மாணவியை கட்டிப்போட்டு மாணவர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம்..! சென்னையில் நடந்த கொடூரம்..

0

சென்னை : தமிழகத்தில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் மாநில சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போயிருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. சமீப நாட்களாக செயன்பறிப்பு,கற்பழிப்பு மற்றும் கொலை அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிலும் பல குற்றச்செயல்களில் பள்ளி மாணவர்களே ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை உண்டுபண்ணியுள்ளது.

அதேபோல ஒரு சம்பவம் சென்னையில் நடைபெற்றுள்ளது. எட்டாம்வகுப்பு மாணவியை நான்கு மாணவர்கள் கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் சென்னையையே உலுக்கியுள்ளது. சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள். முதல் மகளுக்கு 15 வயதும் இரண்டாவது சிறுமிக்கு 13 வயதும் மூன்றாவது சிறுமிக்கு 11 வயதும் ஆகிறது.

இவர்களின் அம்மா சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்துவருகிறார். இவரின் இரண்டாவது மகள் அதேபகுதியில் உள்ள ஒரு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவருகிறார்.அவருடன் பயிலும் சக எட்டாம்வகுப்பு மாணவர்கள் அடிக்கடி மாணவியின் வீட்டிற்கு படிக்க செல்வதை வழக்கமாக கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

இதனிடையே சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நான்கு மாணவர்கள் அந்த சிறுமியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அதையடுத்து நோட்டம்விட்ட அவர்கள் கதவை பூட்டியுள்ளனர். மேலும் அந்த நான்கு மாணவர்களும் சேர்ந்து மாணவியின் ஆடையை அவிழ்த்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் வெளியே சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளனர்.

இதில் பயந்துபோன அந்த சிறுமி யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். தொடர் மனஉளைச்சல் காரணமாக தனது தாயிடம் நடந்ததை கூறி கதறி அழுதிருக்கிறார். இதில் பெரும் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் போலீசாரிடம் புகாரளித்தார். அதையடுத்து கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் நான்குபேரும் விசாரணைக்கு பிறகு நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.