ருதுராஜ் செய்த குளறுபடி… சிஎஸ்கே தோல்வி… செம்ம டென்ஷனில் தமிழக வீரரை வெளியே போக சொன்ன தோனி…

0
Follow on Google News

லக்னோ அணியின் இன்னிசை குயின் டன் டிக்காக் மற்றும் கேப்டன் கே எல் ராகுல் தொடங்கினர். இவர்கள் இருவரும் சென்னை அணியின் வேகப் பந்துவீச்சு மற்றும் சுழல் பந்துவீச்சினை சிறப்பாக கையாண்டு அணிக்கு ரன்கள் சேர்த்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலர்கள் இவர்களின் விக்கெட்டை வீழ்த்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், இவர்கள் இருவரும் சென்னை அணியின் பந்துவீச்சை தொடர்ந்து துவம்சம் செய்து வந்தனர்.

பவர் பிளேவில் லக்னோ அணி 54 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து இருவரும் சிறப்பாக விளையாடியதால் கே எல் ராகுல் தனது அரை சதத்தினை நிறைவு செய்து அதிரடியாக விளையாடி வந்தார். இவர்கள் இருவரையும் சென்னை அணியால் பிரிக்கவே முடியவில்லை. 12 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி விக்கெட் இழப்பின்றி 110 ரன்கள் சேர்த்திருந்தது. இதனால் லக்னோ அன்னிக்கு அடுத்த எட்டு ஓவர்களில் வெற்றிக்கு 67 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

ஆட்டத்தின் 15 வது ஓவரின் முதல் பந்தில் டிகாக் தனது அரை சதத்தினை நிறைவு செய்தார். அதேநேரத்தில் இந்த ஓவரின் கடைசி பந்தில் டி காக் தனது விக்கெட்டினை இழந்தார். முஸ்தபிசூர் வீசிய அந்த ஓவரில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் டி காக். ஆட்டத்தின் 15வது ஓவரில் லக்னொ அணி தனது முதல் விக்கெட்டினை இழந்தது அந்த அணியின் வெற்றியில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

அதேபோல் ஆட்டத்தின் 18வது ஓவரின் முதல் பந்தில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் 53 பந்தில் 82 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். இறுதியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 19 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து ரன்கள் சேர்த்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பெற்றது.
சிஎஸ்கே அணியால் விக்கெட்டை கைப்பற்றவே இயலவில்லை. பதிரானாவின் பந்துவீச்சையும் அவர்கள் சமாளித்து விளையாடிவிட்டதால் விக்கெட் எடுக்கக்கூடிய பந்துகளை சிஎஸ்கே பௌலர்கள் வீசவில்லை.

சில நல்ல கேட்ச் வாய்ப்பையும் தவறவிட்டனர். பவர்பிளேயிலும் ரன்களை வாரி வழங்கினர். மொயின் அலிக்கு பவர்பிளேவில் ஒரு ஓவரை கொடுத்திருக்கலாம். அக சிஎஸ்கே கேப்டன் செய்ய தவற விட்டார். சிஎஸ்கேவின் பந்துவீச்சு இப்படி அம்பலப்பட்டது என்றால் பேட்டிங்கோ அதைவிட மோசம். பவர்பிளேவிலேயே இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்தது சிஎஸ்கே. எப்போதும் பொறுப்பாக ஆடும் ருதுராஜ் கெய்க்வாட் சீக்கிரமே அவுட் ஆனார்.‌இந்தப் போட்டியில் கேப்டன் செய்த தவறால் சிஎஸ்கே வீழ்ச்சியை சந்தித்தது என்பதை மறுக்க முடியாது.

இந்நிலையில் இதற்கு முன்பு சிஎஸ்கே அணியில் விளையாடிய தமிழக வீரர் ஜெகதீசன் தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ்ஸில் ஐபிஎல் போட்டிகளுக்கு வர்ணனையாளராக செயலாற்றி வருகிறார். இந்நிலையில் தோனியுடனான ஒரு அனுபவத்தை பகிர்ந்திருந்த அவர் “நான் சென்னை அணியில் இருந்த போது பெங்களுரு அணியுடனான ஒரு போட்டியில் பந்து வீசி கொண்டிருந்தோம் அந்த போட்டியில் விராட் கோலி மிகச்சிறப்பாக விளையாடி கொண்டிருந்தார்.

நான் அவரது ஆட்டத்தை மெய் சிலிர்த்து பார்த்து கொண்டிருந்தேன், அதனால் களத்தில் இருக்கும் தோனியை நான் பார்க்கவில்லை கேப்டன் தோனியை பொறுத்த வரை ஒவ்வொரு பந்து வீசிய பிறகும் அவரை பார்க்க வேண்டும் வேறு எங்கும் வேடிக்கை பார்த்தால் அவருக்கு பிடிக்காது. நான் அன்றைய போட்டியில் விராட் கோலியின் பேட்டிங் செய்வதை வியந்து பார்த்து கொண்டிருந்ததால் தோனியை பார்க்க முடியவில்லை.

இதனால் தோனி என்னிடம் ‘போட்டியில் கவனத்துடன் ஈடுபாடுவாய் என்றால் களத்தில் இரு இல்லை என்றால் வெளியே போய் உட்காந்து கொள்’ என்று கூறினார் என தமிழக வீரர் ஜெகதீசன் தனக்கு நேர்ந்த சம்பவத்தை பகிர்ந்து கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here