கடந்த 2021 திமுக ஆட்சிக்கு வந்த பின்பு, திமுகவுக்கு எதிராக சமூக வலைதளத்தில் கருத்துக்களை பேசி வந்தவர்கள் குறிவைத்து கைது செய்யப்பட்டு வந்தனர், அந்த வரிசையில் திமுக ஆட்சியில் குறிவைக்கப்பட்டவர் தான் கார்த்திக் கோபிநாத், பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் மதுரகாளியம்மன் கோவில் சிலைகளை 2021ம் ஆண்டு மர்ம நபர்கள் உடைத்ததாக எழுந்த புகாரால் பெரும் சர்ச்சை வெடித்தது.
அப்போது மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர்.இதனை தொடர்ந்து அப்போது பாஜக ஆதரவாளரும் யூ டியூபருமாக இருந்த கார்த்திக் கோபிநாத் இணையம் மூலம் சிறுவாச்சூர் கோவிலை புனரமைக்கும் முயற்சியில் இறங்கியவர், அதற்காக தனியாக ஒரு செயலியை உருவாக்கி நிதியும் திரட்டினார்.

இந்நிலையில் திமுகவுக்கு எதிராக கருத்துக்களை மக்கள் மத்தியில் பேசி வரும் கார்த்திக் கோபிநாத் எதுலயாவது சிக்க மாட்டாரா , அதில் வைத்து தூக்கி உள்ளே போட்டு விடலாம் என குறி வைத்த திமுக, சிறுவாச்சூர் கோவில் நிதி வசூல் செய்யும் விவகாரத்தில் மோசடி செய்துள்ளதாக வழக்கு பதிவு செய்து கைது செய்தது, இது தொடர்பாக அப்போதைய பாஜக மூத்த தலைவர்கள் பலரும் கடும் கண்டனத்தை பதிவு செய்ததை தொடர்ந்து.
இந்நிலையில் இதுதொடர்பாக கோவில் செயல் அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில், ஆவடி காவல் ஆணையரகத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு கார்த்திக் கோபிநாத் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கார்த்திக் கோபிநாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி முன்பு இறுதி விசாரணைக்கு வந்தது.
கார்த்திக் கோபிநாத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிநவ் பார்த்தசாரதி, கோவில் நிதியை முறைகேடாக பயன்படுத்தும் எந்த நோக்கமும் தனது மனுதாரருக்கு இல்லை என வாதிட்டார். அதிகாரிகளிடம் முன் அனுமதி பெறவில்லை என்பதுதான் அவருக்கு எதிரான முக்கிய குற்றச்சாட்டு என்றும், வசூலிக்கப்பட்ட பணம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை என்றும் தெரிவித்தார்.
இதற்கு காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர். ராஜசேகரன், மிலாப் செயலி மூலம் கோவில் திருப்பணி என்ற பெயரில் ரூ.33 லட்சத்து 28 ஆயிரத்து 924 வசூலிக்கப்பட்டதாகவும், அதிலிருந்து சுமார் ரூ.1.80 லட்சம் வேறு கணக்கிற்கு மாற்றப்பட்டதாகவும் வாதிட்டார்.
துரகாளியம்மன் கோவில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ். சூர்யா, கார்த்திக் கோபிநாத் வசூலித்த எந்தத் தொகையும் கையாடல் செய்யப்படவில்லை என்றும், கோவில்நிதி முறைகேடாக செலவிடப்படவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி, வசூலிக்கப்பட்ட பணம் கையாடல் செய்யப்படவில்லை என்பதும், மிலாப் செயலி மூலம் வசூலிக்கப்பட்ட தொகை திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இதனால், அந்தப் பணத்தை முறைகேடாக பயன்படுத்தும் நோக்கம் மனுதாரருக்குஇருந்ததாக கருத முடியாது என்றும், குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் நீதிபதி தெரிவித்தார்.
இதையடுத்து, கார்த்திக் கோபிநாத் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், முடக்கப்பட்ட அவரது வங்கி கணக்குகளை விடுவிக்கவும் உத்தரவிட்டார். அதேசமயம், திருவொற்றியூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிதியை, அதற்குக் கிடைத்த வட்டியுடன் சேர்த்து சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் நிர்வாகத்திடம் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

