மனைவியை கத்தியால் குத்த வந்த கணவர் பரிதாபமாக உயிர் இழந்தார்..! வேலூரில் நடந்த பரபரப்பு…

0

வேலூர் : மது வாழ்க்கையை சீரழிக்கும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாக வேலூரில் நடந்த இந்த சம்பவம் அமைந்துள்ளது. மதுபோதையால் ஒரு குடும்பமே சீரழிந்துவிட்டதாக ஊர்மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இனியாவது மது ஒழிக்கப்படுமா என அரசை நோக்கி கேள்வியெழுப்பிவருகின்றனர் பொதுமக்கள்.

வேலூர் வேலப்பாடி பகுதியை சேர்ந்தவர் குமாரவேல். வயது 60. இவர் கனர்கவாகனங்கள் பழுதுபார்க்கும் கடையில் வேலைசெய்து வருகிறார். இவரது மனைவி கோமதி வயது 48. இவர் கூட்டுறவு வீட்டு கடன்சங்கத்தில் பணிபுரிந்துவருகிறார். இவர்களது மகள் பிரியா வயது 20. குமாரவேல் தினமும் மதுஅருந்திவிட்டு போதையில் வருவது வழக்கம்.

தினமும் போதையில் வரும் குமாரவேல் மனைவியுடன் தினசரி தகராறில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் போதை தலைக்கேறிய குமாரவேல் சம்பவத்தன்று நள்ளிரவில் 1.30 மணியளவில் தனது மனைவி கோமதியை கத்தியால் குத்த முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் கோமதிக்கு கை மற்றும் கால்களில் கத்திக்குத்து விழுந்துள்ளது.

காயத்தால் அலறித்துடித்த கோமதி ஒருகட்டத்தில் குமாரவேலிடமிருந்து கத்தியை பிடுங்கியுள்ளார். கோபத்தின் உச்சக்கட்டத்தில் இருந்த கோமதி குமாரவேலின் கழுத்தின் பின்புறத்தில் ஆக்ரோஷமாக வெட்டினார். இதில் நிலைகுலைந்த குமாரவேல் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த கோமதி அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்துசென்று சடலத்தை மீட்டனர். பின்னர் பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சம்பவம் குறித்து மேல்விசாரணை செய்ய கோமதியின் மகள் ப்ரியா மற்றும் வீட்டின் உரிமையாளர் இருவரையும் காவல்நிலையம் அழைத்துசென்றுள்ளனர். இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.