மேட்ரிமோனியில் மூலம் தொடர்பு கொண்டு பெண்ணிடம் மோசடி… மாப்பிளை தேடும் பெற்றோர்களே உஷார்..

0
Follow on Google News

சென்னை : ஒருபுறம் பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் கும்பல் மறுபுறம் தனியாக இருக்கும் இளம்பெண்களை குறிவைத்து பணத்தை திருடும் கும்பல் என இந்த சமூகத்தில் பெண்கள் குறிவைக்கப்பட்டு வருவது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. இந்நிலையில் ஒரு விவாகரத்தான பெண்ணை ஏமாற்றிய சம்பவம் சென்னையை பதற்றமடைய செய்துள்ளது.

சென்னை அருகே உள்ள ஆவடி பகுதியை சேர்ந்தவர் திவ்யா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) இவர் மேன் பவர் கன்சல்டன்சி நடத்திவருகிறார். கடந்த சிலவருடங்களுக்கு முன்னர் கணவருடன் ஏற்பட்ட மனப்பிணக்கால் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்துவருகிறார். இதனிடையே திவ்யாவின் எதிர்கால நலனை கருத்தில்கொண்டு அவரது உறவினர்கள் மணமகன் தேடும் படலத்தை தொடங்கினர்.

2020ல் மேட்ரிமோனியில் விளம்பரம் கொடுத்தபிறகு திவ்யாவிடம் ஈக்காட்டுதாங்கலை சேர்ந்த அரவிந்த் என்பவர் அறிமுகமாகியுள்ளார். தன்னை ஒரு விவாகரத்தானவன் என்று அறிமுகப்படுத்தியதோடு தான் துபாயில் வேலைபார்த்து வருவதாக கூறியுள்ளார். தனக்கு ஏற்ற ஒரு நல்ல மணப்பெண்ணை தேடிவருவதாக திவ்யாவிடம் கூறியுள்ளார்.

இது இருவருக்குமிடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. நேரில் பேசி காதலை வளர்த்து வந்துள்ளனர். அரவிந்தின் நல்ல குணம் பிடித்துப்போக இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் அரவிந்தின் தாயார் கடந்த 2021 ஜனவரியில் போனில் அழைத்து திவ்யாவின் நகை பணத்தை பத்திரமாக நமது வீட்டில் வைப்போம் உனது வீட்டில் நீ தனியாக இருக்கிறாய் என கூறியுள்ளார்.

இதை நம்பிய திவ்யா அனைத்தையும் ஒப்படைக்க முடிவெடுத்து 50 சவரன் நகையை திநகரில் இருந்த அரவிந்திடம் ஒப்படைத்துள்ளார். அதன்பின்னர் அரவிந்த் மற்றும் அவரது குடும்பத்தினரை தொடர்புகொள்ள முடியாமல் திவ்யா தவித்திருக்கிறார். அதன்பிறகு விசாரித்ததில் அவர் ஏற்கனவே திருமணமானவர் என்பதும் அவர்களுடன் வசித்ததும் தெரியவந்தது.

பின்னர் ஆவடி காவல்நிலையத்தில் புகாரளித்தார் திவ்யா. போலீசார் நடத்திய விசாரணையில் அரவிந்தின் வேலையே இதுதான் எனவும் பெண்களை தொடர்ந்து ஏமாற்றி வந்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அரவிந்தை கைதுசெய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்துள்ளனர்.