வசமாக சிக்கிய ஜோதிகா… இனிமேல் யாரும் சிவகுமார் குடும்பத்தில் வாயே திறக்க கூடாது…

0
Follow on Google News

தங்களை சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்களாக வெளிபடுத்தும் நட்சத்திர தம்பதியினர் சூர்யா – ஜோதிகா இருவரும், சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி கொள்வார்கள். தஞ்சை பெரிய கோவிலுக்கு செலவு செய்யும் பணத்தில் மருத்துவமனைக்கும் பள்ளிகளுக்கும் செலவு செய்யலாம் என மேடை ஒன்றில் பேசி கடும் எதிப்புகளுக்கு உள்ளனார் நடிகை ஜோதிகா.

அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்லும், சமூகத்தின் மீது அக்கறை கொண்ட இந்த குடும்பதிற்கு, ஊரே அட்வைஸ் செய்யும் வகையில் இருக்கும் இவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளும், கடந்த வருடம் சிவகுமார், சூர்யா மற்றும் குடும்பத்தினர் கீழடி அருங்காட்சியத்தில் உள்ளே சென்று பார்வையிடுவதால், அங்கே அருகாட்சியம் சென்று பார்வையிட வந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்படாமல், அருகாட்சியத்தின் நுழைவு வாயில் கேட் அடைக்கப்பட்டிருந்தது.

இதனால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் என பலரும் பல மணிநேரம் கடும் வெயிலில் காத்திருந்துள்ளனர். இந்த நிலையில் சிவகுமார் குடும்பம் கீழடி அருகாட்சியம் வந்த காரணத்தினால், தனி ஒரு குடும்பத்திற்காக மாணவர்களும் ,பொதுமக்களும் உள்ளே சென்ற சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியில் வரும் வரை கடும் வெயிலில் கால் கடுக்க காத்திருந்த நிகழ்வு சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக மக்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்து வந்தது குறிப்பிட்ட தக்கது.

மேலும் ஏழை மாணவர்களுக்கு அரசு பள்ளிகளில் கொண்டு வரப்படும் மும்மொழி கல்வியை எதிர்த்து நரம்பு புடைக்க பேசும் சூர்யா, அவருடைய இரண்டு குழந்தைகளும் மும்பையில் படிக்க வைப்பதின் மூலம் பல மொழிகளை கற்று கொண்டு அவர்களின் எதிர்காலமும் மிகவும் சிறப்பாக அமையும் என்கிற நோக்கில் சென்னையில் படித்து கொண்டிருந்த இரண்டு குழந்தைகளையும் மும்பையில் உலகம் தரம் வாய்த்த மிக பெரிய பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வருகிறார்கள் சூர்யா – ஜோதிகா தம்பதியினர்.

இந்நிலையில் இந்தி சினிமாவில் கவனம் செலுத்துவதற்காக இந்தி கற்று கொள்ள ஆர்வம் காட்டும் சூர்யா, குழந்தைகள் எதிர்காலம் கருதி பல மொழிகளை கற்று கொள்ள உலகம் தரம் வாய்த்த பள்ளியில் படிக்க வைக்கும் சூர்யா – ஜோதிகா தம்பதியினர், ஆனால் அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்கள் விருப்பப்பட்டு மூன்று மொழிகளை இலவசமாக படிக்க மத்திய அரசு ஒரு திட்டம் கொண்டு வந்தால், அதை எதிர்த்து பக்கம் பக்கமாக அறிக்கை விடுவார் சூர்யா.

இப்படி தொடர்ந்து சூர்யா மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சொல்வது ஒன்று செய்வது ஒன்று என நாளுக்கு நாள் அவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் நடந்து நாடாளுமன்ற தேர்தலில் குடும்பத்துடன் வாக்களிக்க வந்த சூர்யா உடன் ஜோதிகா மிஸ் ஆகி இருந்தார். எங்கடா ஜனநாயக கடமையாற்ற வேண்டிய சமூக போராளி, பெண்ணிய வாதி ஜோதிகா என, மக்கள் சல்லடை போட்டு தேட ஆரம்பித்தார்கள்.

அதில் ஜோதிகா வாக்களிக்க வராமல், நேப்பாள் நாட்டில் இன்ப சுற்றுலா சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து முதலில் உங்க குடும்பத்தில் இருப்பவர்கள் ஜனநாயக கடமையை செய்யுங்கள், பின்பு ஊருக்கு உபதேசம் செய்யலாம் என சூர்யா குடும்பத்தினர் ரவுண்டு கட்டி பலரும் விமர்சனம் செய்து வந்த நிலையில், தற்பொழுது ஏன் வாக்களிக்க வரவில்லை என எல்லாரும் அசந்து போகும் வகையில் ஜோதிகா பேட்டி கொடுத்துள்ளார்.

அதில், நான் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிப்பேன். சில நேரங்களில் வேலை காரணமாக வெளியூர்களில் இருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. சில தனிப்பட்ட காரணங்களால் ஊரில் இருக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. அதுபோன்ற காரணங்களுக்கும் முக்கியத்துவம் தர வேண்டியதாக உள்ளது என ஜோதிகா பதிலளித்துள்ளார். இதற்கு, நீங்க ஓட்டு போடுங்க, போடமா போங்க, ஆனால், இனிமேல் மேடையில் மைக்கை பிடித்து கொண்டு ஊருக்குள் மட்டும் உங்க குடும்பத்தில் யாரும் உபதேசம் செய்ய கூடாது என மக்கள் ஜோதிகாவை வறுத்து எடுத்து வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.