நூல் விலை உயர்வு… தொடரும் போராட்டம்.. பதிப்பில் ஐந்து தொழிலாளர்கள்… திருப்பூர், கோவையின் துயரம்..

0
Follow on Google News

திருப்பூர் : இந்தியாவிலேயே ஜவுளி உற்பத்தி அதிகமான நகரங்கள் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர். நூல் விலை விண்ணைத்தொட்டதால் ஜவுளி உற்பத்தியாளர்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். விசைத்தறிகள் மூலம் ஜவுளி உற்பத்திக்கு தேவையான காடா நூல் உருவாக்கப்படுகிறது. தற்போது அந்த மூலப்பொருளான நொல்லின் விலை அதிகரித்துவிட்டதால் விசைத்தறி மற்றும் ஜவுளி உற்பத்தி பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் கோயம்புத்தூர் திருப்பூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குரியதாகிவிடும்.

இதனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் கடந்த மே 22 முதல் வருகிற ஜூன் 5 வரை வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். தொடர்ந்து எட்டாவது நாளாக நேற்றும் போராட்டம் நடைபெற்றுள்ளது. நூல் விலையின் உயர்வை கண்டித்தும் விலையை கட்டுப்படுத்த வேண்டியும் விசைத்தறி மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் தங்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

உற்பத்தியாளர்களின் போராட்டத்தால் திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் இயங்கிவரும் இரண்டுலட்சத்திற்கும் மேலான விசைத்தறிகள் இயங்கவில்லை. இதை நம்பியிருக்கும் ஐந்துலட்சம் கூலித்தொழிலாளர்கள் பெரும் சிக்கலில் ஆழ்ந்துள்ளனர். மேலும் எட்டுநாள் போராட்டத்தால் தோராயமாக 1000 கோடி அளவிலான காடா துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுவரை விலை உயர்ந்தது மட்டுமல்லாமல் இந்த மாதமும் நூல் விலையேற்றத்துடனேயே காணப்படுவதால் வரும் மாதங்களிலும் விலையேற்றம் கடுமையாக இருக்கும் என கருதப்படுகிறது. இதனால் மாநில அரசு இதில் உடனடியாக தலையிட்டு விலையை கட்டுப்படுத்தி ஜவுளி உற்பத்தி தொழிலை முடங்காமல் பாதுகாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.