சொகுசு ஓட்டலில் யாருடன் இருதேன்.. உண்மையை ஒப்பு கொண்ட கே.ராஜன்..! யாருடன் தெரியுமா.?

0

பிரபல சினிமா தயாரிப்பாளர் கே. ராஜன் மற்றும் பிரபல சினிமா துறையை சேர்ந்த பத்திரிகையாளர், நடிகர் பயில்வான் ரங்கநாதன் இருவருக்கும் இடையில் மோதல் தற்பொழுது உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இருவரும் ஒருவருக்கொருவர், ஒருவர் மீது ஒருவர், போலீஸ் புகார் தெரிவிக்கும் வகையில் இவர்களின் மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. மேலும் ஒருவர் மீது ஒருவர், நீ யோக்கியமா, இல்லை நீ யோக்கியமா என்று அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன் வைத்து வருகின்றனர்.

பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து சினிமாவில் நடக்கும் அந்தரங்க விஷயங்களை வெளியில் தெரிவித்து வருகின்றவர். இவர் சினிமாவில் நடித்து கூட பிரபலம் அடையவில்லை, ஆனால் எப்போது கிசு கிசுக்கள் பற்றி பேச தொடங்கினாரோ, அதன் பின்பு தான் இவருக்கென ஒரு ரசிகர்கள் வட்டம் உருவானது. சினிமா துறையினர் மத்தியில் இவருக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், இவருடைய ரசிகர்கள் மத்தியில் ஆதரவு தொடர்கிறது.

சமீபத்தில் நடத்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய கே.ராஜன், மிக கடுமையாக பயில்வான் ரங்கநாதனை விமர்சனம் செய்திருந்தார். பக்கத்தில் இருந்து விளக்கு பிடித்து பார்த்தது போன்றே பேசி வருகிறான் என கடுமையாக பேசிய கே.ராஜன், மேலும் பயில்வான் ரங்கநாதன் மீது போலீஸ் புகாரும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து தன் மீது புகார் கொடுத்த கே.ராஜன் மீது போலீஸ் புகார் கொடுத்த பயில்வான் ரங்கநாதன் மிக கடுமையாக பதிலுக்கு கே ராஜன் குறித்து விமர்சனம் செய்தார்.

கே.ராஜன் காலி பெருங்காய டப்பா என்றும், வா…வா …உன்னை பற்றி நான் பேசவா.? நீ உன் மனைவியை விட்டு பிரிந்து சொகுசு ஓட்டலில் தங்கி இருக்க, அது பற்றி பேசுவோமா, என கே.ராஜனை ஒருமையில் அவன் இவன் என்று பேசினார் பயில்வான் ரங்கநாதன், மேலும் நான் உண்மையை தான் பேசுவேன், இதுவரை பொய் பேசியது கிடையாது, சினிமாவில் இருக்கும் நல்லவர்கள் சிலரில் நான் ஒருவன், நான் மிரட்டி பணம் வாங்குவதாக ராஜன் பேசுகிறான்.

நான் யாரிடமாவது மிரட்டி பணம் வாங்கியதை நிரூபித்தால், இனி பேசுவதை நிறுத்தி விடுகிறேன், கே.ராஜன் நிர்வாணமாக ஓட தயாரா.? என பயில்வான் பேசியிருந்தார். இந்நிலையில் குடும்பத்தை விட்டு பிரிந்து கே.ராஜன் சொகுசு ஓட்டலில் தங்கி இருப்பது குறித்து பயில்வான் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து கே. ராஜன் சமீபத்தில் நடந்த சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது.

நான் ஓட்டலில் தங்கி இருப்பதாக ஒருத்தன் சொல்கிறான், டேய் 80 வயசில் நான் என்னடா செய்யமுடியும், எனது வீடு வண்ணாரப்பேட்டையில் உள்ளது, அங்கே நாய்ஸ் அதிகமாக இருக்கும், மன நிம்மதிக்கு ஒரு அமைதியான இடமாக ஓட்டலில் தங்கி இருக்கேன், என்னை ஓட்டலில் பார்க்க ஒரு நாள் எனது மூத்த மகன் வருவான், அடுத்த நாள் இரண்டாவது மகன் வருவான், அதுக்கு அடுத்த நாள் பேர குழந்தைகள் வருவார்கள். இப்படி என் குடும்பத்தினர் தான் வருவார்கள், நீ அனுப்பிய ஆட்கள் யாரும் அங்கே வரவில்லை என கே.ராஜன் பேசி ஓட்டல் குறித்த சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்தார்.

தமிழில் இளிச்சவாயனிடம் வெச்சுக்க… எங்ககிட்ட வேண்டாம்.. ஷங்கரை எச்சரித்த தயாரிப்பாளர்.! எதற்கு தெரியுமா.?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here