நல்ல விளையாடினாலும் தமிழக வீரர் ஒருவருக்கும் இந்திய அணியில் இடமில்லையாம்… பிசிசிஐ தேர்வு குழுவுக்கு திமிரை பார்த்தீங்களா…

0
Follow on Google News

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி அமெரிக்காவில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்தப் போட்டி ஜூன் 29-ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸில் உள்ள பார்படாஸ் நகரில் நிறைவுபெறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. இந்த உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் தொடரை நடத்தும் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதுகின்றன. 

இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணி இம்மாத இறுதியில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடப்பு ஐபிஎல் தொடரைப் பொறுத்த இந்திய அணியின் வீரர்கள் தேர்வு இருக்கும் என்பதால் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட ஆர்வம் காட்டிவருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்திய அணி தேர்வாளர்கள் பெரும்பாலான ஐபிஎல் போட்டிகளை நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள். 

இதனால் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யார் யார் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.  இந்நிலையில் இந்திய அணியின் பெரும்பாலான இடங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், விக்கெட் கீப்பருக்கான போட்டி மட்டும் தொடர்ந்து வருகிறது. இதில் சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த், கேஎல் ராகுல் மற்றும் இஷான் கிஷான் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 

இதனால் இவர்களில் யார் இந்திய அணியில் இடம்பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டுவரும் நிலையில், தற்போது அந்த போட்டியில் ஆச்சரியப்படும் வகையில் தமிழக  வீரர் தினேஷ் கார்த்திக்கும் இணைந்துள்ளார்.  நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் தினேஷ் கார்த்திக் ஒவ்வொரு போட்டியிலும் அதிரடியாக விளையாடி ரன்களை குவிப்பதுடன், சிறந்த ஃபினிஷராகவும் வளம்வருகிறார். 

இந்நிலையில், டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி பயணிக்கும் விமானத்தில் இடம்பிடிக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என தமிழக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.  இந்நிலையில் டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கான இந்திய அணியை இறுதி செய்வதற்கு முன்னதாக, பிசிசிஐ மும்பையில் ரோஹித் சர்மா, ராகுல் டிராவிட் மற்றும் அஜித் அகர்கர் ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடத்தியது. 

பல்வேறு நிலைகள் குறித்து பரிசீலனை செய்யப்பட்டனர். அதில், தினேஷ் கார்த்திக்கை சேர்க்க முடியாது, என தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இந்தியாவுக்காக விளையாட போராடி வருகிறார்.  2019 உலகக் கோப்பையில் சுமாராக விளையாடியதால் கழற்றி விடப்பட்ட அவர் வர்ணனையாளராக மாறினார். 

அதனால் கேரியர் முடிந்ததாக கருதப்பட்ட 2022 சீசனில் பெங்களூரு அணியில் 330 ரன்களை 183 ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கியதால் மீண்டும் இந்தியாவுக்காக தேர்வானார். ஆனால் மீண்டும் 2022 டி20 உலகக் கோப்பையில் தாக்கத்தை ஏற்படுத்தாத அவரை அத்தோடு இந்திய அணி நிர்வாகம் கழற்றி விட்டது. அந்த சூழ்நிலையில் மீண்டும் தற்போதைய ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக மிரட்டும் தினேஷ் கார்த்திக் 7 போட்டிகளில் 226 ரன்களை 205.45 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வாங்கி வருகிறார். அதனால் இந்தியாவுக்காக அவர் உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் திட்டவட்டமாக தமிழக வீரர் தினேஷ் கார்த்தியை எடுக்க முடியாது என்பதில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் தமிழக வீரர் நடராஜன் தற்போது நல்ல பார்மில் இருந்தாலும் அவருக்கும் இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக்கும் இந்திய அணியில் மறுக்கப்பட்டுள்ளது, தொடர்ந்து தமிழக வீரர் சிறப்பாக விளையாடினாலும் திட்டமிட்டு இந்திய அணியில் புறக்கணிக்கப்படுகிறார்களா.? என்கிற விவாதம் நடந்து வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here