மாட்டிறைச்சி பிரியாணி தடை.. களத்தில் இறங்கிய பட்டியல் ஆணையம்..! நெருக்கடியில் தமிழக அரசு..

0
Follow on Google News

வேலூர் : வேலூர் மாவட்டம் ஆம்பூரில் ஆம்பூர் பிரியாணி திருவிழா தனியார் அமைப்புகளால் நடத்தப்பட இருந்த நிலையில் மழையை காரணம் காட்டி மாவட்ட ஆட்சியர் ஆம்பூர் பிரியாணி விழாவிற்கு தடை விதித்தார். அதைத்தொடர்ந்து தமிழகத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

மேலும் பிரியாணி பண்டிகையில் மாட்டிறைச்சியை நீக்கியதற்காக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. மே 12 முதல் 15 வரை நடைபெற இருந்த ஆம்பூர் பிரியாணி திருவிழா மாட்டிறைச்சி காரணமாக தடைவிதிக்கப்பட்டிருப்பதால் பல அரசியல் கட்சிகள் திமுகவுக்கு எதிராக குரல்கொடுக்க தொடங்கியுள்ளன.

தமிழகம் முழுவதும் உள்ள பிரியாணி விற்பனையாளர்கள் மாநிலம் முழுவதும் விற்பனையாகிக்கொண்டிருக்கும் ஆம்பூர் பிரியாணிக்கு புவிசார் குறியீடு கிடைக்கும் என எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில் 20க்கும் மேற்பட்ட கோழிக்கறி மீன் உள்ளிட்ட பிரியாணிக்கடைகளை காட்சிப்படுத்த அனுமதியளித்த மாவட்ட நிர்வாகம் மாட்டிறைச்சிக்கு மட்டும் தடைவிதித்தது.

இதையடுத்து இந்த சர்ச்சையை விசாரிக்க முடிவு செய்த பழங்குடியின ஆணையம் ” இதை ஏ வகுப்புவாத அடைப்படையில் பாரபட்சமாக செயல் பட்டதாக எடுத்துக்கொள்ள கூடாது. இதுகுறித்த விளக்கங்களை உங்கள் கருத்துக்களை நீங்கள் சமர்ப்பிக்கவேண்டும். இந்த உத்தியோகபூர்வ பாரபட்சத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்” என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வஹாவுக்கு ஆணையம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

திமுகவின் தோழமை சுட்டுதல் கட்சிகளான விடுதலைச்சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளரான வன்னியரசு ” உணவில் பாகுபாடு காட்டக்கூடாது. இந்த செயல் முதல்வர் முக ஸ்டாலினின் கருத்து எதிரானது. 75 சதவிகிதம் பேர் சாப்பிடும் மாட்டிறைச்சியை பிரியாணி திருவிழாவில் கண்டிப்பாக சேர்க்கவேண்டும்” என கூறியுள்ளார்.