delimitation திமுக ஆதரவு… இனி காங்கிரஸ் காலி… மீண்டும் 4 வது முறையாக பாஜக ஆட்சி…

0
Follow on Google News

சமிபதியில் தொகுதி மறுசீரமைப்பு மசோதா என்று சொல்ல கூடிய delimitation bill குறித்து தமிழகத்தில் ஆளும் தவெக கட்சியின் தலைமையின் கீழ் அணைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது, இதில் திமுக , அதிமுக , தேமுதிக, மக்கள் நீதிமய்யம் உட்பட பல கட்சிகள் புறக்கணித்தது , அந்த வகையில் தவெக நடத்திய அணைத்து கட்சி கூட்டம், தவெக கூட்டணி கட்சி கூட்டம் தான் என்று சொல்லும் வகையில் , தவெக உடன் ஆட்சியில் பங்கேற்ற காட்சிகள் மட்டுமே பங்கேற்றது.

இந்நிலையில் அம்பேத்கார் இயற்றிய சட்டத்தின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்பது மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மாறு சீரமைப்பு செய்வது என்பதாகும், ஆனால் அப்படி கொண்டு வந்தால், வடமாநிலங்களில் மக்கள் தொகை அடிப்படையில் அதிக தொகுதிகளும், தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் மிக குறைத்த தொகுதிகள் தான் கிடைக்கும் வகையில் சீரமைக்க முடியும்.

இந்நிலையில் தமிழகத்தில் ஒரு தொகுதிகள் கூட பாஜக வெற்றி பெறாமல் டெல்லியில் தொடர்ந்து ஆட்சியை பிடித்து வரும் நிலையில், தொகுதி மறுசீரமைக்கப்பட்டால், இன்னும் வடமாநிலங்களில் தொகுதிகள் அதிகரிக்கும், இதனால் பாஜக இன்னும் எளிதாக வெற்றி பெற்று விடும் என்கிற அச்சம் காங்கிரஸ் கட்சிக்கு உண்டு , காரணம் வடமாநிலங்களில் பல இடங்களில் காங்கிரஸ் கட்சி துடைத்து எறியப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யும் போது,தமிழ்நாடு, கேரளா உட்பட மாநிலங்களில் மிக குறைந்து தொகுதிகளே கூடுதலாக கிடைக்கும், அதே நேரத்தில் அம்பேத்கார் இயற்றிய சட்டம் அடிப்படையில் மறுசீரமைப்பு நடந்தால், அந்த நடைமுறையை ஏற்று கொண்டு தான் ஆக வேண்டும், இதில் மற்றொரு சிக்கலும் உள்ளது.

பாராளுமன்ற மன்றம் சட்டமன்ற தொகுதிகளில் பெண்களுக்கு 33 சதவிகிதம் ஒதுக்க வேண்டும் என்கிற போது, தற்பொழுது இருக்கும் 543 தொகுதிகளில் இருந்து மறுசீரமைப்பு மூலம் கூடுதலாக 813 தொகுதிகளாக மாறும் போது, பெண்களுக்கு 33 சதவீதிகம் பாராளுமன்ற தொகுதிகளை ஒதுக்குவதில் மிக எளிமையான செயலாக இருக்கும் என கருதுகிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு.

அந்த வகையில் தமிழ்நாடு உட்பட 3 மாநிலங்களில் மட்டுமே பாஜக இன்னும் தன்னுடைய செல்வாக்கை நிலைநிறுத்த முடியாமல் இருந்து வருகிறது, ஆனால் இந்தியா முழுவது வெறும் 3 அல்லது நான்கு மாநிலம் தவிர்த்து காங்கிரஸ் கட்சி எங்கே என தேடும் அளவுக்கு தான் அந்த கட்சியின் நிலை உள்ளது, குறிப்பாக வடமாநிலங்களில் காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணி சேர்ந்த பாவத்திற்க்காக பல மாநில காட்சிகள் படுதோல்வியை சந்தித்து தங்கள் செல்வாக்கை இழந்து தவித்து வருவதை பார்க்க முடிகிறது

அந்த வகையில் தொகுதி மறுசீரமைப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்ற பட்டால், வரும் 2029 நாடாளுமன்ற தேர்தல் மட்டுமில்லை, அடுத்து 2034 நாடளுமன்ற தேர்தலிலும் பாஜக தான் வெற்றி பெரும் என கணிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த தொகுதி மறுசீரமைப்பு மாசோதா நிறைவேறினால் அது காங்கிரஸ் கட்சிக்கு மிக தான் ஆபத்து என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.

அதே நேரத்தில் தொகுதி மறுசீரமைப்பு மசோதா கொன்டு வரப்பட வில்லை என்றாலும் கூட வரும் 2029 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என்றும், தென் மாநிலங்களில் கணிசமான தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றலாம், ஆனால் ஆட்சியை பிடிக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறார்கள் அரசியல் நிபுணர்கள்.