இதில் எங்கிருந்து வந்தது மதம்… எச்சரித்த CM விஜய்… கப் சிப் ஆன மரியா வில்சன்…

0
Follow on Google News

நடந்து கொண்டிருக்கும் சட்டசபை கூட்டதொடரில், எதிர்கட்சி எம் எல் ஏ ராஜேந்திரன், நிதி அமைச்சர் மரியா வில்சன் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யும் போது, தமிழில் பல சொற்றொடர்களை அவர்கள் பேசாமல் விட்டு விட்டார்கள். சில சொற்றொடர்கள் இலக்கண பிழையாக இருந்தது. இதை குறையாகவோ, குற்றச்சாட்டாகவோ இந்த அவையில் நான் வைக்க விரும்பவில்லை.நிதியமைச்சர் அவர்களுக்கு வருங்காலத்தில் பிழையின்றி பட்ஜெட்டை வாசிக்கக்கூடிய வகையில் அதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும் என்று பணிவோடு கேட்டுக் கொள்கிறேன் என மிக பணிவாக கேட்டு கொண்டார் எதிர்க்கட்சி எம் எல் ஏ.

இதற்கு பெருந்தன்மையாக சரி என்னுடைய தவறை திருத்தி கொள்கிறேன், தமிழில் பிழை இல்லாமல் பேச முயற்சி செய்கிறேன் என நிதி அமைச்சர் மரியா வில்சன் பதில் கொடுத்து இருந்தால் பஞ்சாயத்தே இல்லை, ஆனால் ஆக்ரோஷமாக சட்டசபையில் பதில் அளித்த மரியா வில்சன் சம்பந்தமே இல்லாமல்

எங்களுக்கு ஒரு மொழியை Christianity கற்று கொடுத்திருக்கிறது. அன்பு மொழி, அமைதி மொழி, இரக்கத்தின் மொழி. எவ்வளவு தான் தமிழ் படித்திருந்தாலும், பாதி பேருக்கு இது தெரியாது. நான் பைபிளில் படித்துள்ளேன். Born Christian. என சம்பந்தமே இல்லாமல் தன்னுடைய மதத்தை குறிப்பிட்டு பேசிய மரியா வில்சன் மேலும் எவ்வளவு தான் தமிழ் படித்திருந்தாலும், பாதி பேருக்கு இது தெரியாது என் தமிழ் மொழியையும் குறித்து மதிப்பிட்டு பேசினார்.

குறுக்கிட்டு பேசிய பேரவைத் தலைவர், கொஞ்சம் Light and Weight-ல் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்.ஆனால் தொடர்ந்து பேசிய அமைச்சர் மரிய வில்சன், Guidance பண்ற மாதிரி பண்ணக்கூடாது. என்னுடைய ஸ்டைல் இதுதான். அவருக்காக நான் மாற்றி கொள்ள முடியாது. எல்லாருக்காகவும் நான் மாற்றி கொள்ள முடியாது. கேலி பண்றீங்களா? என்று கோபமாக கேட்டு விட்டு அமர்ந்தார்.

மரியா வில்சன் இந்த நடவடிக்கை கடும் சர்ச்சையாக வெடித்து, தமிழ் மொழியை இழிவு படுத்தும் விதத்தில் எங்களுக்கு ஒரு மொழியை Christianity கற்று கொடுத்திருக்கிறது. அன்பு மொழி, அமைதி மொழி, இரக்கத்தின் மொழி. எவ்வளவு தான் தமிழ் படித்திருந்தாலும், பாதி பேருக்கு இது தெரியாது என பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கடும் எதிர்ப்பு குரல் ஒலிக்க தொடங்கியது.

இந்நிலையில் இந்த விவகாரம் முதல்வர் விஜய்யை மிக பெரிய அளவில் அப்செட்டாகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது, குறிப்பாக அன்றாட நடக்கும் சட்டசபை கூட்ட தொடர் குறித்து மக்கள் மத்தியில் எந்த மாதிரியான வரவேற்பு உள்ளது என உளவு துறை மூலமாக தகவல்களை தினம்தோறும் முதல்வர் விஜய் சேகரித்து வருவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் நிதி அமைச்சர் மரியா வில்சன் பேசிய பேச்சு மக்கள் மத்தியில் எழுந்து வரும் அதிருப்தி குரல் முதல்வர் கவனத்துக்கு சென்று இருக்கிறது, இதனை தொடர்ந்து முக்கிய அமைச்சர் ஒருவரிடம் இது குறித்து பேசிய முதல்வர் விஜய், தமிழில் பிழை உள்ளது என்றால் திருத்திக்கொள்கிறேன் என்று சொல்ல வேண்டியது தானே, இதில் எங்கிருந்து வந்தது மதம், தேவையில்லாமல் எதற்காக தமிழ் மொழியை குறைத்து மதிப்பிட்டு நிதியமைச்சர் பேசவேண்டும், சொல்லி இனிமேல் இது போன்று தவறு நடக்க கூடாது என சொல்லுங்க திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்க மாட்டேன் என முக்கிய அமைச்சர் ஒருவர் மூலமாக நிதி அமைச்சருக்கு எச்சரிக்கை தகவல் கொடுத்துள்ளாராம் முதல்வர் விஜய்.

இதனை தொடர்ந்து தான் அடுத்து நடந்த சட்டசபை கூட்ட தொடரில் என்னுடைய தவறை திருத்தி, அடுத்து தமிழில் பிழையின்றி பேச முயற்சி செய்கிறேன், எங்களுக்கு இதெல்லாம் புதுசு தான் என பவ்யமாக பேசி இருக்கிறார் நிதியமைச்சர் மரியா வில்சன்.