நடராஜனுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு… இவரை தூக்கிட்டு நடராஜனை சேர்க்க வேண்டும்…என்ன செய்ய போகிறது பிபிசிஐ…

0
Follow on Google News

டி20 உலகக் கோப்பை 2024 இன்னும் ஒரு மாதத்தில் தொடங்குகிறது. ஜூன் 2 ஆம் தேதி தொடங்கும் இந்த தொடரில் இந்தியா தனது முதல் போட்டியை ஜூன் 5 ஆம் தேதி அயர்லாந்துக்கு எதிராக விளையாடுகிறது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த மெகா கிரிக்கெட் திருவிழாவில் மொத்தம் 55 போட்டிகள் நடக்க உள்ளன. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்தது.

இந்திய அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாகவும், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக இருக்கும் ஹர்திக் பாண்டியா துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர 3வது வீரராக களமிறங்க விராட் கோலி, யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 4வது வரிசைக்கு சூர்யகுமார் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பந்த், சஞ்சு சாம்ஸனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இஷாந்த் கிஷன், கே.எல்.ராகுல், சுப்மான் கில், ரிங்கு சிங், திலக் வர்மா, ருத்ராஜ் மற்றும் நடராஜன் ஆகியோர் இல்லாதது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட அந்த விநாடியே, இந்தியா முழுவதும் அதுகுறித்த விவாதங்கள் தொடங்கிவிட்டன. இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது நடராஜன், சன்ரைசர்ஸ் அணிக்காக 7 போட்டிகளில் ஆடி 13 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

அவர் ஓவருக்கு சராசரியாக 9 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார்.அதேநேரத்தில், உலகக்கோப்பைக்கான அணியில் தேர்வாகியுள்ள முகமது சிராஜ் 9 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளார்.
ஓவருக்கு சராசரியாக 9.50 ரன்களை அவர் விட்டுக் கொடுத்துள்ளார். அணியில் தேர்வாகியுள்ள மற்றொரு வேகப்பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங் 9 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அவரது எகானமி ரேட் 9.68. ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே நடராஜனை விட சிறப்பாக செயல்பட்ட வேகப்பந்துவீச்சாளர் என்று ஐ.பி.எல். புள்ளிவிவரம் கூறியது. அவர் 10 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் தனது ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கையை 15ஆக உயர்த்திக் கொண்டுள்ள நடராஜன், அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளருக்கான நீலத் தொப்பியை வசப்படுத்தியுள்ளார்.

நடப்பு ஐ.பிஎல்லில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படும் நடராஜனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காதது அதிர்ச்சி அளிப்பதாகவே ரசிகர்கள் ஆதங்கப்பட்டனர். கிரிக்கெட் வர்ணனையாளர்கள், நிபுணர்கள், ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டு அமைச்சர் ஒருவருமே இதற்கு நேரடியாக கருத்துப் பகிர்ந்தார். சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேசும்போது, நடராஜன் யார்க்கர் சூப்பராக வீசுவதாக பாராட்டியுள்ளார்.

அவரை 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். மே 15 ஆம் தேதி வரை இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் அணியில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய ஐசிசி அனுமதி அளித்திருக்கிறது. அதனால் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா மனது வைத்தால் அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக நடராஜனை 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திறமை இருந்தும், நல்ல பார்மில் நடராஜனை இந்தியா அணியில் சேர்க்காதது மிக பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ள நிலையில், மோசமாக பார்மில் இருக்கும் அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக நடராஜனை 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் சேர்ப்பது குறித்து பிசிசிஐ பரிசீலனை செய்தால் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்க படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here