தற்பொழுது ஆட்சியில் இருக்கும் தவெக மற்றும் எதிர்கட்சியாக இருக்கும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே மத்தியில் ஆளும் பாஜகவின் துணை அவசியமாக உள்ளது, திமுகவை வழக்கு மேல் மேல் வழக்கு போட்டு தவெக அரசு ஒடுக்க வேண்டும் என்றால் அதற்கு மத்தியில் இருக்கும் பாஜக அரசு துணை வேண்டும் , அல்லது தவெக அரசு எத்துணை வழக்கு போட்டாலும் திமுகவுக்கு பாஜக ஆதரவு இருந்தால் போது திமுகவை அசைக்கமுடியாது,
அதே நேரத்தில் தவெக போடும் வழக்குகளை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டும் என்றால் மத்தியில் ஆளும் பாஜக துணை திமுகவுக்கு இன்று அதியவசியமாக உள்ளது. காரணம் 2001ல் அப்போது ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டத்தில் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டதை யாரும் மறந்து இருக்க முடியாது. அப்போது கர்நாடகாவில் முக ஸ்டாலின் தலைமறைவாக இருந்தார் என்றெல்லாம் செய்திகள் வெளியானது.

இருந்தாலும் அப்போது மத்தியில் ஆண்ட வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு உடன் திமுக கூட்டணியில் இருந்ததால் தான் அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள் எதுவுமின்றி திமுகவால் தப்பிக்க முடிந்தது, இந்நிலையில் தற்பொழுது பாஜகவுடன் கூட்டணி அவசியம் என்பதை கருதி பாஜக பக்கம் நெருக்கி சென்று கொண்டிருக்கிறது திமுக என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
அதே நேரத்தில் டெல்லி பாஜகவிடம் முதல்வர் விஜய்யும் நெருக்கமாக இருக்க விரும்பினாலும் கூட, காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருக்கும் தமிழக முதல்வர் விஜய் உடனான நெருக்கத்தை டெல்லியில் இருக்கும் பாஜக விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. இந்நிலையில் தொகுதி மறுசீரமைப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டால் அதில் திமுக எம்பிக்கள் ஆதரவு கொடுத்தால் மட்டுமே அந்த மசோதா வெற்றி பெரும்.
இப்படியான ஒரு சூழலில் தற்பொழுது திமுக உடனான பாஜக பேச்சுவார்த்தை திரைமறைவில் அரங்கேறி வருவதாகவும், திமுக தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு ஆதரவு தருகிறோம் என்று உறுதி கொடுத்தால் மேட்டுமே அந்த மசோதாவை தாக்கல் செய்ய பாஜக திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக காங்கிரஸ் – பாஜக என யாருடன் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டது, ஜெயலலிதா லேடியா.? மோடியா.? என பிரச்சாரம் செய்த தேர்தல் அது, அதில் ஒரு தொகுதி கூட திமுக வெற்றி பெறவில்லை, இந்நிலையில் தேசிய கட்சியுடன் கூட்டணியில்லாமல் திமுக 1 தொகுதி கூட வெற்றி பெறவில்லை என்பதே கடந்த கால வரலாறு.
அந்த வகையில் வெறும் 2029 நாடளுமன்ற தேர்தலில் பாஜக உடன் திமுக கூட்டணி என்பது திமுகவுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. இந்நிலையில் டெல்லியில் கனிமொழி பாஜக உடனான நெருக்கத்தை உடைத்து, இனி டெல்லி பாஜக உடனான நெருக்கத்தை சபரீசன் ஏற்படுத்தி கொண்டு டெல்லி அரசியலை பார்த்து கொள்ளட்டும் என்று கனிமொழியை ஓரம் கட்டும் முடிவுக்கு வந்திருக்கிறது திமுக முதல் குடும்பம் என தகவல் வெளியாகி உள்ளது.
அதே நேரத்தில் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு திமுக ஆதரவு அளிக்கும் பட்சத்தில் திமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்படும் என்றும், அதனை தொடர்ந்து நடைபெறும் அமைச்சரவை மாற்றத்தில் திமுகவை சேர்ந்த எம்பிக்கள் அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்புள்ளது என்கிறது டெல்லி வட்டாரங்கள். ஆனால் யார் அந்த அமைச்சரவையில் இடம்பெற போகும் திமுக எம்பி என்கிற விவாதம் திமுக உள்ளே அனல் பறக்க தொடங்கி இருக்கிறது .

