ரோகித் சர்மாவை அசிங்கப்படுத்திய ஹர்திக் பாண்டியா…. மும்பை அணியில் ரோஹித்க்கு விளையாட வாய்ப்பில்லை..

0
Follow on Google News

ஐபிஎல் தொடரின் 51 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. மும்பையில் நடைபெற்ற இந்த போட்டியில் மும்பை அணியின் மூத்த வீரர் ரோஹித் சர்மா இம்பாக்ட் பிளேயர் ஆக மட்டுமே சேர்க்கப்பட்டிருந்தார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை இழிவு செயல்படுத்தும் விதமாக இம்பேக்ட் பிளேயர் ஆக கொண்டு வந்தது அவரது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ரோகித் சர்மாவின் ரசிகர்கள் பலர் இதற்கு ஹர்திக் பாண்டியா தான் காரணம் என்று கொந்தளித்து வருகின்றனர். மும்பை வான்கடே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி இடையேயான 51வது லீக் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

இதனால் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரண்களை குவித்திருந்தது. அதன் பின், 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி எல்லா விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 145 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியிருந்தது. இந்த போட்டியில் மும்பை அணி தோல்வியை சந்தித்ததற்கு முக்கிய காரணம் ஹர்திக் பாண்டியா எடுத்த முடிவு தான் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.

ஏனெனில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் அனுபவம் வாய்ந்த வீரரான முகமது நபி அணியில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார். அவருக்கு பதிலாக நான் திரு என்ற இளம் வீரர் மும்பை அணியில் சேர்க்கப்பட்டார். அதே சமயம், மும்பை அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா இந்த போட்டியில் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை. மாறாக ரோகித் சர்மாவின் பெயர் இம்பேக்ட் பிளேயர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது.

இது ஒட்டுமொத்த மும்பை அணி ரசிகர்களையும் அதிர்ச்சி அடையச் செய்தது. ஏனெனில், ரோஹித் சர்மா மிகவும் அனுபவம் வாய்ந்தவர் மற்றும் மூத்த வீரர்களிலும் ஒருவர். சிறந்த தொடக்க ஆட்டக்காரராக அதிரடி காட்டும் ரோகித் சர்மா பல வருடங்களாக மும்பை எனின் கேப்டனாக செயல்பட்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஐபிஎல் தொடரில் 5 முறை மும்பை அணிக்கு கோப்பையை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

இவ்வளவு அனுபவம் மிக்க ரோகித் சர்மாவை தற்போதைய மும்பை அணியின் கேப்டன் ஹர்தீக் பாண்டியா, இம்பேக்ட் பிளேயர்களின் பட்டியலில் சேர்த்துள்ளார் என்பது ரசிகர்களை ஆத்திரமடையச் செய்துள்ளது.
அதுமட்டுமில்லாமல், 2024 ஐபிஎல் தொடரில் ஆரம்பத்தில் சில போட்டிகளில் வெற்றி பெற முடியாமல் திணறி வந்தது மும்பை இந்தியன்ஸ் அணி. ஹர்திக் பாண்டியாவின் மோசமான கேப்டன்சி தான் இதற்கு காரணம் என்று இணையம் முழுவதும் ரசிகர்கள் விமர்சித்து வந்தனர்.

அந்த சமயத்தில், ரோகித் சர்மா தான் தனது அனுபவத்தை வைத்து ஹர்திக் பாண்டியாவிற்கு கேப்டன்ஷியில் உதவி செய்து வந்தார்.ஆனால் நன்றி மறந்த ஹர்திக் பாண்டியா, ரோஹித் சர்மாவை 11 வீரர்கள் கொண்ட முக்கியமான பட்டியலில் இருந்து நீக்கி இருக்கிறார். ஏற்கனவே, ஹர்திக் பாண்டியா மீது பயங்கர கடுப்பில் இருந்த ரோகித் சர்மா ரசிகர்கள், தற்போது அவரது பெயரை இம்பேக்ட் பிளேயர் பட்டியலில் சேர்த்திருப்பதால் கடுமையாக ஹர்திக் பாண்டியாவை ரோஸ்ட் செய்து வருகின்றனர்.

தொடர்ந்து ஹர்திக் பாண்டியாவின் நடவடிக்கைகள் ரோகித் சர்மாவை அவமானப்படுத்தும் விதத்தில் இருந்து வருவதால், இதனால் ரோகித் சர்மா இமேஜ் மக்கள் டமேஜாக வாய்ப்பில்லை, மாறாக மக்கள் மத்தியில் ரோகித் சர்மாவுக்கு அனுதாபத்தையும், ஹர்திக் பாண்டியாவுக்கு எதிர்ப்பையும் தான் ஏற்படுத்தி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here