ஆட்சி அதிகாரத்தை மட்டும் இழந்தது இல்லாமல், கூட இருந்த கூட்டணி கட்சிகளும் முதுகில் குத்தி மிக பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது மு க ஸ்டாலினின் குடும்பமும் திமுக என்கின்ற கட்சியும். இந்த நிலையில் சுமார் பத்து வருடங்களாக திமுக முதுகில் சவாரி செய்து பலனடைந்த காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்ட் மற்றும் சிறு சிறு கட்சிகள் தற்போது ஆட்சியில் பங்கு தருகிறோம் என்றதுமே நன்றிக்கு கூட மு க ஸ்டாலினிடம் ஒரு வார்த்தை சொல்லாமல் கூட தாவெகா பக்கம் சாய்ந்து விட்டார்கள்.
இதன் நிலையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வரலாற்றில் எதிர்பாராத அளவில் மிக பெரிய தோல்வியை சந்தித்திருக்கும் திமுகவிற்கு டெல்லியில் பாஜக – காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே எதிராக இருக்கிறது. எதிர்காலத்தில் ஆளும் தாவெக அரசு திமுக முன்னாள் அமைச்சர்கள் மீதோ அல்லது மு க ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்கள் மீதும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மீது மூலம் வழக்கு பதிவு செய்து,

அதன் மூலம் அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டால் டெல்லியிலே குரல் கொடுக்க கூட தற்பொழுது திமுகவிற்கு ஆதரவாக இருந்த காங்கிரஸ் கட்சியும் தற்போது இல்லை. இப்படி ஒரு சூழலில் வரும் 2029 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தாவெக விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்டுகள் ஆகிய ஒரு கூட்டணியில் தேர்தலை சந்திக்கும் பொழுது,
அதே நேரத்தில் பாஜக தலைமையில் மற்றொரு கூட்டணி தேர்தலை எதிர்கொண்டால், திமுக தனித்து விடப்பட்டு வரும் 2029 நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்து, அடுத்து 2031 இல் தன்னுடைய எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட இழக்கும் ஒரு சூழல் உருவாகும் நிலை ஏற்படும் என்கின்ற அச்சம் தற்பொழுது மு க ஸ்டாலின் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு ஏற்பட்டு இருக்கிறது.
இதனை தொடர்ந்து ஏற்கனவே தங்களை சுற்றிக்கொண்டு இருக்கும் அமலாக்கத்துறையிடம் இருந்து தப்பிப்பதற்காகவும் ஒரே நேரத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசையும் மாநிலத்தில் ஆளும் தாவெக அரசையும் பகைத்துக் கொண்டால் நம் நிலைமை என்னும் மோசமாகிவிடும் என்பதை நன்கு உணர்ந்து கொண்ட மு க ஸ்டாலின் குடும்பத்தினர் , பாஜகவுடன் கூட்டணி அமைத்து கைகோர்க்கவும் தயாராகி இருக்கிறார்கள்.
இது தொடர்பாக கர்நாடகா மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ள மு க ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்கள் பாஜக தரப்பிடம் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி இருக்கும் தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கிறது. குறிப்பாக கர்நாடகாவிற்கு மு க ஸ்டாலின் அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் அவருடைய மருமகன் சபரீசன் ஆகியோர் சுற்றுலா சென்றதின் முக்கிய நோக்கமே பாஜகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை அமைப்பதற்காக தானாம்.
முக்கிய பாஜக தலைவர்கள் ஒருவர் மூலம் நடந்த இந்த திமுக பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை அமித்ஷா கவனத்திற்கு சென்று இருக்கிறது, எதுவுமே யோசிக்காத அமித்ஷா, இந்த கூட்டணி சரிவராது, நாம் திமுகவுடன் கூட்டணி அமைத்து வரும் 2029 நாடாளுமன்றத் தேர்தலை நாம் சந்தித்தோமானால் பாஜகவிற்கு தமிழ்நாட்டில் ஐந்து எம்பிகள் வேணால் கிடைக்கும்,
ஆனால் திமுகவுடன் கூட்டணி வைத்தால் இந்தியா முழுவதும் பாஜக மிகப்பெரிய சரிவை சந்திக்க நேரிடும், காரணம் நாமே திமுக இந்து மதத்திற்கு எதிரான கட்சி என்கின்ற பிரச்சாரத்தை மேலோங்கி இந்தியா முழுவதும் செய்து இருக்கிறோம் . ஆகையால் திமுகவுடன் பேச்சு வார்த்தைக்கு இடம் இல்லை , மேலும் இவர்கள் முழுக்க முழுக்க நம்மளுடைய சித்தாந்தத்திற்கும் சனாதனத்திற்கும் எதிரானவர்கள் என்று மறுத்துவிட்டாராம் அமித்ஷா.

