நடந்து முடிந்த 2026 சட்டசபை தேர்தலில் திமுக படுதோல்வியை சந்தித்து குறிப்பாக திமுக தலைவர் அவருடைய சொந்த தொகுதியான கொளத்தூரிலேயே மிகப்பெரிய தோல்வியை சந்தித்த நிலையில், தேர்தல் முடிந்த பின்பு மு க ஸ்டாலின் வீட்டில் சேகர்பாபுவுக்கும் சபரீசனுக்கும் நடந்த ஒரு துயரச்சம்பவம் தற்பொழுது வெளியாகி இருக்கிறது.
குறிப்பாக தேர்தலுக்குப் பின்பு மு க ஸ்டாலின் கொளத்தூர் தொகுதி தோல்வி குறித்து தனக்கு நெருக்கமான உளவுத்துறை அதிகாரிகளிடம் தோல்விக்கான காரணத்தை கேட்டு அறிந்திருக்கிறார் மு க ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின். அப்போது திமுக ஆட்சியின் இருந்தபோது அதாவது தேர்தலுக்கு சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பே சென்னை முழுவதும் திமுகவுக்கு எதிரான ஒரு அலை இருக்கிறது. குறிப்பாக கொளத்தூர் தொகுதியில் மீண்டும் மு க ஸ்டாலின் போட்டியிட்டால் நிச்சயம் தோல்வியைத் தான் தழுவுவார்,

ஆகையால் தொகுதி மாறி போட்டியிடும்படி தனியார் ஏஜெண்சி மூலம் எடுத்த சர்வே ரிப்போர்ட் வந்திருக்கிறது. ஒஆனால் இதை அறிந்த சேகர் பாபு சென்னை முழுவதும் திமுகவிற்கு சாதகமாக இருக்கிறது, குறிப்பாக கொளத்தூர் தொகுதியில் மிக எளிதாக முக ஸ்டாலின் வெற்றி பெற்று வருவார் என்று ஒரு எழுதிக் கொடுத்த தவறான ரிப்போர்ட்டை முதல்வரிடமும் முதல்வர் குடும்பத்திடமும் சமர்ப்பியுங்கள் என்று சேகர்பாபு முதல்வர் குடும்பத்தையே ஏமாற்றி இருக்கும் தகவல் துர்கா ஸ்டாலின் அவர்களுக்கு தேர்தலுக்குப் பிந்தைய கள ஆய்வின்போது தெரிய வந்திருக்கிறது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் சேகர் பாபு ஆகிய இருவரை தவிர மற்ற அனைவருமே திமுக சார்பில் போட்டியிட்டவர்கள் தோல்வியை தழுவி இருக்கிறார்கள், குறிப்பாக சென்னையிலேயே இருக்கக்கூடிய பெரும்பாலான அமைச்சர்களுக்கு சென்னை கள நிலவரம் தெரியாமல் இருக்காது,
இருந்தாலும் சென்னை சேகர் பாபு கட்டுப்பாட்டில் இருந்ததால் எதற்கு சேகர்பாவுக்கு விரோதமாக நாம் முதல் குடும்பத்தில் கருத்துக்களை பதிவு செய்ய என தவிர்த்து வந்திருக்கிறார்கள். இந்நிலையில் தேர்தல் முடிவுகள் கடந்த மே நாலாம் தேதி வந்திருந்த நிலையில் அடுத்த இரண்டு நாள் கழித்து சபரீசன் முதல் மு க ஸ்டாலினின் சித்திரஞ்சன் சாலையில் உள்ள வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
மருமகன் வந்திருக்கிறார் என்று தெரிந்ததும் அவருடைய அறையில் இருந்த முக ஸ்டாலின் நேரடியாக வெளியே வந்து உங்களை நம்பி நான் மோசம் போய் விட்டேன், உங்களால்தான் எல்லாம் போச்சு என்று மிக ஆக்ரோஷமாக தன்னுடைய கோபத்தை சபரீசன் முகத்திற்கு நேராக வெளிப்படுத்திவிட்டு மீண்டும் தன்னுடைய அறைக்குள் சென்று சென்றிருக்கிறார்.
மேலும் அங்கிருந்த உதயநிதி ஸ்டாலின் அவர் பங்குக்கு, உங்கள் பெண் நிறுவனத்தை முதலில் இழுத்து மூடுங்க என்று ஆக்ரோஷமாக பேசி இருக்கிறார், அங்கே வாடிய முகத்துடன் இருந்த சபரீசனை அருகில் இருந்த மாமியார் மற்ற குடும்ப உறுப்பினர்கள் சமாதானம் செய்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் யாருமே கண்டு கொள்ளவில்லை, சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு படபடத்துப் போன சபரீசன் அங்கிருந்து வெளியேறியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து அடுத்த நாள் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு சித்தரஞ்சன் சாலையில் உள்ள மு க ஸ்டாலின் வீட்டிற்கு சென்றிருக்கிறார் அவர் உள்ளே நுழைந்ததுமே, துர்காஸ்டாலின் உச்சகட்ட கோபத்திற்கு சென்றவர் கையில் இருந்த ஒரு பொருளை எறிந்து இருக்கிறார், ஆனால் அந்த பொருள் சேகர் பாபு மேல் படவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் உங்களால் தான் சென்னையில் இவ்வளவு பெரிய தோல்விக்கு காரணம், என்னுடைய கணவரின் தோல்விக்கும் நீங்கள் தான் காரணம் என்று ஆக்ரோஷமாக தன்னுடைய கோபத்தை துர்கா ஸ்டாலின் வெளிப்படுத்த அங்கிருந்து மௌனமாக வெளியேறி இருக்கிறார் சேகர் பாபு என்கிற தகவல் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

