை விமர்சனம் செய்து வருகிறது. அந்த வகையில் வரும் 2029 நாடாளுமன்ற தேர்தலில் திமுக உடன் பாஜக கூட்டணி சேர இருக்கிறது என்கிறது அரசியல் வட்டாரங்கள். அந்த வகையில் தற்பொழுது தமிழக அரசியலில் தவெக வுக்கு எதிராக, திமுக பின்னால் அதிமுக, சீமான், பாஜக போன்ற கட்சிகள் அணிவகுக்க தயாராகி விட்டது என்கிறது அரசியல் வட்டாரங்கள்.
இதனை தொடர்ந்து வரும் சட்டமன்ற இடைதேர்தலில் , தவெக முழுமையாக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றால், மேலும் தவெக செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்து விடும் என திட்டமிட்டும் எதிர்கட்சிகள், வரும் சட்டசபை தேர்தலில் தற்பொழுது காலியாக உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் குறைந்தது 4 தொகுதிகளில் எதிர்கட்சிகள் வெற்றி பெறவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் அம்பா சமுத்திரம் தொகுதியில் சீமானை பொது வேட்பாளராக நிறுத்தலாம் என அதிமுக – திமுக தரப்பு இடையில் பேச்சுவார்த்தை நடந்து இருக்கிறது, மேலும் அதிமுக – திமுக இரண்டு கட்சிகளும் வரும் இடை தேர்தலில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் அல்லது, அதிமுக இடைதேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டு, திமுக வெற்றிக்கு வேலை செய்யவேண்டும் என திமுக -அதிமுக இடையில் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் பாஜக இப்போதைக்கு சீனுக்கு உள்ளே வரவேண்டாம் உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு திமுக உடனான கூட்டணியை உறுதி செய்துவிட்டு , 2029 நாடாளுமன்ற தேர்தலை நோக்கி பயணம் செய்வோம், என திமுக – பாஜக இடையில் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் நடைபெற இருக்கும் சட்டசபை இடை தேர்தலில் எதாவது ஒரு தொகுதியில் முக ஸ்டாலினை போட்டியிட வைத்து சட்டமன்றத்துக்கு அனுப்பியே தீருவோம் என திமுக மேல்மட்ட தலைவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.
இப்படி பரபரப்பான திமுக அரசியலில், தவெகவை வீழ்த்த திமுக – அதிமுக – பாஜக என அனைத்து எதிர்கட்சிகளும் ஒரே குடைக்குள் இணைய தொடங்கி இருக்கிறது, வரும் இடைதேர்தல் மூலம் தவெக செல்வாக்கை இழக்க செய்ய எதிர்க்கட்சிகள் ஒன்றிணைத்துள்ள நிலையில், தவெக இதை எப்படி எதிர்கொள்ள போகிறது என்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

