பாஜக முன்னாள் மாநில தலைவராக இருந்த அண்ணாமலை தற்பொழுது பாஜகவில் இருந்து விலக முடிவு செய்துள்ளது தமிழக அரசியலில் மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக திருச்சியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்ல சென்ற விஜய்யின் செய்தி ஒரு நாள் கூட தாக்கு பிடிக்கவில்லை என்று சொல்லும் வகையில் அண்ணாமலையின் அரசியல் அப்டேட் விஜய்யின் செய்தியை இருட்டடிப்பு செய்து விட்டது.
ஏற்கனவே அண்ணாமலை தனி கட்சி தொடங்கப்போகிறார், பாஜகவில் இருந்து விலக போகிறார் என்கிற செய்திகள் வட்டமிட்டு கொண்டிருந்த நிலையில், 2026 சட்டசபை தேர்தல் முடிந்த பின்பு அமைதியாக இருந்து வந்தார் அண்ணாமலை, குறிப்பாக பெரும்பாலும் குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்வது , வெளிநாடு பயணம் என்று ஓய்வில் இருந்து வந்த அண்ணாமலை, தமிழகம் திரும்பியதும் ஜூன் 1ம் தேதி டெல்லி புறப்பட்டார்.

டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த அண்ணாமலை காரில் பாஜக கொடி அகற்றப்பட்டு இருந்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது, விமானநிலையத்தில் அன்னமலையிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இரண்டு நாட்கள் பொறுமையாக இருங்க, வந்து முழுமையாக விளக்கம் கொடுக்கிறேன் என ஒரு ட்விஸ்ட் வைத்துவிட்டு டெல்லி சென்றார் அண்ணாமலை.
ஜூன் 2ம் தேதி டெல்லியில் இருந்த அண்ணாமலை, பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து பேசி இருக்கிறார். தன்னுடைய நிலைப்பாட்டை தெறிவித்த அண்ணாமலை,பாஜகவில் இருந்து தன்னை விளக்கி கொள்வதர்க்கான ராஜினாமா கடிதத்தை கொடுத்ததாக டெல்லியில் இருந்து வரும் தகவல் உறுதி படுத்துகிறது. நிதின் நபினை சந்தித்த அண்ணாமலை அதனை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ளார்.
அப்போது தான் எதற்க்காக பாஜகவில் இருந்து விலகுகிறேன், மேலும் சில புகார்களை ஆதாரத்துடன் சமர்ப்பித்து இருக்கிறார் அண்ணாமலை. சிரித்த முகத்துடன் அண்ணாமலை உடன் பல விசயங்களை கேட்டறிந்த அமித்ஷாவிடம், எனக்கு டெல்லி பாஜக தலைமையிடம் எந்த வருத்தமும் இல்லை, தான் சுதந்திரமாக செயல்பட விரும்புகிறேன் அதனாலே பாஜகவில் இருந்து விலகுகிறேன் என்கிற தன்னுடைய விருப்பத்தை தெரிவித்து இருக்கிறார் அண்ணாமலை.
மேலும் தன்னுடைய அடுத்தகட்ட நகர்வுகள் என்ன , அடுத்தடுத்து தன்னுடைய இலக்கு என்ன என்பது குறித்தும் முழுமையாக பேசி இருக்கிறார் அண்ணாமலை, இடையில் அமித்ஷாவும் சில சஜஷன் கள் தெரிவித்ததாகவும், அதை அண்ணாமலை ஏற்று கொண்டதாக டெல்லி வட்டாரங்கள் உறுதி படுத்துகிறது, இந்நிலையில் அண்ணாமலை – அமித்ஷா சந்திப்பின் போது அண்ணாமலையின் எதிர்கால அரசியலுக்கு அமித்ஷா ஆசி வழங்கி வாழ்த்து தெரிவித்து இருக்கிறார் அமித்ஷா.
இந்நிலையில் பாஜகவில் இருந்து விலகி இருக்கும் அண்ணாமலை, அடுத்த மூன்று மாதங்களுக்கு அமைதியாக மக்கள் சேவையில் தன்னுடைய கவனத்தை திருப்ப இருக்கும் அண்ணாமலை, அடுத்து மக்கள் இயக்கம் என்கிற இயக்கத்தை தொடங்கி தொடர்ந்து ஒரு இயக்கமாக செயல்ப்பட்டு, அடுத்து மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றலாம் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக அன்னமலையின் நோக்கும் அடுத்து 2031ல் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தல் தான் என்றும், அதனால் வரும் 2029 பாராளுமன்றத்தில் அண்ணாமலை பங்கு இருக்காது என கூறப்படுகிறது, மேலும் NDA கூட்டணியில் இருந்த பல கட்சிகள் அண்ணாமலையின் புதிய அரசியல் நகர்வுகளுக்கு ஆதரவு அளித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

