முக ஸ்டாலின் மீது பாய்கிறது கைது நடவடிக்கை… வெளிச்சத்துக்கு வரும் மெகா ஊழல்… மொத்தமாக முடிக்க CM விஜய் முடிவு…

0
Follow on Google News

எந்த நேரத்திலும் முன்னாள் திமுக அமைச்சர்கள் மீது ஊழல் தொடர்பான கைது நடவடிக்கை பாயலாம் என்கிற பரபரப்பில் , பல திமுக முன்னாள் அமைச்சர்கள் இருக்கும் இடம் தெரியாமல் பொட்டி பாம்பாக அடங்கி இருக்கிறார்கள், இப்படி ஒரு சூழலில் யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக அமைத்திருக்கிறது, அதாவது திமுக அடிமடியில் கை வைக்கும் விதத்தில் முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் மீதே வழக்கு பதிவு செய்து தட்டி தூங்கும் நடவடிக்கை குறித்த வேலைகள் ஒரு பக்கம் துரிதமாக நடந்து வரும் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த திமுக ஆட்சி ஊழலில் ஊறிப்போன ஆட்சி என்கிற குற்றசாட்டு முன் வைக்கப்பட்டு வந்த நிலையில், ஆட்சி முடியும் தருவாயில் நடந்த மெகா ஊழல் தற்பொழுது மெல்ல வெளி வர தொடங்கி இருக்கிறது, மீண்டும் நம்ம ஆட்சிக்கு வர போகிறோம் இதையெல்லாம் யார் கேட்பார்கள், யார் நம் மீது நடவடிக்கை எடுக்க போகிறார்கள் என திமுக ஆட்சி முடியும் தருவாயில் நடந்த மெகா ஊழல் தற்பொழுது முன்னால முதல்வர் முக ஸ்டாலினுக்கு எதிராக அமைந்துள்ளது.

நடந்து முடிந்த 2026 சட்டசபை தேர்தல் அறிவிப்பிற்கு ஒரு வாரத்திற்கு முன்பு முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செய்த மிகப்பெரிய தில்லாலங்கடி தற்பொழுது அம்பலமாய் இருக்கிறது. குறிப்பாக குவாரி விவகாரத்தில் மணல் அள்ளுவதற்கு 0.9 மீட்டர் அளவு மட்டுமே அல்ல வேண்டும் என்கிற விதிமுறை உள்ளது, அதேபோன்று கல் குவாரி அமைப்பதற்கு 1.5 மீட்டர் அளவு மட்டுமே எடுக்க வேண்டும் என்கிற விதிமுறை உள்ளது.

ஆனால் பல கல்குவாரியில் சுமார் 3 மீட்டர் அளவில் அரசாங்கம் விதிகளுக்கு விதிகளை மீறி கல் குவாரிகள் முறைகேடு செய்ததில் சுமார் 4 ஆயிரம் கோடி வரை அபதாரம் கட்ட வேண்டிய நிலைக்கு கல் குவாரிகள் தள்ளப்பட்டது. இப்படி ஒரு சூழலில் முறைகேடு செய்த கல் குவாரி முதலாளிகளுக்கு துணையாக ஆட்சி முடியும் தருவாயில் கடந்த திமுக அரசு மிக பெரிய தில்லாங்கடி வேலையை செய்து இருக்கிறது.

அதாவது வர முறை சட்டம் என்ற ஒன்றை கொண்டு வந்து சுமார் 1000 கோடி மட்டுமே அபராதம் கட்டினால் போதும் என இந்த விவகாரத்தில் இருந்து கல் குவாரி முதலாளிகளை காப்பாற்றி இருக்கிறது கடந்த திமுக அரசு என்றும், இதில் மிக பெரிய முறைகேடு நடந்து இருக்கிறது என கூறப்படும் நிலையில் , தற்பொழுது இந்த விவகாரம் விஸவரூபம் எடுத்து இருக்கிறது.

அந்த வகையில் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு, திமுக அரசு அவசர அவசரமாக கல் குவாரிகளுக்கு ஆதரவாக செய்த இந்த தில்லாலங்கடி செயலை முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு வழக்கு பதிவு செய்து அந்த துறை சார்ந்த முன்னாள் திமுக அமைச்சர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட பெயர்கள் அந்த வழக்கில் சேர்க்கப்பட்டு விசாரணை நடத்தினாலே திமுக அரசு ஆட்டம் கண்டு விடும்.

மேலும் இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் மீது கைது நடவடிக்கை பாய கூட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது, அந்த வகையில் தற்பொழுது இந்த குவாரி முறைகேடு விவகாரத்தி மிக சீரியசாக முதல்வர் விஜய் எடுத்துள்ளதாக கூறப்படும் நிலையிலும், அடுத்தடுத்து இது தொடர்பாக தவெக அரசு வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினால் இன்னும் இது தொடர்பாக பல மர்மம் வெளி வரும் என எதிர்பார்க்க படுகிறது.

மேலும் இந்த கல்குவாரி விவரத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு புதிய விதிமுறைகளை கொண்டு வந்து ஏலம் விடப்பட்டாலே, இந்த கனிம வளம் துறையில் மட்டுமே தமிழக அரசுக்கு மிகப்பெரிய லாபங்கள் கிடைக்கும் என்றும் இதன் மூலம் தேர்தல் வாக்குறுதிகளாக அளித்த பல நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த முடியும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here