சூர்யாவை ஓட ஓட விரட்டிய பாலா… டார்ச்சர் தங்க முடியாமல் சூர்யா என்ன செய்தார் தெரியுமா.?

0

சமீபத்தில மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்த இயக்குனர் பாலா தனது முழு கவனத்தையும் சினிமாவில் செலுத்த தொடங்கியுள்ளார். பாலா இயக்கத்தில் கடைசியாக வெளியான சுமார் மூன்று படங்கள் சரிவர போகவில்லை என்பதால் அவரது ரசிகர்களுக்கு மிக பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. இதற்கு காரணம் பாலா, அவருக்கும் மனைவிக்கு ஏற்பட்டு வந்த பிரச்சனையின் காரணமாக சினிமாவில் தனது முழு கவனத்தை செலுத்த முடியாமல் போனது தான் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் மனைவியை விவாகரத்து பெற்று பிரிந்த பின்பு சேது படத்தில் இருந்த பாலா போன்று எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் தெளிவாக புதிய படத்துக்கான வேலையை தொடங்கினார் பாலா. புதிய படத்தில் நடிகர் சூர்யா , ஜோதிகா இருவரும் நடிக்கின்றனர். இந்த படத்தை சூர்யா , ஜோதிகாவுக்கு சொந்தமான 2D இண்டர்நஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதர்க்கு முன்பே, இயக்குனர் பாலாவின் உதவி இயக்குனராக சூரரை போற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கராவை நியமித்தார் சூர்யா. காரணம் பாலா சில நேரங்களில் நடிகர்களிடம் மிக கொடூரமாக நடந்து கொள்வார். இதை தடுக்கவும், மேலும் பாலாவிடம் நேரடியாக சொல்ல தயங்கும் விசயங்களை சுதா கொங்கரா மூலம் தெரிவிக்கலாம் என்று சூர்யா எடுத்த முடிவு தான் இது. இதில் பாலாவுக்கு விருப்பம் இல்லை என்றாலும் எதோ ஒரு காரணத்துக்காக ஒப்பு கொண்டார்.

படப்பிடிப்பு தொடர்ந்து கன்னியகுமாரியில் நடந்து வந்த நிலையில்,சுதா கொக்கரா மூலம் படத்தில் சில மாற்றங்களை செய்ய பாலாவுக்கு பரிந்துரை செய்துள்ளார் சூர்யா, இதனால் சூர்யா மீது சிறு சிறு அதிருப்தியில் இருந்து வந்துள்ளார் பாலா. இருந்தும் நந்தா, பிதாமகன் படத்தில் இருந்த சூர்யா வேறு தற்பொழுது இருக்கும் அவரது உயரம் வேறு என்பதை புரிந்து கொண்டு கடுமையாக நடந்து கொள்ளாமல், கோபத்தை கட்டுக்குள் வைத்து கொண்டு படப்பிடிப்பை நடத்தி வந்துள்ளார் பாலா.

இதுவரை பாலா இயக்கிய படங்களில் யாருடைய தலையீடு இல்லாமல் பாலா என்ன சொல்கிறார், அதை கேட்டு நடித்து கொடுத்துவிட்டு செல்வார்கள் நடிகர்கள். ஆனால் இந்த படத்தில் சூர்யாவின் தலையீடு அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில், சுதா கொங்கரா இல்லை, அடுத்து அவர் இயக்கம் சூரரை போற்று ஹிந்தி படத்தின் வேலை காரணமாக அவர் முன்பை புறப்பட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சூர்யா ஓடுவது போன்று காட்சிகளை படமாக்கி கொண்டிருந்தார் பாலா. தற்பொழுது சித்திரை மதம் அக்னி வெயில், கன்னியாகுமரியில் படு பயங்கரமாக வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. இதில் காலை தொடங்கிய சூர்யா ஓடும் கட்சியின் படப்பிடிப்பு. தொடர்ந்து மதியம் வரை நடைபெற்று வந்துள்ளது. பாலா தொடர்ந்து சூர்யாவை ஓட விட்டு கொண்டே அந்த ஒரே கட்சியை மீண்டும் மீண்டும் எடுத்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் சோர்வான சூர்யா, இதற்கு மேல் ஓட முடியாது என்பதால் பாலா தன் மீது உள்ள கோபத்தை சுதா கொங்கரா இல்லாத நேரத்தில் பயன்படுத்தி கொள்கிறார் என்பதை அறிந்து பேக் அப் என தெறித்து விட்டு படப்பிடிப்பு முடியும் முன்பே அங்கிருந்து புறப்பட்டு சென்னை சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மீதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு பாலா – சூர்யா இடையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் சுதா கொங்கரா.

தான் மும்பையில் புதிய படத்திற்கான வேலைகளில் இருப்பதால், தனது இரண்டு மகள்களும் நான் செய்ய வேண்டிய வேலைகளை செய்வார்கள் என சூர்யாவிடம் தெரிவித்துள்ளார் சுதா கொங்கரா, இதற்கு சூர்யா வேண்டாம் நீங்கள் வந்து இந்த படத்தை உடன் இருந்து முடித்து விட்டு போங்க. பாலா அண்ணன் டார்ச்சர் என்னால் தங்க முடியாது, என்னால் அவரிடம் சண்டையும் போட முடியாது, நீங்க இல்லாமல் படப்பிடிப்பு நடத்த வேண்டாம் என சூர்யா தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பலாவிடமும் பேசிய சுதா கொங்கரா இருவரையும் சமரசம் செய்து அடுத்த கட்ட படப்பிடிப்புக்கான வேலைகளை தொடங்க செல்லி வலியுறுத்தியுள்ளார். தானே இருந்து அடுத்து பாலா- சூர்யா இடையில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் படத்தை முடித்து தருவதாக உறுதியளித்துள்ளார் சுதா கொங்கரா என கூறப்படும் நிலையில் விரைவில் இந்த படத்துக்கான அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

தமிழில் இளிச்சவாயனிடம் வெச்சுக்க… எங்ககிட்ட வேண்டாம்.. ஷங்கரை எச்சரித்த தயாரிப்பாளர்.! எதற்கு தெரியுமா.?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here